“நான் சிறிய உருவமன்று, இந்த உலகம்தான் மிகப் பெரியதாக இருக்கின்றது!“ என்று ஒரு பழமொழி உண்டு.
நம்மில் பலர் நமது குழந்தைப் பருவத்தைக் குரங்குக் கம்பிகளில் தொங்கிக் கொண்டும், பல மணி நேரங்களுக்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டும், நமது தந்தையின் தோளோடு தோள் சேர்த்து நிற்க முயன்று தோற்றுக் கொண்டும் இருந்திருக்கின்றோம்! நல்லது ! நமது உயரம் இரண்டு அங்குலம் ஏறினால் கூட நாம் எவ்வாறு வாழ்கின்றோம் என்பதைப் பற்றி நமது, மற்றும் பிறரது கண்ணோட்டத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதுண்டு. ஒரு சமீபத்திய ஆய்வு ஒரு நல்ல உயரம் என்பது வெறும் உடல் அம்சம் மட்டுமல்ல, அதிக நுண்ணுணர்வு சிறந்த வேலை வாய்ப்புக்கள், மற்றும் வாழ்க்கையை நோக்கி நேர்மறையான எண்ணப் போக்கு ஆகியவையும் இணைந்தவை என்று கூறுகின்றது. பிரிட்டனில் செய்யப் பட்ட மற்றொரு ஆய்வு, பெற்றோரின் உயரம் ஒரு முக்கியமான காரணியாக இருந்த போதிலும் நல்ல உயரத்தை அடைவது என்பது மரபணு சம்பந்தப் பட்டது மட்டுமேயன்று என்று அறிவுறுத்துகின்றது. நமது உணவு, வாழ்க்கை முறை, எண்ணங்கள் அனைத்தும் முக்கியமானவை. ஆனால் என்ன உண்கின்றோம், எவ்வாறு வாழ்கின்றோம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் உயரமாக வளர்வது என்பது கடினமான ஒன்றாகவே இருக்கின்றது.
தற்கால அழகுக்கான அறுவை சிகிச்சை போன்ற முறைகளை நீங்கள் தேடவில்லை என்றால், இந்தப் பழமையான முறையை உங்கள் பாணியாகத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் உயரத்தை அதிகரிக்க யோகப்பயிற்சிகள் | Yoga to increase your height :
சரி, உங்கள் வளர்ச்சியின் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் இந்த பண்டைய இந்திய நுட்பம் ஒரு எளிய மற்றும் எளிதான வழி என்பது விடையாக இருக்கலாம். ஆச்சரியமாக இருக்கின்றதா?வியப்படையவே வேண்டாம்!
யோகா என்பதன் பொருள் உடல் மற்றும் மனதின் சங்கமம் என்பதே ஆகும். ஆரோக்கிய வாழ்விற்கு இது மிக எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும் அமைதியான மனதைப் பெறுவதற்கும் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கும் இது உதவுகின்றது. மூச்சின் உதவியால் ஒருவர் தனது உடலின் பல் வேறு பாகங்களுக்குக் கவனத்தை எடுத்துச் செல்லும் வகையில் யோகாசனங்கள் பயிற்சி செய்யப் படுகின்றன. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.
மனம் அழுத்தமின்றி தளர்ந்திருக்கும் போது உடலால் எளிதாக வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியும். அவையே உயரமாக வளர உதவுகின்றன. சரியான தோற்றப் பாங்கினை அடைவதும் கூட முக்கியம், அதை யும் யோகப் பயிற்சி மூலம் அடையலாம்.
ஐந்து நாட்கள் நடைபெறும், ஆரோக்கியத்திற்கான பயிற்சியாகிய ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி, மனதை மேம்படுத்தி, யோகா தோற்றப் பாங்குகள் மூலம் உடலினை மீண்டும் உயிர்ப்பிகின்றது. தினமும் சில நிமிடங்கள் சீராகச் செய்யும் யோகப்பயிற்சி, உங்கள் உடல் வளரவும், மனம் அமைதியடையவும் உதவுகின்றது. உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும் சில யோகா தோற்றப் பாங்குகளை நாம் இப்போது காணாலாம், வாருங்கள்
புஜங்காசனா | Cobra Pose | Bhujangasana
பாம்பு போன்ற இந்தத் தோற்றப் பாங்கு,தோள்கள், மார்பு, மற்றும் அடி வயிற்றுத் தசைகளை நீட்டுகின்றது. மேலானத் தோற்றப் பாங்கின் மூலம் உயரத்தைக் கூட்டுகின்றது.
தடாசனா | Tree Pose | Tadasana
முதுகெலும்பினை நீட்டி நேராக்க மிகச் சிறந்த ஆசனம் இது. உயரத்தையும் கூட்டுகின்றது.
நடராஜனாசனா | Chakrasana
இது நுரையீரல்கள், மார்பு ஆகியவற்றை நீட்டுவதுடன், பிட்டம், கால்கள், மணிக்கட்டுகள், கைகள் மற்றும் முதுகு ஆகியவற்றின் தசைகளையும் பலப் படுத்துகின்றது.
சூரியநமஸ்காரம்| सन सेल्युटेशन | Surya Namaskar
யோகத் தோற்றப் பாங்குகள் மீழ் சுற்றான முறையில் செய்யப் படும் சூரிய நமஸ்காரம், மூட்டுகள் தசைகள் ஆகியவற்றைக் குறைந்த காலத்தில் தளர்த்துகின்றது. அடிவயிற்று உறுப்புக்கள் மாறி மாறி நீட்டி, சுருக்கப் படுவதால்,அவ்வுறுப்புக்களின் முறையான செயல்பாடு உறுதி செய்யப் படுகின்றது. மாறி மாறி முன்னும் பின்னும் குனிந்து நிமிரும் இந்தப்பயிற்சியால் முதுகு ஆழ்ந்த பயன்விளைவினைப் பெறுகின்றது.முதுகுப் பகுதி தளர்வினை அதிகரிப்பதால் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றது.
உடல் வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளால் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றது. யோகா நிச்சயமாக உங்கள் உடல் மேலும் மிருதுவாக உதவி,உயரத்தையும் அதிகரிக்கின்றது , ஆனால் அதே சமயம் , ஒருவர் உடல் பெரும் ஊட்டச்சத்து வகையின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். சீரான யோகபயிற்சி,ஆரோக்கியமான உடலையும் மனதையும் அடையச் செய்யும், நல்ல உணவுத் தேர்வுகள், சக்தியை பராமரிக்க உதவும்.
ஒரு பழமையான கலையாகிய யோகா, சீராகத் தொடர்ந்து பயிற்சி செய்யப் பட்டால், பல அதிசயங்களைச் செய்யும். வேறு எந்த பயிற்சியையும் போல், யோகாவையும் ஒரு தகுதி பெற்ற வல்லுனரிடம் சரியான வழியில் கற்று கொள்ள வேண்டும்.ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சியில் உங்கள் உடலின் அனைத்து குவிக்கப் பட்ட மன அழுத்தமும் நீங்க , தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் உங்களுக்கு வழிகாட்டுவர். மேலும் உங்கள் உடல் மற்றும் வாழ்க்கைக்குப் பொருத்தமான ஒரு யோகப் பயிற்சித் திட்டத்தையும் ஒரு ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியர் உங்களுக்கு அமைத்துத் தருவார்.