ருத்ர பூஜை என்றால் என்ன?

ருத்ர  பூஜை  என்றால் என்ன?

 

 

ருத்ர பூஜை  என்றால் என்ன?

ருத்ர பூஜை  என்பது பண்டைய நடைமுறை ஆகும். 'ருத்ர' என்றால் 'சிவன் : தர்மம்', 'தீமையை  அழிப்பவன்'. பூஜா  என்பது முழு பூர்வமாக பிறந்தவர் என்று பொருள். இந்த பூஜை மூலம் ஒரு உள் அமைதி மற்றும் நிறைவினை அடைய  முடியும். இந்த பூஜையில் சிவபெருமான் ருத்ர வடிவில் வழிபடப் படுகிறார்.

எல்லாவிதமான தீமைகளையும் அகற்றி, அனைத்து விருப்பங்களையும், அனைத்து சுபிக்ஷங்க ளையும்  அடைவதற்கான  மிகப்பெரிய பூஜைகளில் ஒன்றாக வேத நூல்களில்   பாராட்டப் பட்டி ருக்கின்றது. ஜோதிட சாஸ்திரம் பல கோள்களின் தோஷங்களுக்குத்   தீர்வு என்று இதை உறுதிப் படுத்துகின்றது.

ஏன் ருத்ர பூஜை செய்ய வேண்டும்?

உலகம்   எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்களால்  ஆளப் படுகிறது. நாம் சிவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது நம்மைச் சுற்றியிருக்கும்  - நோய், மன அழுத்தம்,, மகிழ்ச்சியின்மை ஆகிய எதிர்மறைகள்  அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி என மாற்றம் அடைகின்றன.  பிறகு  உடலிலும், மனதிலும், ஆன்மாவிலும் அமைதி, வளம், மற்றும் ஆனந்தம் ஆகியவை சூழ்ந்து கொள்கின்றன.

பூஜை எவ்வாறு செய்யப் படுகிறது?

இந்த பூஜை ஒரு ஸ்படிக லிங்கத்திற்குச் செய்யப்படுகிறது. பூஜையில் உள்ள ஒவ்வொரு பழங்கால மந்திரமும் தயிர், பால், நெய், தேன் போன்ற பொருட்களில் உறிஞ்சப்படுகிறது. பின்னர் அது பக்தி, அன்பு மற்றும் நன்றியுடன் சிவபெருமானுக்கு அளிக்கப் படுகிறது.. சிறப்பு பயிற்சி பெற்ற பண்டிதர்கள் மற்றும் (வேத பாடசாலைகளில் கற்கும் )  வேதாகம மாணவர்கள்,  இந்த சிறப்பு பூஜையைச்  செய்கின்றனர். மந்திரங்களின் தூய்மை  மற்றும் தியானம், நம்மை  ஒரு வேறு உலகிற்கு  அழைத்துச் செல்கிறது.