ஓர் அறிமுகம்:
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் ஒரு மனித நேயத் தலைவர், ஆன்மீக குரு, மற்றும் அமைதித் தூதுவர் ஆவார். மன அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குதல் என்னும் இவரது தொலைநோக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களை சேவைத் திட்டங்களிலும் வாழும் கலைப் பயிற்சித் திட்டங்களிலும் ஒருங்கிணைய வைத்துள்ளது.
துவக்கம்:
1956 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் பிறந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஓர் உயர் திறன் வாய்ந்த அபூர்வக் குழந்தை. தனது நான்காம் வயதில் பகவத் கீதையை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் பெற்று அடிக்கடி தியானத்திலும் ஆழ்ந்திருந்தார். அவரது முதல் ஆசிரியரான சுதாகர் சதுர்வேதி மகாத்மா காந்தியுடன் நீண்ட நாள் தொடர்புடையவர். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வேத சாஸ்திரங்களிலும் இயற்பி யலிலும் பட்டங்கள் பெற்றவர்.
வாழும்கலை மற்றும் மனித மதிப்புக்களுக்கான சர்வ தேச சங்கம் (IAHV) ஆகியவற்றின் தோற்றம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகாவில் ஸ்ரீஸ்ரீ அவர்கள் பத்து நாட்கள் மௌனத் தில் இருந்தார். அந்த சமயத்தில் அற்புதமான சுதர்சனக் க்ரியாவை அவர் கண்டறிந்தார். அதுவே அனைத்து வாழும்கலை பயிற்சிகளிலும் முக்கிய மையப் பகுதியாக அமைந்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வாழும் கலை நிறுவனத்தை ஒரு சர்வ தேச, லாப நோக்கமற்ற கல்வி மற்றும் மனித நேய அமைப்பாகத் துவக்கினார். அதன் கல்வி மற்றும் சுய வளர்ச்சித் திட்டங்கள் மன அழுத்தத்தை நீக்கும் மற்றும் நல்லுணர்வு அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகவும், இப்பயிற்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை மக்களுக்கு என்றில்லாமல் உலகெங் கிலுமுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளவையாக விளங்குகின்றன.
1997 ஆம் ஆண்டில், ஸ்ரீஸ்ரீ அவர்கள் நிலையான வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், மனிதநேயம் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கவும் வாழும் கலை நிறுவனத்துடன் இணைந்து, சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும், மனித மதிப்புக்களுக்கான சர்வ தேச சங்கத்தைத் துவக்கினார். இந்தியா,ஆப்ரிக்கா தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இவ்விரு சகோதர நிறுவனங்களின் தன்னார்வத் தொண்டர்கள் ஒன்றிணைந்து கிராமப் புறங்களில் நிலையான வளர்ச்சியை உருவாக்கத் தலைமை தாங்கி, இதுவரையில் சுமார் 40,212 கிராமங் களைச் சென்றடைந்திருக்கின்றனர்.
எழுச்சியூட்டும் தொண்டு மற்றும் உலகமயமாக்கப் பட்ட ஞானம் :
குறிப்பிடத் தக்க மனிதநேய தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் திட்டங்கள், பல்வேறு வகைப் பட்ட பின்னணியிலுள்ள மக்களுக்கு அதாவது- இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப் பட்டவர்கள், தீவிரவாதத் தாக்குதல் மற்றும் போர்களில் உயிர் பிழைத்தவர்கள், சமூகத்தில் ஒதுக்கப் பட்ட மக்களின் குழந்தைகள் போன்றவர்களுக்கு உதவி அளிக்கின்றன. அவரது செய்தியின் சக்தியானது ஆன்மீக அடிப்படையில் ஓர் தொண்டு அலையினை எழுப்பி, தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய மாபெரும் மக்கள் கூட்டம் உலகெங்கும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் இத்திட்டங்களை வழிநடத்துமாறு செய்கின்றது.
ஆன்மீகத் தலைவர் என்னும் முறையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் யோகா மற்றும் தியானம் என்னும் மரபுகளை மீண்டும் தூண்டி 21 ஆம் நூற்றாண்டிற்குத் தகுந்த வகையில் அவைகளை வழங்கியுள்ளார். பழமையான ஞானத்தினை மீட்டெடுத்ததுடன், தனி மனித மற்றும் சமூக மாற்றத் திற்காக சில புதிய பயிற்சிகளையும் அளித்துள்ளார். அவற்றில் சுதர்சனக்ரியாவும் அடங்கும். இது கோடிக்கணக்கான மக்கள் அழுத்தத்திலிருந்து விடுபட்டு, உள்ளே தேங்கியிருக்கும் ஆற்றலை வெளிக் கொண்டு வரவும் அன்றாட வாழ்வில் அமைதி காணவும் உதவியிருக்கின்றது. வெறும் 31 ஆண்டு காலத்தில் அவரது திட்டப் பணிகள் 152 நாடுகளிலுள்ள 370 மில்லியன் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.
அமைதியின் திருவுருவம்
அமைதித் தூதுவர் என்னும் முறையில், ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் சச்சரவுகளுக்குத் தீர்வு காண ஒரு முக்கிய மான பங்கினை வகித்து, உலகெங்கிலும் பொது மன்றங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் தன்னுடைய வன்முறையற்ற தொலை நோக்கினை பரப்பி வருகின்றார். அமைதி மட்டுமே பிரதான கருத்தாகக் கொண்டு நடுநிலையாளராக கருதப் படும் ஸ்ரீ ஸ்ரீ, போர்காலங்களில் மக்களுக்கு பெரும் நம்பிக்கை நட்சத்திரமாகின்றார் . இராக், ஐவரி கோஸ்ட் ,காஷ்மீர், மற்றும் பீகாரில் எதிரெதிரான அணியினரை பேச்சுவார்த்தைக்கான மேஜைக்கு ஒன்றாக அழைத்து வந்த பெருமை இவரையே சேரும். கிருஷ்ணதேவராயரின் 500வது முடிசூட்டு விழா நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசால் வரவேற்புக்குழு தலைவராக நியமிக்கப் பட்டார். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் அமர்நாத் கோவில் குழுவிலும் உறுப்பினராக ஜம்மு காஷ்மீர் அரசால் நியமிக்கப் பட்டார்.
தன்னுடைய பூர்வாங்க பணிகள், மற்றும் சொற்பொழிவுகளின் மூலம் இடைவிடாது மனிதப் பண்புகளை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும், மனித நேயம் என்பதே தலையாய அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார். சமயங்களிடையே நல்லிணக்கம் பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்த கல்வி முறை ஆகியவையே சமய வெறிக்கு தீர்வு என்னும் அவரது முயற்சிகளே இப்பூமியில் நிலையான அமைதியை அடையும் வழிமுறைகளாகும்.
ஒரு உலகக் குடும்பம் அதாவது உள்ளும் புறமும் அமைதி காண முடியும்; தொண்டு மற்றும் மனித நேயப் பண்புகளை விழிப்புறச் செய்வதன் மூலம் அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயத்தை அமைக்க முடியும் என்னும் செய்தியினைத் தாங்கிய அவரது பணிகள் உலகெங்கும் இன, தேச, சமய வரம்புகளைக் கடந்து பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வினைச் சென்றடைந்திருக் கின்றன.