வாழும் கலை முதல் நிலைப் பயிற்சி முடித்தவர்களும், யெஸ் பயிற்சி முடித்தவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் உள்ள வாழும் கலை அமைப்பின் மையங்கள், வாரா வாரம் இந்தத் தொடர் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. இந்த இலவச த்தொடர் பயிற்சி வகுப்பினை வாழும் கலை வகுப்பின் ஏதேனும் ஒரு ஆசிரியர் நடத்துவார். இந்த தொடர் பயிற்சி வகுப்புகளில் (பாலோ அப் வகுப்புகளில்) மூச்சுப் பயிற்சிகளின் மூலம், உடன் பங்கேற்பவர்களுடன் இணைந்து அனுபவங்களைப் புதுப்பித்துக்கொள்ளலாம்; வீட்டில் எப்படியெல்லாம் பயிற்சி செய்யலாம் என்னும் பயிற்சி முறைகள் வலுப்படும். முதல் வகுப்பில் படித்தவற்றை மீண்டும் இந்த தொடர்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலமாக, நினைவுபடுத்திக்கொண்டு மீண்டும் பின்பற்றி புத்துணர்வு பெறலாம்.
அருகில் இருக்கும், வாழும் கலை அமைப்பின் மையங்களைக் குறித்துத் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தின் வலது புறம் மேல் பகுதியில் இருக்கும், இடத்தைக் காட்டும் குறியீடின் மூலமாக, இருக்கும் இடத்திலிருந்து மாநிலவாரியான இணையதளங்களுக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.