படிப்பு ? ஒ! அது மிக எளிதானது !
எனக்கு தேர்வுகளைப் பற்றி பயமில்லை !
ஏன் திரும்பவும் படிக்க வேண்டும்? ஒரு முறை படித்து விட்டேன் போதும்!
இல்லை, நீங்கள் கனவு காணவில்லை.இந்த மாணவனும் இந்தக் கருத்துக்களும் கேள்விப் படாதவையல்ல.இது போன்ற பல குழந்தைகள் இருக்கின்றனர். மாய வித்தையா? ஆம் தியானம் செய்யும் மாய வித்தைதான் அது.சாதாரண மாணவனின் வாழ்வில் ஒரு திருப்பத்தினை எடுத்துக் கொண்டு வரும்.
#1: உங்கள் ஒருமுகப் படுத்தலை அதிகரியுங்கள்
தியானம் ஒரு மந்திரக் கோல். நான் களைப்பாக இருக்கிறேன், படிக்க வேண்டும்,
அது என்னை புத்துணர்வுடன் வைக்கின்றது.
தியானம் என்னுடைய ஆற்றலை அதிகரிக்கின்றது
என்னுடைய ஆசைகளும் தேவைகளும் குறைந்து விட்டன.தியானம் முழுமையான அனுபவமாக இருக்கின்றது.
தியானம் படிப்பில் என்னுடைய விருப்பத்தைஅதிகரிக்கின்றது.
தியானம் செய்யுங்கள்.ஒரே முறையில் தேர்வில் வெற்றி காணுங்கள்
தியானம் என்னுடைய மனப்பான்மையை மாற்றி விட்டது.இப்போது என்னுடைய பிரச்சினைகளை சவால்களாகவே காண்கின்றேன், தடையாக அல்ல.
நேர மேலாண்மையை தியானம் கற்பித்திருக்கின்றது.
தியானம் ஒரு வெற்றிகரமான தேர்வு வெற்றிக்கு மூலப் பொருளாகஅமைகின்றேன்
என்னுடைய நண்பர்கள் எனக்கு கூர்நோக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். என்னுடைய கவனிப்புத் திறன்அதிகரித்துள்ளது.
தியானம் செய்யும்போது எனக்கு எதுவுமே பொருட்டாகத் தெரிவதில்லை.
என்னுடைய பொறியியல் படிப்பின் இறுதி ஆண்டில், நான் நன்றாக செயல்படும் கட்டாயத்தில் இருந்தேன். ஏனெனில் என் நண்பர்களுக்கு பல நிறுவனங்களிலிருந்தும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் தியானம் பயின்ற சராசரி மாணவியான என்னுடைய இளைய வகுப்பு சிநேகிதி, தனது படிப்பு நிலைக்கு மேம்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்புச் சிக்கலுக்கு மிக எளிதாக தீர்வு கண்டதை அறிந்தேன்.இது என்னையும் தியானம் பயிலத் தூண்டியது. என்னுடைய கவனக் குவிப்பு மேம்பட்டது.முன்பெல்லாம் நேர்முகத் தேர்வு நிகழும்போது நான் பதட்டம் அடைவதுண்டு,ஆனால் இப்போது தன்னம்பிக்கையுடனும் புன்முறுவலுடனும் விடையளிக்கின்றேன்.“ என்கிறார் சைலஜா கண்ணன்.
உங்கள் கவனத்துக்காக உங்கள் பாடப்புத்தகம் காத்திருக்கும் வேளையில் உங்கள் மனம் வேறெங்கோ நடைபயின்று கொண்டிருந்ததை நினைவு கூறுகின்றீர்களா? தேர்வுகள் இன்னும் துவங்காத நிலையில் திரைப்படத்திற்கோ அல்லது நல்ல தூக்கத்திற்கோ திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
பாடத்தில் கவனம் செலுத்த கடினமாக இருந்தால், ஒவ்வொரு நாளும் சில நிமிஷங்கள் தியானம் செய்வது நல்ல பயனளிக்கும்.கடந்த காலத்திற்கும் வரும் காலத்திற்கும் இடையே பயணம் செய்ய விரும்பும் மனதை நிகழ் தருணத்தில் நிலை கொள்ளச் செய்ய தியானம் உதவும்.அதன் விளைவாக படிப்பில் கவனம் செலுத்த முடியும்.
#2: சில தடவைகள் திரும்பப் படித்தாலே போதும்
தியானம் செய்யத் துவங்கி, முதல் ஆறு மாதத்தில்,பாடங்களை திரும்பவும் படிப்பது மூன்று முறைகளிலிருந்து ஒரே முறையாகி விட்டது.ஓராண்டு தியானத்திற்குப் பின்னர், திரும்பப் படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய் விட்டது. இப்போது தேர்வுக்கு அதிக நம்பிக்கையுடன் செல்கின்றேன்" என்கிறார் சாக்ஷி பாபர்.
