பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை
நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை வழங்கப் பட்டவையாக எடுத்துக் கொண்டு, விடுகிறோம். அது ஒரு செயலற்ற தன்மையினை எடுத்து வருகின்றது. ஒரே மாதிரியான நடைமுறை ஒழுங்கு, சலிப்பூட்டும் நிலைமையைத் தருகின்றது. சிலர், வாழ்வினைத் தூண்டும் பொருட்டு, தங்களுடைய சுக மண்டலத்தினைத் துணிச்சலுடன் தாண்டி, சவாலானவற்றை. ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் பெரும் இழப்பு, அல்லது சீரிய லாபங்களை அடைகிறார்கள்.
பொருளாதாரக் குறைபாடு போன்ற ஒரு நெருக்கடி ஏற்படும்போது அதன் விளைவு முழு சமூகத்தினையும் உலுக்குகிறது.. அது உங்களைத் தூக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்கிறது. நீங்கள் திடீரென்று வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையினை உணர்கின்றீர்கள். உங்கள் வசதிகள் குறைந்தழுத்தப் படும்போது, நீங்கள் உங்களை நிலைத்திருத்து வைத்துக் கொள்ளப் புதிய வழிகளை கண்டுபிடிக்க வசதி வட்டத்தினைத் தாண்டி வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இந்த நெருக்கடி நிலையில், ஒருவர், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் அதன் சுகங்கள் மற்றும் கஷ்டங்களின் நிலையற்ற தன்மையையும் கற்றறிந்து கொள்ள வேண்டியதாகின்றது.
ஆன்மீக ஈவு அற்ற நிலை உங்கள் மன அழுத்தத்திற்கும் தற்கொலை முயற்சிக்கும் கூட வழி வகுக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம், உங்கள் சிறிய உலகினைத் தாண்டி நீங்கள் பார்ப்பதில்லை. உங்கள் கண்களைத் திறந்து பார்த்தால், உங்களை விட அதிகமாகப் பாதிக்கப் பட்ட பலர் இருப்பதைக் காண்பீர்கள். பிரார்த்தனை, தியானம், யோகா, பிராணாயாமம் ஆகியவை, ஒருவர் தனது எல்லைக்கு அப்பாற்பட்டு பார்க்கவும், சவால்களைச் சந்திக்கவும் உதவும்.
இன்பம் நிலையானதல்ல என்று கூறுவது எளிது, ஆனால் கஷ்டங்கள் நிலையாக இருப்ப தாகப் பலர் உணர்கின்றார்கள். இங்குதான் ஆன்மீக அறிவு உங்களுக்கு கஷ்டத்தினைத் தாங்கிக் கொண்டு அதற்கு ஒரு விடிவு காண்பதற்கு ஏராளமான பலத்தினை அளிக்கின்றது. ஒரு நெருக்கடிதான் இதுவரையில் நெடுங்காலமாக நீங்கள் அலட்சியம் செய்த ஒன்றினைக் காண்பதற்கு உங்கள் கண்களைத் திறக்கின்றது. அதைக் கண்டவுடனேயே ஓர் ஆறுதலும் மகிழ்ச்சியும் சில தருணங்களில் படைப்பாற்றலும் ஏற்படுகின்றது.
ஓர் நெருக்கடி, சமுதாயத்திலுள்ள மனிதப் பண்புகளை மேலெழுப்பிக் கொண்டு வருகின்றது. பீகார், அஸ்ஸாம், அல்லது ஒரிசா போன்ற இடங்களில் ஏற்பட்ட அழிவின் போது, அனைத்து சமயத்தினரும், ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவினர். திடீரென்று மறைந்திருந்த மனிதப் பண்புகள் கண்ணுக்குத் தெரிந்து, இந்த பூமியில் ஏராளமான அன்பு மற்றும் சார்புணர்வு இருப்பதை அறிந்துணர முடிந்தது.