ஸ்ரீ ஸ்ரீ யோகா ஒரு மென்மையான சக்தி மிகுந்த வழிமுறை. இது முக்கியமாக ஹத யோகா, உடல் மனம் மற்றும் மூச்சை விழிப்புணர்வுடன் ஒருங்கிணைத்தல் போன்ற யோகாவின் பல்வேறு வழிகளை ஒன்றிணைத்து முழுமையாக்குகிறது.யோகாவின் நுட்பங்களும் ஞானமும் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான, பூரணமான முறையில் பல்வேறு சுவாச நுட்பங்கள் உடல் தோற்றநிலைகள் (ஆசனங்கள் ) ஞானச் செய்திகள் வழிநடத்துதல் தியானம் ஆகியவற்றுடன் அளிக்கப் படுகின்றன. உடலளவில் மட்டுமல்லாது உங்கள் இருப்பின் நுண்ணிய நிலைகளை உணரும்திறனை கூர்மைப்படுத்தி, மனித ஆற்றல் வளத்தை முழுமையாக மலரச் செய்கிறது.
ஸ்ரீ ஸ்ரீ யோகா முதல் நிலை
இந்த 10 மணி நேர பட்டறை யோகாவின் அனைத்து அம்சங்களிலும் அனுபவத்தினை அளிக்கிறது. அவை:
- மென்மையான மற்றும் வேகமான தோற்றநிலைகள் ; அத்துடன் சக்தி வாய்ந்த பயிற்சிகள்
- சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பங்கள்
- யோக ஞானம்
- இளைப்பாறுதலுக்கான எளிய கருவிகள்
- வழி நடத்துதல் தியானம்
- சமச்சீரான உணவை அடைய யோகா முன்னோக்கு
- வாழ்க்கை அறிவியலாக ஆயுர்வேதத்திற்கு ஓர் அறிமுகம்
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட யோகப் பயிற்சித் திட்டம் வரையறுக்கப் பட்டு அவர்கள் ஆயுர்வேதத்திற்கும் அறிமுகப் படுத்தப் படுகின்றனர். அதன் மூலம் அவர்கள் யோகா உணவுத் திட்டத்தைப் பற்றிக் கற்கின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் யோகாவின் பயன்களை சீக்கிரமாக அனுபவித்து அடைய முடியும்.
முன் நிபந்தனைகள்: எதுவுமில்லை
பயிற்சி வடிவம்: ஸ்ரீ ஸ்ரீ யோகா முதல் நிலைப் பயிற்சியை உங்களுக்கு அருகாமையிலுள்ள வாழும் காலை மையங்களில் பெற்று அனுபவிக்கலாம்.
- உங்களுக்கு அருகாமையிலுள்ள வாழும் கலை மையங்களில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி ஐந்து நாட்கள் பட்டறையாக, தொடர்ச்சியாக அல்லது வாராந்திரமாக ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு அளிக்கப் படுகிறது.
- தங்கிப் பயிலும் முதல் நிலை ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி :வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்து ஞாயிற்றுக் கிழமை பகல் 1 மணி முதல் திரும்பிச் செல்லலாம்.
- தங்குமிடமற்ற முதல் நிலை ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி: இரண்டு வாரயிறுதி நாட்களில் ஐந்து அமர்வுகள் (சனி-ஞாயிறு ; சனி-ஞாயிறு) ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேர பயிற்சி.
ஸ்ரீ ஸ்ரீ யோகா இரண்டாம் நிலை
யோகா உற்சாகிகளாகிய நம்மில் பலர் யோக சித்தாந்தத்திலிருந்து செயல் முறைப் பயிற்சி வரை யோகாவின் ஆழத்தைக் கண்டறிய உதவும் யோகா பயிற்சியை தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீ ஸ்ரீ யோகா முதல் நிலைப் பயிற்சி ஆசனங்கள் பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகிய நுட்பங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது.ஸ்ரீ ஸ்ரீ யோகா இரண்டாம் நிலைப் பயிற்சி யோகாவின் ஆழத்திற்குச் சென்று ஒரு யோகியாக வாழ்வதன் அர்த்தம் என்ன என்றறிய ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது.
யோகாவில் ஆழமாக முக்குளியுங்கள்
உயர்நிலை யோகா கடினமானது என்று பொருளில்லை. இதில் முற்றிலும் முழுமையாக யோகா தோற்றநிலைகள் பழமையான யோகஞானம் சுவாசம் மற்றும் தியானம் ஆகியவற்றை மென்மையாக ஆயின் ஆழமாக கொண்டாட்டம் மிகுந்த சந்தோஷமான அமைப்பில் ஆய்வு செய்கிறோம்.
- உங்கள் தோற்ற நிலைகளை சிறந்த சமச்சீர் மற்றும் சீரமைப்பு முறையில் சரி செய்து கொள்ளுங்கள்
- ஷங் ப்ரகாஷலன் மற்றும் நெட்டி மூலம் உடல் மற்றும் உணர்ச்சிகளை சுத்தீகரித்துக் கொள்ளுங்கள்.
- யோக சாஸ்திரத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
- சந்திரபேதி சூரியபேதி ஷீதலி போன்ற புதிய பிராணாயாமங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
- SSaHC* : நுண்ணிய வலுப்படுத்தும் மற்றும் ஆற்றுப்படுத்தும் தசை சுருக்கி விரிக்கும் பயிற்சியை அனுபவியுங்கள்
- செயலில் மௌனத்தையும், மௌனத்தில் செயல்பாட்டையும் அனுபவியுங்கள்.
*SSaHC : ஒரு புதிய மென்மையான மற்றும் தியானத்துடன் இணைந்த சுருக்கி விரிக்கும் பயிற்சி. இது தசைகளை வலுப்படுத்தி,சீராக்கி, உடல் மற்றும் பிராண நிலையில் சமநிலை மற்றும் ஒத்திசைவை ஏற்படுத்தி நீண்ட கால வலிகளைக் குறைக்கிறது. ஓர் தியான அனுபவத்தையும் அளிக்கிறது.
முன் நிபந்தனைகள்: முதல் நிலை ஸ்ரீ ஸ்ரீ யோக பயிற்சி, முதல் நிலை வாழும் கலைப் பயிற்சி அல்லது எஸ் பிளஸ் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி வடிவம் : நான்கு நாட்கள் தங்கும் பயிற்சி
பயிற்சியைப் பற்றி மேலும் அறிய, info@srisriyoga.inஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.