வாழ்க்கையை கொண்டாட்டமாக்குதல்
1981 ம் ஆண்டு முதல் சுவாசம், தியானம் மற்றும் யோக வகுப்புகளின் மூலம் நல்வாழ்வை பேணுகின்றோம்
இதற்கான தீர்வைக் காணலாம்...
ஓர் உலகளாவிய இயக்கம்...
- 44 வருட பாரம்பரியம்
- 180 நாடுகளில் 10,000+ மையங்கள்
- 80+ கோடி வாழ்க்கைகளைத் தொட்டிருக்கிறோம்
தியான வகுப்புகள்
தியானம் என்பது ஒன்றும் செய்யாமலிருக்கும் ஒரு நுட்பமான கலை
This Diwali
Gift Happiness
Don't just give your loved ones material gifts!
Gift them Happiness!
Gift them the Sudarshan Kriya™ !
Gift them the Sudarshan Kriya™
Show me howThis Diwali
Gift Happiness
Don't just give your loved ones material gifts!
Gift them Happiness!
Gift them the Sudarshan Kriya™!
Gift them the Sudarshan Kriya™
Show me howPan IndiaHappiness Program
Anand Utsav
Exclusive ● Live Session with Gurudev Sri Sri Ravi Shankar
Learn Sudarshan Kriya™ Online / In-Person
Starting 13th August 2024
வாழ்க்கையை மாற்றும்

உங்கள் பதற்றத்தை 44% குறைக்கக்கூடிய எளிதான சுவாசப் பயிற்சி

சுதர்சன கிரியா உடலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது

World Happiness Day
Global Happiness Program
- Live sessions with Gurudev!
- Learn Sudarshan Kriya™ - the world’s most powerful breathing technique.Loved and practiced by 4.5+ crore people around the globe.
- Join Gurudev LIVE on March 20 on the Sattva App!
March 17-23, 2025
யோகா வகுப்புகள்
உடல் மற்றும் மனத்தின் ஒன்றிணைப்பே யோகமாகும்.
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் சுவாச நுட்பம்
சுதர்சன கிரியா™
வாழும் கலை பயிற்சிகளின் ஆதாரமாக விளங்கும் சுதர்சன கிரியா™ உலகெங்கிலும் பல லட்சம் மக்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், சிறந்த ஓய்வைப் பெறவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் உதவியுள்ளது. நான்கு கண்டங்களில் (ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைகழகங்கள் உட்பட) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், சக அறிஞர்களால் மதிப்பிடப்பட்டு ஆய்விதழ்களில் வெளியான முடிவுகளும், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை குறைப்பதிலிருந்து, வாழ்க்கையில் திருப்தியை அதிகரிப்பது வரை பல விரிவான பலன்களை உறுதி செய்துள்ளன.
என் ஆற்றல் நிலைகள் அதிகரித்தன, மிக முக்கியமாக, என்னுடைய உடலில் இருந்து எதிர்மறையை வெளியேற்றக்கூடிய ஒரு பயிற்சி எனக்குக் கிடைத்தது. மன அழுத்தம் நிறைந்த நாட்களில் அதிலிருந்து விடுபட நான் சுதர்சன கிரியாவை முழுமையாக நம்பியிருக்க முடியும்.

ஷஷாங்க் தீட்சித், 40
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர்
சிறந்த விஷயம் என்னவென்றால், குறுகிய காலத்தில் என்னால் அதிகமாக சாதிக்கவும், விரும்பியதை செய்யவும் முடிகிறது. என் வேலையில் கவனம் செலுத்தவும், திட்டப்பணிகளை மேற்கொள்ளவும் முடிகிறது, நான் நீச்சல், இசை மேலும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன் !

அமன் கே லோஹியா, 35
மென்பொருள் தொழில்நிபுணர்
சுதர்சன கிரியாவுக்குப் பிறகு, எனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. உதாரணமாக, நிகழ்வுகளை திட்டமிடுவதிலும் ஒருங்கிணைப்பதிலும் எனது திறமை மேம்பட்டுள்ளது. இது பல்வேறு வகையான மனிதர்களையும், சூழ்நிலைகளையும் சமாளிக்க எனக்கு உதவியது.

