1981 ஆம் ஆண்டு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்ட, வாழும் கலை என்ற அமைப்பு கல்வி மற்றும் மனித நேய மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவது மட்டுமன்றி, மானிட சேவை மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய பிரிவுகளிலும் சொல்லற்கரிய திருப்பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பு 152 நாடுகளில் கிளைகளுடன், 37 கோடி மக்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டி வருவது இதன் ஆச்சர்யமளிக்கும் சிறப்பு
இந்த அமைப்பின் நிகழ்வுகள் அனைத்தும் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் வழிகாட்டுதலின் படியும், அமைதித்தத்துவத்தின் பிரதிபலிப்பிலும் நடைபெறுகின்றன. "நமது சமுதாய மக்களின் மனங்களை அழுத்தும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, வன்முறை களிலிருந்து விலகியிருக்கும் சமுதாயம் அமையும் வரை உலக அமைதி என்பது கைக்கு எட்டாத தேனாகவே இருக்கும் " .
மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் பல வழிமுறைகளை வாழும் கலை அமைப்பு கற்றுத் தருகின்றது. அவற்றில் மூச்சுப் பயிற்சிகள், தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளும் அடங்கும்.
இந்த வகுப்புக்கள், உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் வன்முறையில் ஈடுபடும் எண்ணம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு , அமைதி முன்னேற்றம் ஆனந்தம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும் நேர்வழிப் பாதையில் காலெடுத்து வைக்க உதவியுள்ளன. பல மனித வள மேம்பாட்டுச் செயல்திட்டங்களின் மூலம் வாழும் கலை அமைப்பு, சமுதாயங்களின் பல குழுக்களும் கூட்டமைப்புக்களும் பயன்பெறும் வகையில் நாட்டிலும் வீட்டிலும் அமைதியைப் பரப்பும் பணியில் முனைந்து செயலாற்றுகிறது. செயல்திட்டங்களின் பணிகள், விரோதிகளுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல், இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது நிவாரணப் பணிகள், நிலைத்து நிற்கும் கிராம முன்னேற்றப் பணிகள், பெண்களின் முன்னேற்றத்திற்குதவும் திட்டங்கள், கைதிகளின் புனர்வாழ்வுத் திட்டம், அனைவருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்கும் திட்டங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
சகோதர அமைப்புகள் :
வாழும் கலை அமைப்பின் கீழ் வேறு சில சகோதர அமைப்புக்களும் செயல்படுகின்றன. கலவரமும் வன்முறையுமற்ற உலகை உருவாக்குவதே அவற்றின் பொதுவான கொள்கைகளும் ஆகும். மனித முன்னேற்றத்துக்குதவும் பன்னாட்டுக் கூட்டமைப்பு (International Association for Human Values (IAHV) , வேத விஞ்ஞான் மகா வித்யா பீடம், ( Ved Vignan Maha Vidya Peeth (VVMVP),ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வித்யா மந்திர், (Sri Sri RaviShankar Vidya Mandir (SSRVM), வ்யக்தி விகாஸ் கேந்த்ரா இந்தியா(Vyakti Vikas Kendra India (VVKI),ஸ்ரீ ஸ்ரீ கிராம முன்னேற்ற செயல் திட்டம் (Sri Sri Rural Development Program (SSRDP),மற்றும் ஸ்ரீ ஸ்ரீ வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை (Sri Sri Institute of Agricultural Sciences & Technology Trust (SSIAST) ஆகியவை, வாழும் கலையின் கோட்பாடுகளை உலகளவில் பரப்ப உதவும் சில அமைப்புகள் ஆகும்.