உங்களுடைய கவனக் குவிப்பு அதிகரிக்கும்போது, உங்களால் எதையும் நன்றாகக் கிரகித்துக் கொள்ள முடியும்.தினமும் செய்யும் தியானத்தினால் உங்கள் நினைவுத் திறன் கூர்மையாகி, மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் குறைந்து கொண்டே வருகிறது. தியானம் செய்யும் மாணவர்கள் பலர், முதல் முறை படிப்பதே முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள போதுமானது. அடுத்த முறை ஆசிரியர் முதல் நாள் கற்பித்ததைப் பற்றிக் கேட்கும்போது, உங்கள் கையே முதலில் உயரும்
#3: நம்பிக்கை உயருகின்றது
"தியானம் எனக்குத் திருப்தியை அளித்துள்ளது.நான் என் தேர்வில் 100 சதவீதம் என்னுடைய திறனை அளித்துள்ளேன். தேர்வு முடிவுகளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னுடைய செயலாக்கத்தினைப் பற்றி எனக்குத் திருப்தி உள்ளது." என்கிறார் விகாஸ் குமார்.
உங்கள் கருத்துக்களை வகுப்பில் பகிர்ந்து கொள்ள உங்களுக்குத் தயக்கமாக உள்ளதா? எத்தனை முறை உங்களுக்கு விடை தெரியும் ஆனால் கை உயர்த்துவதற்குத் தயக்கம் ஏற்பட்டது?
ஆம் என்று கூறினால் தியானத்தை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள். மேம்பட்ட நம்பிக்கையை அனுபவியுங்கள்!
#4: மறைந்திருக்கும் திறன்களை வெளியே எடுத்து வாருங்கள்
எனக்குப் படிப்பில் விருப்பமே இருந்ததில்லை. ஆனால் தியானம் என் பிற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியது.நம்பிக்கையுடன் கல்லூரியில் நடக்கும் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டேன்.மேலும் அனைத்து வகையான மக்களுடனும் என் கௌரவத்தை இழக்காமல் பழகினேன்.களைப்பு நிறைந்த நாளின் இறுதியில் வீடு திரும்பி தியானம் செய்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் தூங்கினார்ப் போன்ற ஓய்வினை அடைந்து படிக்கத் துவங்குகிறேன்" என்கிறார் ஜஸ்ராஜ் சுதர்.
தியானம் நுண்ணிய நிலையில் உங்களிடம் மறைந்திருக்கும் திறன்களை வளர்க்கின்றது. ஒழுங்கான பயிற்சியின் மூலம் உங்களின் படைப்பாற்றல் திறன் திறந்து, மேம்பட்ட ஆர்வத்துடன் கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் அதிக செயலாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
#5: தேர்வுகளைப் பற்றிப் பயமில்லை
நானும் என் நண்பர்களும் சேர்ந்து படிப்பதுண்டு,உண்மையில் நான் வேடிக்கை விளையாட்டுகளில் நிறைய நேரம் செலவழிப்பது உண்டு. நான் அவர்களையெல்லாம் தொல்லை செய்வது மட்டுமல்ல அவர்களைக் குறைவாகவே படிப்பேன், ஆனால் அவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து விடுவேன். அவர்களெல்லோரும் படிப்பதைப் பார்த்தும் நான் பதட்டப் படுவதில்லை என்னை அவர்களுடன் ஒப்பிட்டுக் கொளவதும் இல்லை. தேர்வுகளைத் தேர்வுகள் என்றே நான் கருதுவதில்லை! - என்கிறார் பிரியங்கா லால்.
தியானம் தேர்வு பற்றிய பயத்தினைக் குறைக்கின்றது. தேர்வு, அதன் முடிவுகள் ஆகியவற்றோடு உலகம் முடிந்து விடுவதில்லை,வாழ்க்கை என்பது இவற்றையெல்லாம் விடப் பெரிதானது என்னும் மெய்யுணர்வை தியானம் அளிக்கின்றது.ஓர் சராசரி மாணவனாக இருந்தால் என்ன? அல்லது தேர்வுகள் சிறப்பாக எழுதாவிட்டால் என்ன? நீங்கள் வேறெதிலாவது மிகச் சிறந்தவாக இருக்கலாம்.தியானம் உங்களது ஆற்றலை நீங்கள் அறிந்து வளர்த்துக் கொள்ள உதவுகின்றது.
#6: மேம்பட்ட முடிவுகள்
நான் விஷயங்களைக் கிரகித்துக் கொள்வதில் பிரச்சினையுடன் இருந்தேன்.மனப்பாடம் செய்து அடுத்த நிமிஷமே மறந்து விடுவேன்.தியானம் செய்யத் துவங்கியவுடன், என் நினைவுத் திறன் மேம்பட்டது. குறைந்த நேரத்தில் அதிகம் படிக்க முடிந்தது.தேர்வு முடிவுகள் உயர்ந்தவையாக அமைந்தன! அது ஓர் பெரும் உயர்வு! என்கிறார் ஹிதான்ஷி சச்தேவ்.
இறுதியாக ஆனால் முடிவாக மிக முக்கியமானது. தியானத்தின் மூலம் தேர்வு முடிவுகள் மேம்படும், சிலருக்கு அது குறிப்பிடத் தக்க வகையில் ஒரு பெரும் உயர்வாக வெளிவரும்.முயற்சியற்ற மேம்பட்ட நினைவுத் திறன், கவனக்குவிப்பு, சாந்தமான நம்பிக்கையான மன நிலை இவற்றுடன் தேர்வைப் பற்றிய பயம் ஏன்?
கீழே தரப்பட்டிருக்கும் பை விளக்கப் படங்கள் 30 மாணவர்களிடமிருந்து எடுக்கப் பட்ட ஆய்வு முடிவு.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.