உங்கள் இல்லத்தில் ஓர் மருத்துவர்: கொத்தமல்லி
சக்தி நிறைந்ததும், பச்சை நிறமானதும், ஆவி பறக்கும் சூப்பினையும், சுவை யான பாவ்- பாஜியையும் அலங்கரிப்பதும், மருத்துவ குணங்களை உணவில் நிறைப்பதும் - கொத்த மல்லியே ! அதன் இலைகள், தண்டு, விதைகள் வேர் முதலான எல்லா பாகங்களும் உபயோகப் படுவது மட்டுமின்றி, ஒவ்வொன்றும் வெவ்வேறு மணத்தினால் உணவிற்குச் சுவை யூட்டுகிறது. உணவிற்கு மணம் அளிக்கவும், அலங்கரிக்கவும் கொத்துமல்லி உலகம் முழுவதும் பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உணவு தயாரிப்பில் கொத்தமல்லியின் பயன்பாடானது, பனிப்பாறை முனை என்று பிரபலமாக விவரிக்கப் படுகிறது. ஆயுர்வேதத்தில் இது " KUSTUMBUR " என அழைக்கப்படுகிறது - அதாவது பலவகையான நோய்களை நிவர்த்திக்கவல்லது.
கொத்துமல்லியின் பயன்கள் :
- அழகான கொத்துமல்லி இலைகள் சக்தி வாய்ந்த, இயற்கையான சுத்திகரிப்புக் கான காரணி.
- மிக முக்கியமான எண்ணெய் வகைகளின் 11 அங்கங்கள் கொத்துமல்லியில் அடங்கி யுள்ளது. ஆறு வகை அமிலங்களையும் வைட்டமின் -C உட்பட[ Ascorbic acid ], தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை உள்ளடக்கியது .
- கொத்துமல்லி ஜூரத்தைக் குறைக்கக்கூடியது. சிறுநீர் வெளியேற்றத்தை [diuretic] அதிகப்படுத்தும்.உடலின் நற்செயல்களைத் தூண்டுவதுடன், எரிச்சலைத் தணிக்க வல்லது.
- இது ஓர் ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட்-ம் கூட. ஆன்டி ஆக்சிடென்ட் என்பவை நம் உடலின் சுத்திகரிப்புப் படை. - பலவீனமான, ஜீரணக் குறைபாட்டி னால் ஏற்படும் அழிவுகள், சுற்றுச் சூழலி னால் ஏற்படும் அசுத்தம் மற்றும் மனஅழுத்தத்தினால் ஏற்படும் கேடுகளை நிவர்த்தி செய்யக்கூடியது. நம் உடலில் சேர்ந்துள்ள கேடு விளைவிக்கும் உலோகங்களையும் [Heavy metals ] பிற நச்சுக்களையும் கொத்துமல்லியின் ஆன்டி ஆக்சி டெண்ட் குணம் நீக்கக்கூடியது.
- கொத்துமல்லி, இரு பெரும் நோய் எதிர்ப்பு சக்தி சத்துக்களை உள்ளடக்கியது அதாவது வைட்டமின் A மற்றும் வைட்டமின் C ஆகும்.
- அதன் மருத்துவ குணங்கள், ஒவ்வாமை, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சல் , ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் நோய்களுக்கு [Dermatitis ] நிவர்த்தி அளிக்கவல்லது.
- உயிர் சக்தியைப் பெருக்கி வலியைக் குறைக்கிறது.
- இரும்புச் சத்து,போலிக் அமிலம் [Folic acid ] மற்றும் வைட்டமின்கள் A, B, K முதலான சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால் உணவு, சத்து நிறைந்ததாகிறது.
- கொத்துமல்லியில் வைட்டமின் K மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், இரத்த சோகையைத் தடுப்பதோடு, இரத்தம் உறைதலை [Coagulation] மேம் படுத்துகிறது.
- உணவு நன்முறையில் ஜீரணிக்க உதவுவதோடு, பசியைக் குறைப்பதன் மூலம் எடை குறைப்பிலும் உதவுகிறது.
- கொத்தமல்லியில் காணப்படும் சக்திவாய்ந்த அமிலங்கள், இரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் [ LDL ] அளவினைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் [ HDL ] அளவினை அதிகரிக்கச் செய்கிறது.
- கொத்தமல்லியில் பல பயன்கள் காணப்படுவதால், கருவுற்ற சமயத் தில் உண்ணக்கூடிய மிக முக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.
தினசரி உணவில் கொத்துமல்லியின் ஐந்து பயன்பாடுகள்:
- கொத்துமல்லி இலைகளை மெல்லியதாக நறுக்கி, உணவினை அலங்கரிக்கலாம்.
- பொரியல் மற்றும் சாம்பாரில் சேர்க்கலாம்.
- உடல் நலத்திற்குகந்த பானம் மற்றும் சூப் தயாரிக்கலாம்.
- தனியா பொடியினை [ கொத்துமல்லி விதைகள் ] உணவில் உபயோகிக்கலாம்.
- சட்னி செய்து தினசரி உபயோகிக்க சேமிக்கலாம்.
ஸ்ரீ ஸ்ரீ கல்லூரி மற்றும் ஆயுர்வேத சாஸ்திர ஆராய்ச்சி மைய மருத்துவ வல்லுனர்களான Dr.ஜோதி மற்றும் Dr. ஹரி ஆகியோரால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது..
கொத்துமல்லி வீட்டினுள் மருத்துவர் . சில அடிப்படையான வீட்டு வைத்தியத் தீர்வுகள்
வயிற்றுப் போக்கு மற்றும் அலர்ஜி
கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.
தலைவலி :
கொத்துமல்லி சாறு தயாரித்து, முன் நெற்றியில் தடவவும்.
மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப் போக்கு [ Excess menstrualbleeding ] தனியா விதைகளை கஷாயம் செய்து பாலுடன் அருந்தவும்.
கண்வலி
கொத்தமல்லி சாறில் கண்களை கழுவவும். கொத்தமல்லி விதைகளை கஷாயம் செய்து குடிப்பது உலர்ந்த அழற்சி மிகு கண்களை ஆற்றுப்படுத்தும்.
பரு மற்றும் கருப்பு புள்ளிகள்:
கொத்துமல்லி சாற்றுடன் துளி மஞ்சள் சேர்த்து ,பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவவும்.
வாய்ப்புண் :
தனியா கஷாயத்தினை அருந்தவும், வாய் கொப்புளிக்கவும்.
தோலில் வெடிப்புகள்
தனியா [ கொத்துமல்லி விதைகள் ]கஷாயம் செய்து அருந்தவும்ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும்.
அஜீரணம்
ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு கோப்பை நீரில் அதனை பதினைந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.சூடு ஆறும் வரையில் காத்திருக்கவும். ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் ஒரு வாரத்திற்கு குடிக்கவும்.
>>>>>>>>>>>>>>>>