இக்கருத்துப் பட்டறை 13 முதல் 18 வரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கானது ஆகும். பதின்ம வயதினர் இப்புவியில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாவர்.அவர்களது படைப்பாற்றல், கனவுகள், உலகையே ஆராயும் ஆர்வம் ஆகிய குணங்கள் பெரியவர்களாக அரும்பும் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்தவை. சிறு நுட்பக் கருவிகள் கணினி விளையாட்டு , இணையம் ஆகியவற்றில் விருப்பம் இவர்களது அறிவுத்திறனின் குறிகாட்டிகள் ஆகும். ஆயினும், இப்பதின்ம வயதினர் பெற்றோருக்கு ஒரு சவாலாகி விடக் கூடிய எதிர்மறை செல்வாக்கிற்கு இரையாகி விடவும் முடியும்.
உங்கள் பதின்ம வயதினரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் கருத்துப் பட்டறை பெற்றோர் தங்களுடைய பதின்ம வயதுக் குழந்தைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது நடத்தைக்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து கொள்வதற்கு உதவுகின்றது.மேலும் இது பெரியவர்கள் கண்டுகொள்ளாமலிருக்க முனையும் பதினம்வயதினரின் எண்ணங்கள், பின்னர் அக்குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. சுருக்கமாக, உங்கள் பதின்ம வயதினரைத் தெரிந்து கொள்ளுங்கள் பட்டறை தற்கால பதின்ம வயதினரை திறம்பட வளர்க்கத் தேவையான நுட்பத் திறன்களைப் பெற்றோருக்குத் தருகின்றது.
இது பெற்றோருக்கான மூன்று மணி நேர கருத்துப் பட்டறை.
இதன் பயன்கள்:
- உங்கள் குழந்தையின் பதின்ம வயது மாற்றத்தைக் கையாளுதல்
பதின்ம வயதுக் குழந்தையின் வாழ்க்கையில் உடல், மற்றும் உணர்ச்சிபூர்வமாக இணைந்திருத்தல்.
- நவநாகரீகத் தோற்றத்துடன் தனக்குச் சமமானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அவர்களது தேவையைப் புரிந்து கொள்ளல்
- உங்கள் குழந்தை உணர்ச்சி ரீதியாக ஆரோக்கியமாக இருக்க உதவுதல்
- அவர்கள் தங்களுடைய வாழ்க்கைப்பாதையினைத் தேர்ந்தெடுக்க நல்ல வழி காட்டி யாகவும்,நண்பராகவும்இருத்தல்.