விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் தலைமைத்துவம் பற்றிய இரண்டாவது உலக உச்சி மாநாட்டில் ரிச்சர்ட் மெக் லாரென் , கியானி இன் பான்டினோ மற்றும் உலகத் தரம் வாய்ந்த 53 பேச்சாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு கால்பந்து சங்கத்தின் தலைமையகத்தில் விவாதிக்கின்றனர்

Switzerland
5th of Sep 2016

விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து ஊழல், மற்றும் ஒட்டுமொத்த இன்றியமையாத ஆளுகைச் சவால்களைச் சமாளித்து, விளையாட்டின் அசல் மதிப்புக்களைப் பாதுகாக்க ஒரு சூடான விவாதம் நிகழ்ச்சி நிரலில் முன்னிலைப்படுத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஸுரிக்: வணிக நெறி முறைகளுக்கான உலக மன்றம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் பதிப்பு வெற்றியடைந்ததை அடுத்து, மீண்டும் உலகெங்கிலுமிருந்து வல்லுநர்களை விளையாட்டு நெறி முறைகள் மற்றும் தலைமைத்துவம் பற்றிய இரண்டாவது உலக உச்சி மாநாட்டில் விளையாட்டில் நெறி முறைகளுள்ள நடத்தை பற்றி விவாதிக்க அழைப்பு விடுத்திருக்கிறது.

பிரஸ்ஸல்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும், இந்த பல பங்குதாரர்களின் மேடையில் விளையாட்டிலிருந்து வணிக மற்றும் அரசியல் துறையினர் என்ன கற்றுக்கொண்டு விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி விளையாட்டு நெறிமுறைகளை மதிப்பீடு செய்ய முடியும் என்று விவரிக்கும். "விளையாட்டு அழகினைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்திற்கு அதன் முழுத் திறனை வெளிப்படுத்துதல் ", என்னும் கருப் பொருளுடன், இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பாளர்களின் 'ஒட்டுமொத்த அறிவு மற்றும் அனுபவம்’ ஆகியவற்றை வளப்படுத்தும் விதமாக சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் உரை அமர்வுகள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும்.

முக்கிய சிறப்பம்சங்கள் என்னவெனில் பேராசிரியர் ரிச்சர்ட் மெக்லாரன் தலைமையில் ஊக்க மருந்து ஊழல் அகற்றும் குழு விவாதம் மற்றும் சுயாதீன சர்வதேச கூட்டமைப்புக் கால்பந்து சங்க நெறி முறைகள் குழு மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹான்ஸ் ஜோசிம் எக்கர்ட் தலைமையில் தற்போதைய விளையாட்டு ஆளுகை சவால்களை பற்றிய விவாதம் ஆகிய வையாகும். மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகள் சார்ந்த, மற்றும் நடவடிக்கை சார்ந்த பல பட்டறைகள், வெற்றிவழி வகைகள், விளையாட்டில் நெறிமுறைகளை ஊக்குவிக்க டிஜிட்டல் மற்றும் பிற ஊடகங்களின் பங்கு ஆகிய தலைப்புக்களில் ஆழமான விவாதங்களை வரவேற்கும்.

சர்வதேச கூட்டமைப்புக் கால்பந்து சங்க தலைவர் கியானி இன்ஃபாண்டினோவை சர்வதேச கூட்டமைப்புக் கால்பந்து சங்க தலைமையகம் உள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்பவர்களை வரவேற்பார். சர்வதேச கூட்டமைப்பு கால்பந்து சங்கத்தின் புதிய செயலாளர் பாத்திமா சமௌரா ஒரு சிறப்புரை வழங்க வும் திட்டமிடப்பட்டுள்ளது.

வணிகத்தை விட மேம்பட்டது விளையாட்டு. இது "கனவில் நெய்யப்பட்டது" மில்லியன் கணக்கான ஏழை மக்களின் விதியை மேம்படுத்தும் ஒரு நம்பிக்கை மட்டுமல்ல, நாடுகளை மேம் படுத்துவதும் கூட. அரசியல்வாதிகள், மற்றும் நம்மை விட அதிகமாக விளையாட்டு வீரர்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அதிகாரம் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். ஆகவே விளையாட்டு எந்த ஊக்கமருந்தும் இல்லாமல் நியாயமற்ற தொழில் 'பந்தயம்' சூழ்ச்சிகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற துணை தலைவரான ரைஷார்டு சர்நேக்கி.

'இன்றைய உலகில், விளையாட்டு ஒரு முக்கிய செல்வாக்கும், முக்கிய விழுமியங்களை ஊக்குவித்து, சமூக பிரச்சினைகளை சமாளிக்கும் அதிகாரம் பெற்றதும், ஆகும். அதன் உண்மையான ஆற்றலை உணர, நாம் அதன் ஒருமைப்பாடு மற்றும் அழகைத் 'தக்க’ வைத்து கொள்ள வேண்டும், என்று கூறுகிறார் சிறப்பு பேச்சாளராக உறுதியாகச் சேர்க்கப் பட்டுள்ள வில் லெம்கே. இவர் உச்சி மாநாடு விளையாட்டு ஐ.நா. பொது செயலாளர் அபிவிருத்தி மற்றும் அமைதி சிறப்பு ஆலோசகர் ஆவார்.

மேலும் விளையாட்டு நெறிமுறைகள் மீதான உலக மாநாடு தலைமை விளையாட்டு விருது - 2016 வழங்கப்படுவதையும் காணும். இந்த விருது, மனித மதிப்புகள் மற்றும் வாழ்க்கையில் மற்றும் விளையாட்டு அரங்கில் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் ஒரு சிறந்த தனிப்பட்டவரை மற்றும் அமைப்பை அங்கீகரிக்கும். உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒரு நாள், வணிக நெறி முறைகள் பற்றிய உலகக் கருத்துக்களம் ஒன்று நிகழும். அது எல்லா துறைகளிலுமிருந்தும் உலக பங்குதாரர்கள் ‘ விளையாட்டு நெறிமுறைகள் மற்றும் தலைமை’ என்பதில் பிரஸ்ஸல்ஸ் உடன் ஒத்துழைப்பு வலுவாக நிறுவியுள்ளதை எடுத்துக் காட்டுவர்.

விளையாட்டுக்களில் நெறிமுறைகள் மற்றும் தலைமை பற்றிய 2 வது உலக மாநாடு மனித மதிப்புக்களுக்கான சர்வ தேச சங்கம் சுவிஸ் நாட்டு மாருதி தொலைத் தொடர்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து வணிக நெறிமுறைகள் உலக கருத்துக்களம் நடத்தவிருக்கின்றது. கடந்த 13 ஆண்டுகளாக WFEB உலகளாவிய மாநாடுகளை நடத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நெறிமுறைகள் மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தி வருகிறது.

மேலும் விபரங்களுக்கும் உரை நிகழ்த்துபவர்களின் முழு பட்டியலுக்கும் http://ethicsinsports.ch/ எனும் வலைத்தளத்தைக் காணுங்கள்.