ஒரு மனிதனின் வாழ்வில் 16 லிருந்து 25 வயது வரை உள்ள பருவத்தில்தான் அனைத்து சாகசங் களும் இடம் பெறும். புயல்களைக் கடந்து உயரத்தை எட்டுவதற்குக் கற்றுக் கொள்வது கட்டாயம் ஆகும். விருப்பத்தேர்வுகள் செய்யப் படுகின்றன, சொற்கள் பேசப் படுகின்றன, எண்ணத்தை விட வேகமாக செயல்கள் நிகழ்கின்றன. இந்நேரத்தில் முதன் முறையிலேயே சரியாகச் செய்வது மிக முக்கியம் ஆகும். நமது நண்பர்களே நமக்கு மிகவும் நெருங்கியவர்கள், நமது மகிழ்ச்சியின் ஆதாரமாக விளங்குபவர்கள். இத்தகைய பருவத்தில், தியானம் நமக்கு உற்ற நட்பாக விளங்க முடியும்.
# 1. மனதிற்குகந்தவர் ஆகுங்கள்:
"நான் ஆக்கிரமிப்பு மனமும், வன்முறை குணமும் கொண்டு கல்லூரியில் சண்டைகளில் ஈடுபடுவதுண்டு..எனக்கு நண்பர்களே இல்லை. எவ்வாறு என்னை மாற்றிக் கொள்வதென்றே எனக்குத் தெரிய வில்லை. தியானம் என்னை அமைதியாக்கிற்று. இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை நன்கு கவனித்துக் கொள்கின்றேன்.வன்முறை என்பதே என்னிடம் இப்போது இல்லை " என்று கூறுகிறார் ராஜேஷ் நாயர்.
இயல்பாக அனைவருமே நட்பானவர்கள்தாம். நாம் சிநேகம் அற்று இருந்தால் அதற்குக் காரணம் அழுத்தம் இறுக்கம் ஆகியவைதாம். தியானம் அழுத்தத்தைக் குறைத்து,நமது முழு ஆற்றலும் முழுமையாக மலரச் செய்கின்றது. பிறருடன் பழகி நட்பாவது எளிதாக ஆகின்றது.பிறரைக் கவனித்துக் கொள்வது நமது இயல்பாகின்றது.
# 2.உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்:
"நான் ஒரு இசைக் கலைஞனாக விரும்பினேன். உயர்ந்த விருப்பங்கள் இருந்த போதிலும் எப்போதுமே என் திறமையை சந்தேகித்து வந்தேன். ஒழுங்கான தியானப் பயிற்சியினால், தன்னம்பிக்கை அடைந்து, இன்று நான் அனேகமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி நடத்தும் இசைக் குழு ஒன்றில் இருக்கின்றேன்." என்று கூறுகிறார், சாஜல் ஜாஜு
இளைஞர்களாகிய நமக்கு வானத்தையே தொடுமளவுக்கு கனவுகளும், இலட்சியங்களும் உள்ளன. இந்தக் கனவுகளை நம்பி, இவற்றை வளர்த்து நனவாக்கும் வலுவினைத் தியானம் தருகின்றது.
# 3. புதிதாக எண்ணுங்கள்:
"தினமும் செய்யும் தியானத்தினால் என்னுடைய புதிய திறமைகளைக் கண்டறிந்தேன். என்னுள் உள்ள படைப்பாற்றல் பரப்பில் தட்டி, புதிதாக எண்ணத் துவங்கினேன்.தியானம் எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றில் இன்னொரு அம்சத்தினை சேர்த்தது " என்கிறார் திவ்யா சச்தேவ்.
நாம் ஒரு மொபைல் கடைக்குச் சென்றால். மிகப் புதிதாக வந்திருக்கும் மற்ற எல்லாவற்றையும் விட சிறப்பாக இருப்பதையே தேர்ந்தெடுக்க விரும்புவோம். தியானம் செய்யும்போது படிப் பாற்றல் மலர்ந்தெழுந்து நம்மால் புதிதாகச் சிந்திக்க முடியும், மாற்றி யோசிக்க முடியும், நமக்கு ஒரு புதிய முக்கியத்துவத்தை அதிக முயற்சியின்றி அளித்துக் கொள்ள முடியும்.