நிறுவனக் கட்டமைப்பு:
உலகளவில் அதிகமான தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட ஒரு பன்முக அமைப்பே வாழும் கலை ஆகும். அதன் உலகத் தலைமையகம் இந்தியாவில் பெங்களூருவில் உள்ளது. உலகளவில் இந்த அமைப்பு 1989ல் வாழும் கலை நிறுவனம் என்ற பெயரில், அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் முதன் முதலில் துவக்கப் பட்டது. அதன் பிறகு பல உலக நாடுகளில் அதன் உள்நாட்டுத் துணை நிறுவனங்கள் துவங்கப் பெற்றன. வாழும் கலை அடிப்படை அமைப்பில் அறக்கட்டளை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழு உள்ளது. உறுப்பினர்களின் செயலாற்றுக் காலம் இரண்டு ஆண்டுகள். இரண்டாண்டுக்கொரு முறை மூன்றில் இரண்டு என்னும் விகிதக் கணக்கில் உறுப்பினர்கள் ஒய்வு பெறுவார்கள். அனைத்து வாழும் கலை ஆசிரியர்களும், தொடர்ந்து இருக்கும் அறக் கட்டளை உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய செயற் குழுவை தேர்ந்தெடுப்பார்கள். இந்த அமைப்பை நிர்வகிக்கும் பணியில் உதவி செய்யவும் வழி காட்டவும், ஒரு தனி அறிவுரை வழங்கும் அமைப்பை அமுல்படுத்தவும், இந்த அமைப்பின் நிர்வாகச் சட்டத்தில் வழி முறை செய்யப் பட்டுள்ளது. வெளியிலிருந்து வரும் பதிவு பெற்ற கணக்காளர் ஒருவரால், இந்த அமைப்பின் அனைத்துக் கணக்குகளும், குறிப்பிட்ட காலத்தில் சரி பார்க்கப் பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப் படுகின்றன. செலவு செய்யப் பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழி முறைகள் வகுக்கப் பட்டிருந்த போதிலும், எந்த ஒரு அறக்கட்டளை உறுப்பினருக்கும் சம்பளம் போன்ற மற்ற எந்த சலுகையும் வழங்கப் பட மாட்டாது. வாழும் கலை நிகழ்ச்சிகளிலிருந்து வரும் நிதி, நேரடியாக மனித மேம்பாட்டுச் செயல் திட்டங்களுக்காகச் செலவு செய்யப் படுகின்றன. வாழும் கலை புத்தக விற்பனை மற்றும் ஆயுர்வேதப் பொருட்களின் விற்பனையிலிருந்து வரும் தொகையும் இது போன்ற சமுதாய வளர்ச்சித் திட்டங்களுக்காகவே செலவழிக்கப் படுகின்றன.
வாழும்கலை உறுப்பினராக உள்ள அமைப்புக்கள்:
- CONGO (Conference of NGOs in Consultative Status with ECOSOC of the United Nations), Geneva and New York- CONGO- ஜெனீவா மற்றும் நியூயார்க்
- International Alliance against Hunger- பசிப்பிணிக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பு
- UN Mental Health Committee and UN Committee on Aging, New York- ஐக்கிய நாடுகளின் மன நிலை ஆரோக்கியம் மற்றும் முதியோர்களைப் பேணும் செயல் திட்டக் குழு- நியூயார்க்
- International Union for Health Promotion and Education, Paris- கல்வி மற்றும் உடல்நலனை மேம்படுத்தும் பன்னாட்டு ஒன்றியம்- பாரிஸ்
- NGO Forum for Health, Geneva- உடல்நலனை மேம்படுத்தும் அரசு சாரா கூட்டமைப்பு, ஜெனீவா
வாழும் கலை தினமாகக் கொண்டாடப் படும் நாட்கள் :
- மனித மேன்மைக் கோட்பாடுகள் வாரம்-லூசியானா 23.02.2007
- மனித மேன்மைக் கோட்பாடுகள் வாரம்- பால்டிமோர் 23/03/2007 முதல் 31/03 2007 வரை
- மனித மேன்மைக் கோட்பாடுகள் வாரம்-- கொலம்பியா மார்ச் 2007
- வாழும் கலை நிறுவன நாள் சிராகூஸ் -07/05/2004