சௌரப் பால்
பொறியியலாளர் மற்றும் தபேலா இசைக்கலைஞர்
சோகமாக இருப்பது சாதாரணமானது என்று நான் நினைத்தேன், ஆனால் சுதர்சன கிரியாவை பயிற்சி செய்ததிலிருந்து என் பெயர் “குஷி” (மகிழ்ச்சி) என்று மாற்றப்பட்டுள்ளது. இப்போது மகிழ்ச்சி என்பது என் வாழ்க்கை முறை ஆகிவிட்டது.

சைலஜா, 37
பயிற்சியாளர், தகவல் தொழில்நுட்ப நிபுணர்
நிறுவனர், வாழும் கலை
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உலகளாவிய மனிதநேயரும், ஆன்மீகத் தலைவரும், அமைதித் தூதுவரும் ஆவார். மனநலம் மற்றும் நல்வாழ்வின் மூலம் தனிநபர் மற்றும் சமூக மாற்றத்திற்கான குருதேவரின் தொலைநோக்குப் பார்வை, 180 நாடுகளில் உலகளாவிய இயக்கத்தைத் தூண்டி, 800 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது.
நான் பயிற்சியில் சேர விரும்புகிறேன், ஆனால்…
தியானம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது அல்லவா?
தியானம் நம் வாழ்வில் கொண்டுவரும் நன்மைகளைப் பார்த்தால், அது மிகவும் தேவையானது என்று உணர்வீர்கள். பண்டைய நாட்களில் தியானம் என்பது தன்னை அறிவதற்கான வழியாக, ஞானத்தை அடைவதற்கான வழியாக இருந்தது. துக்கத்தையும் பிரச்சினைகளையும் வெல்லும் வழி தியானம். நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வழியும் கூட.
ஞானம் அடைவதை ஒரு புறம் வைத்து விட்டால்கூட, இன்றைய உலகின் அழுத்தத்திற்கும் பதற்றத்திற்கும் தியானம் தேவைப்படுகிறது. நீங்கள் அதிகப் பொறுப்பெடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தியானம் அதிகம் தேவைப்படுகிறது. பொறுப்புகளும், லட்சியங்களும் எவ்வளவு அதிகமாக இருக்கின்றனவோ, தியானத்தின் தேவையும் அவ்வளவு அதிகம்.
ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தால், தியானம் அவ்வளவு தேவைப்படாது. எவ்வளவுக்கெவ்வளவு வேலையில் ஆழ்ந்திருக்கிறீர்களோ, எவ்வளவுக்கெவ்வளவு நேரம் குறைவாக உள்ளதோ, எவ்வளவுக்கெவ்வளவு லட்சியங்கள் உள்ளனவோ - அவ்வளவுக்கவ்வளவு தியானம் தேவை. அழுத்தத்தையும் சோர்வையும் தணிப்பதோடு கூட தியானம் உங்கள் திறமையை அதிகரிக்கிறது, மனத்தையும், நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது. அழுத்தத்தையும், பதற்றத்தையும் நீக்குவதோடல்லாமல், தியானம் உடலிலிருந்து நச்சுப்பொருட்களை அகற்றி, மனத்தை அமைதிப்படுத்தி, உங்களை மேலும் திறமையுள்ளவராக ஆக்குகிறது. எல்லா விதத்திலும் உங்களை மேம்படுத்துகிறது. வேறென்ன வேண்டும் உங்களுக்கு? ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் தியானம் செய்யுங்கள்.
என்னால் உடலை வளைக்க முடியாதே?
வாழும் கலையின் பயிற்சிகளின் பலனைப் பெற நீங்கள் ஒன்றும் தலைகீழாக நிற்க வேண்டாம்.
எங்கள் வகுப்பில் கற்றுத்தரப்படும் சுவாச மற்றும் தியான நுட்பங்களுக்கு எந்த விதமான சிறப்பு உடல் திறனும் தேவையில்லை. உலகம் முழுதும் ஐந்து வயது முதல் தொண்ணூறு வயது வரையான பல லட்சக்கணக்கான மக்கள் இப்பயிற்சிகளை செய்கிறார்கள்.
எனக்கு இப்போது நிறைய வேலை இருக்கிறது, நேரம் இல்லை.
