ஆன்மீகத்தை அடி வேராகக் கொண்ட, வாழும் கலை நிறுவனம், நமது பூமியினைப் பற்றி ஆயிரக் கணக்கான மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. பூமியானது பாறை, மணல், நீர் இவற்றினால் ஆனதாக இருந்தாலும் அதற்கு, நமது கவனம் மற்றும் கவனிப்புக்கு பதிலளிக்கும் வகையில் துடிப்பாக வாழும் அடையாளத்தை ஆன்மீகம் அளித்திருக்கின்றது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் தொலை நோக்கில் உந்தப் பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் குழுக்களாக உலகெங்கும் இருந்து, பல சுற்றுச் சூழல் திட்டங்களை முன்னிருத்தி யிருக்கின்றனர். அவை : பசுமை இயக்கம் மூலம் பெரிய அளவிலான மரம் நடுதல் , நீர் சேகரித்தல், மாசுபட்ட நதிகளைத் தூய்மைப் படுத்துதல் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும், செலவே இல்லாத வேதியல் பொருட்களற்ற, பொருளாதரத்தை மேம்படுத்தும் மற்றும் உயிர்பொருள் நிறைந்த வேளாண்மை, ஆகியவை ஆகும்.
மேலும் வாழும்கலை நிறுவனம் இயற்கையைப் பாதுகாப்பின் அவசியத்தைக் கண்டுணர்ந்து, வீட்டிலும் பள்ளியிலும் அப்பண்புகள் இளைஞர் மனங்களில் விதைக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. "ஆழமான வேர்கள் அகலமான பார்வை" என்று அழைக்கப் படும் விழிப்புணர்வு திட்டங்கள் இந்த நீண்ட நாள் பணித்திட்டங்களின் முக்கியமான அங்கங்களாக விளங்குகின்றன.