அரசு நிர்வாகத் துறையினர் பயிற்சித் திட்டம் (Government Executive Programs)
இந்தியாவின் ஆட்சி முறை ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகின்றது. மனித வளம் மற்றும் சூழல் எப்போதுமே பொருத்தமில்லாத நிலையில், பெரும் பாலான நிறுவனங்கள் இன்று , தங்கள் குறிக் கோள்களை மக்களுக்கு வழங்க, மகத்தான அழுத்தத்தில் உள்ளன. தனி மனிதனிடமிருந்தே மாற்றம் துவங்குகின்றது என்று நாம் நம்புகின்றோம். ஒரு பொதுப் பணியாளர், இன்று பல முனைகளிலிருந்து சந்திக்கும் நெருக்கடிகள், அவர் தன்னுடைய கடமையைச் செவ்வனே திறம்படச் செய்து முடிக்க ஒரு சவாலாக அமைகின்றது. இத்தகைய நெருக்கடிகள் பணியில் மட்டுமல்லாது, குடும்ப மற்றும் சமூக வாழ்விலும் ஏற்படுகின்றன. இவை ஒருவரது உடல்நிலை, திறமை, மற்றும் மனவலிமை ஆகியவற்றில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் ஒருவர் நெருக்கடிகளைக் கையாளவும், ஒரு திறமையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும் சில பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதன் தேவையை உணர்கின்றார். இந்த நெருக்கடிகள் அதிகமாகக் குவிந்து ஒரு நிறுவனத்தின் செயலாக்கத் திறனைப் பாதிக்கின்றது. வாழும் கலை, ஒரு நேர்மறையான பணிச் சூழலைக் கொண்டு வந்து மனப்போக்கு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு அனுசரணையாளராக இருக்கின்றது.
இந்திய அரசு நிறுவனங்களாகிய மத்திய அரசு , மாநில அரசுகள், தன்னாட்சி அமைப்புகள் , பொதுத்துறை , ஆயுதப்படைகள், போலீஸ் படைகள் , மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஆகிய வற்றுக்கு வாழும்கலையின் அரசு நிர்வாகத் துறையினர் பயிற்சித் திட்டம் ( Government Executive Program : GEP) ஒரு வரப்பிரசாதமாகின்றது.
இந்தப் பயிற்சி, அன்றாடம் சவால்களை எதிர்கொள்ளும் அரசுப் பணியாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டது. ஒரு தனி மனிதனின் சொந்த வாழ்க்கை, அன்றாடப் பணிச்சூழல் மற்றும் நிறுவனம் முழுமையும் என்னும் அனைத்துத் தளங்களிலும் தாக்கத்தை உருவாக்க வல்லது. புராதனமான, கால வரம்பற்ற ஞானத்தின் மீது வரையப் பெற்ற, நடைமுறைக் குகந்த , எளிய மற்றும் பயனுள்ள செயல்முறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சித் திட்டம் பரவலான பாராட்டினைப் பெற்றுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தின் முறையீடு, சமயம் ஜாதி, இனம், அல்லது சமூகப் பொருளாதார நிலை ஆகிய அனைத்துத் தடைகளையும் கடந்து செல்கின்றது.
இது வரையில், மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளில் உள்துறை வெளிவிவகாரத் துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, இளைஞர் விவகாரங்கள், சுரங்கம், மின்துறை, சாலைப் போக்குவரத்து உட்பட நூற்றுக்கணக்கான துறைகள் தங்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு இப்பயிற்சித் திட்டத்தின் , பலன் கிடைக்க வகை செய்துள்ளன. பல பயிற்சி நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், போலீஸ் படைகள், துணை இராணுவப் படைகள், இராணுவம் மற்றும் மத்திய கண்காணிப்பு தலைமை தேர்தல் போன்ற தனித்துறைகள், பாராளுமன்ற , சட்டமன்ற செயலகங்கள் போன்ற பல நிறுவனங்கள் இப்பயிற்சித் திட்டத்தின் பயன்களைப் பெற்றுள்ளன.
தொண்ணூறு சதவீதத்திற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மன அழுத்தம் நீங்கப் பெற்று, அதிக ஆற்றல், அதிக மனக்கவனம் மற்றும் தெளிவு பெற்றிருக்கின்றனர் என்று நம் உள் பின்னூட்ட அமைப்பின் அறிவிப்பு தெரிவிக்கின்றது. தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மேம்பட்ட திறன் மற்றும் தனிப்பட்ட உறவு மேம்பாடு இவற்றுடன் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதாக அறிவித்திருப்பது, நமது பயிற்சித் திட்டம், பணிச் சூழல் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினைத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. குறிப்பிடத்தக்க எண்பது சதவீதத்தினர் இப்பயிற்சித் திட்டம், ஒரு நேர்மறையான பணிச் சூழலை உருவாக்குகிறது என்றும், மேலும் அதிக நன்னெறி நடத்தைக்கு வழிவகுத்து, நிறுவன வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் கருதுகின்றனர்.
விரிவான விவாதத்திற்கும் முன்னிலை வழங்குதலுக்கும் எங்களை அணுகலாம். உங்கள் வரவை மிகுந்த மகிழ்வுடன் எதிர் நோக்குகின்றோம்.
எங்கள் மின்னஞ்சல் முகவரி: gep@vvki.net
எங்களது கைபேசி எண்: 9910299690.