இப்போது பிஸியாக இருக்கிறீர்களா? அப்படியானால், மகிச்சியாக எப்போது இருக்கப் போகிறீர்கள்? ஆனந்தம் என்பது இக்கணத்திலேயே உள்ளது. ஆனால், நம் மனம் கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருப்பதை காண்கிறோம். கடந்த காலத்தில் நடந்த ஏதோவொன்றை குறித்து வருத்தம் அல்லது கோபம் கொள்கிறோம். அல்லது என்ன நடக்க போகிறதோ என்பதைக் குறித்துக் கவலை கொள்கிறோம். உங்கள் மனதை கவனியுங்கள்.
மனத்தை கவனித்தால், நல்ல விஷயங்களை நாம் தள்ளிப்போடுகிறோம், ஆனால் எதிர்மறையான விஷயங்களை தள்ளிப்போடுவதே இல்லை என்பதை உணர்வீர்கள். “நான் கோபத்தை ஒத்திப்போடுகிறேன்,” என்று ஒருபோதும் சொல்லமாட்டீர்கள்.
வரபோக்கும் ஏதோ ஒரு முழுமையான நாளுக்கு உங்கள் மகிழ்ச்சியைத் தள்ளிப் போடுகிறீர்கள், அனால் அந்த நாள் வருவதே இல்லை. வாழ்க்கையை இன்று நீங்கள் வாழ்ந்தால், நாளை தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும். இதுவே வாழும் கலை.
இந்த பயிற்சி வகுப்புகளை வடிவமைத்தவர் யார்?
உலகளாவிய மனித நேயராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இன்று அறியப்படும் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 1982 வில் இந்தியாவின் ஷிமோகாவில் 10 நாட்கள் மௌனத்தில் இருந்தபோது தோன்றியதுதான் சுதர்சன க்ரியா™. அவர் சொல்கிறார்:“நான் ஏற்கனவே உலகம் முழுதும் பயணம் செய்திருந்தேன். யோகாவும் தியானமும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மக்களுக்கு உதவுவது எப்படி என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு குறை இருப்பது போல் உணர்ந்தேன். மக்கள் பல பயிற்சிகளை செய்துகொண்டிருந்தாலும், அவர்களின் வாழ்க்கை பல கோணங்களில் பிரிந்திருந்தது; மேலும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் வேறு ஒருவராக இருந்தார்கள். எனவே, உள்ளார்ந்த அமைதிக்கும் வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை எவ்வாறு இணைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
10 நாட்கள் மௌனத்தில் இருந்த காலகட்டத்தில், சுதர்சன க்ரியா™ ஒரு உத்வேகமான உள்ளுணர்வாக எழுந்தது. எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பது இயற்கைக்குத் தெரியும். மௌனத்திலிருந்து வெளிவந்தவுடன், எனக்குத் தெரிந்ததை கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். மக்களுக்கு சிறந்த அனுபவங்கள் கிடைத்தன.” ~ குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அன்று முதல் சுதர்சன க்ரியா™ என்னும் சக்தி வாய்ந்த, தாளகதியில் அமைந்த, சுவாச நுட்பம் வாழும் கலையின் அனைத்து பயிற்சிகளின் அடித்தளமாக உள்ளது. முதல் பயிற்சி வகுப்பு குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் ஷிமோகாவில் நடத்தப்பட்டது. குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பழமையான ஞானத்தை இன்றைய நவீன யுகத்திற்கு நடைமுறைப்படுத்தி அளித்திருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில், பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் யோகா, தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.எவ்வளவு விரைவில் பலன்கள் தெரியத் தொடங்கும்?