# 4. உங்களை எதுவும் அசைக்க முடியாது
முன்பெல்லாம் பிறருடைய நடத்தையினையும், இனிமையற்ற நிகழ்வுகளையும் கண்டு நான் மிகவும் கவலைப் படுவதுண்டு. ஆனால் ஒழுங்காகத் தியானம் செய்ய முற்பட்ட பின்னர் எது வருகின்றதோ அதை ஏற்றுக் கொள்வது எனக்கு எளிதாகி விட்டது." கரண் ராய்
இளம் வயதில், நமது வாழ்வில் நடை பெறும் இனிமையற்ற நிகழ்ச்சிகளால் மிகவும் வருத்தம் அடைகின்றோம். சில சமயங்களில் சில பிரச்சினைகள் நம்மைக் சுக்கு நூறாகக் கிழித்து விடுகின்றன. தியானம் உள்மன வலிமையையும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மையையும் தந்து, அமைதியான மனதுடன் கஷ்டமான நிகழ்வுகளை எதிர் கொள்ளும் திறனை அளிக்கின்றது.மேலும் அதிகப் பொறுப்புணர்வினை அளித்து சிறந்த தனி நபராக வளர்வதற்கு உதவுகின்றது. மழையைத் தடுக்க முடியாது, ஆனால் குடை இருந்தால் மழையை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். தியானம் சிரமமான காலங்களில் குடையைப் போன்றது.
# 5. தியானத்தின் மூலம் உயர்ந்தெழுங்கள்:
" நான் ஏழு ஆண்டுகளாக தொடர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவனாக இருந்தேன். எனது நண்பர், தியானம் கற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். சஹஜ் சமாதி தியானம் ஒழுங்காகச் செய்யத் துவங்கிய பின்னர், நான் புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். புகை பிடிப்பதால் ஏற்படும் உயர் உற்சாக நிலை தினமும் தியானத்திற்குப் பிறகு, தோன்றுகிறது” .- என்கிறார் அஜித் சிங்.
தியானம் புகை பிடித்தலை விட்டு விடவும், குறைக்கவும் ஒரு நிரந்தரத் தீர்வாக அமைகின்றது. விழிப்புணர்வு குறைவு மற்றும் உடல்நல பாதிப்பு இவையன்றி இயற்கையாகவே உயர் உற்சாக நிலையினை அடைய தியானம் உதவுகிறது. எந்த வித ஏக்கம், அல்லது புகை பிடித்தல் மது அருந்துதல், மற்றும் பிற போதைப் பழக்கங்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து மனதை தியானம் விடுவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்துங்கள்! வாழத் துவங்குங்கள் !
# 6.உங்கள் ஆற்றலை வழிப் படுத்துங்கள்:
தியானம் செய்யப் பயிற்சி செய்த பின்னர், பகல் முழுவதும் நான் மிகவும் உற்சாகமாகவும், ஆற்றலுடனும் விளங்குகின்றேன். படைப்பாற்றல் அதிகமான செயல்கள் மற்றும் தொண்டுப் பணிகள் ஆகியவற்றை என்னால் செய்ய முடிகின்றது.என்கிறார், சாக்ஷி சர்மா
இளம் பருவத்தினர், என்னும் வகையில் நம்மிடம் கடலளவு ஆற்றல், உற்சாகம், படைப்பாற்றல் ஆகியவை இருக்கின்றன. தியானம் நமது உள்ளிருக்கும் ஆற்றல் அளவினைக் கண்டறிய உதவுகின்றது. நாம் அதிகமான புதுமையும் சக்தியும் உள்ளவர்களாகவும் நமது ஆற்றலை படிப்பாற்றல் மற்றும் நேர்மறையான விஷயங்களில் வழிப்படுத்த உதவுகின்றது.
# 7.பெற்றோருடன் சமாதானமாக இருக்க வைக்கின்றது
தியானம் என்னுடைய பெற்றோருடன் பிரிக்க முடியாத உறவினை ஏற்படுத்திக் கொள்ள உதவுகிறது. எங்களது மகிழ்ச்சி, பிரச்சினைகள் அனைத்தும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கின்றோம். குழுவாக தியானம் செய்வது எங்களது உறவினை சிறப்பு மிக்கதாக ஆக்குகின்றது என்கிறார், அபிஷேக் தவார்
தியானம் செய்யும்போது, நாம் அமைதியாகவும், திறனுடனும் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இடைவெளி குறைகின்றது. நமது விருப்பங்களுக்கும் பெற்றோரின் அறிவுரைகளுக்கும் இடையே ஒரு நடுநிலையை ஏற்படுத்தவும் திறனுடன் விருப்பத்தேர்வுகளைச் செய்யவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.
ஸ்ரேயா சுக்ஹ் மற்றும் ராஜேந்திரா சிங் ஆகியோரின் கருத்துக்களையும் உள்ளடக்கியது. ஸ்ரேயாவும் ராஜேந்தரும் உலகெங்கும் வாழும் கலையின் இளைஞர் பட்டறைகள் நடத்தும் ஆசிரியர்கள். இவர்களிருவரும், எவ்வாறு தியானம் செய்வது என்று கற்பித்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தினை கொண்டுவந்தவர்கள் ஆவர்.