சுதர்சன க்ரியா™ என்னும் நுட்பமே வாழும் கலையின் அனைத்து பயிற்சி வகுப்புகளின் அடித்தளமாகும். ‘சுதர்சன்’ என்றால் நான் யார் என்பதைக் குறித்த சரியான தரிசனம். ‘க்ரியா’ என்றால் தூய்மைப்படுத்தும் செயல். இது மனதுக்கு ஆழ்ந்த அமைதியை அளித்து, உடலின் ஒவ்வொரு கலங்களையும் ஆற்றலால் உயிர்த்துடிப்புடன் வைக்கிறது. இந்த தூய்மைப்படுத்தும் நடைமுறை அழுத்தத்தை சக்திவாய்ந்த முறையில் தணிக்கிறது. முதல்முறைப் பயிற்சியின் போதே, ஒரே மணி நேரத்தில், ஆற்றலும், மனமும், பிராண வாயுவும் உங்கள் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி, மிக ஆழமான மட்டத்தில் எப்படி தூய்மைப்படுத்துகின்றன என்பதைக் உணர்வீர்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் தூய்மையடைகிறது, ஆற்றல் பெறுகிறது, பிராணவாயுவைப் அதிகமாக பெறுகிறது. ஒரு எதிர்மறை எண்ணம் எப்படி எழுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? எதிர்மறை எண்ணத்தின் மூலத்தை கவனித்தால், அது அழுத்தத்திலிருந்தும், பதற்றத்திலிருந்தும் வருகின்றது என்பதைக் காண்பீர்கள். நிம்மதியான, மகிழ்ச்சியான ஒருவருக்கு எதிர்மறை எண்ணங்கள் வருவதில்லை. நேர்மறை எண்ணத்தால் மனதில் எழும் எதிர்மறை எண்ணத்தை அழிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, சுவாசத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் உங்களுள் ஆழ்ந்து சென்று, முழு அமைப்பையும் தூய்மைப்படுத்துங்கள். மூலக்காரணத்திற்கு செல்லுங்கள், அதை நீக்குங்கள், எதிர்மறைத்தன்மையை வேரோடு களையுங்கள். இதற்கு அதிக நேரம் பிடிப்பதில்லை. குறிப்பாக, சுதர்சன க்ரியா™ மூலம் இது உடனே நடக்கும். இரண்டு நாட்கள், தினமும் ஒரு மணி நேரப் பயிற்சியே உடலை சுத்திகரித்து, உங்களை மிக லேசாக உணரவைக்கும்.நீங்கள் ஏன் கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
வாழும் கலை பயிற்சி வகுப்புகளின் கட்டணம் அதிகம் இல்லை. பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ய செலவாகிறது. தன்னார்வலர்கள் மண்டபத்தை வாடகைக்கு எடுக்கவேண்டியிருக்கிறது. தேவையான பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது. வகுப்புக்கான நன்கொடையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதற்கான செலவுகளுக்குப் பயன்படுகிறது. எஞ்சியத் தொகை இந்தியா முழுதும் மேற்கொள்ளப்படும் சேவைப் பணிகளுக்கு செல்கிறது.
மேலும், வகுப்புகளை இலவசமாக அளித்தால், அதன் மதிப்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அமர்ந்து கற்றுக்கொள்வதற்கான பொறுப்பை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவம்
அக்கறை கொள்கிறோம், பகிர்கிறோம்
வாழும் கலையின் சமூகத் தாக்கம்
வலுவான வேர்கள், விரிந்த பார்வை, மனிதகுலத்திற்கு சேவை என்பதே வாழும் கலையின் அடிப்படைக் கொள்கையாகும். சிறார் கல்வி முதல் நதிகளின் புத்துயிர்ப்பு வரை, பூச்சிகொல்லிகள் இல்லா விவசாயம் முதல் நெறிசார்ந்த வணிகம் வரை, முரண்பாடுகளையும், மோதல்களையும் களைதல் முதல் பேரிடர் நிவாரணம் வரை - மனிதகுலத்திற்கு சேவை செய்ய இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வாழும் கலை ஒரு தளமாகத் திகழ்கிறது.
ஞானம்
அன்புடன் சேர்ந்த ஞானமே ஆனந்தம். அன்பு இல்லாத ஞானம் துன்பமே.