ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஞானம்

 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அருளிய அஷ்டவக்ர கீதை குறித்த ஞானம் அளிக்கும் அசாதாரணமான தொடர்சொற்பொழிவுகள் 1991 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அஷ்டவக்ர கீதை, மனிதனின் சித்தம், அகங்காரம், முரண்பாடு ஆகியவற்றின் தன்மையை, குருவால் மட்டுமே அருளப்படவேண்டிய ஆத்ம தரிசனத்தை ஆழமாக ஆராய்கிறது. ஸ்ரீ ஸ்ரீ மிகுந்த தேர்ச்சியுடன் பண்டைய அறிவு, புராணக் கதைகள், யதார்த்த ஞானம் ஆகியவற்றை ஒன்றாகக் கோர்த்து தன்னுடைய ஈர்க்கும் பேச்சு வன்மையுடன் அஷ்டவக்ர கீதையை ஒரு விலையுயர்ந்த சாதனமாக்கி, உண்மையின் தேடலில் இருப்பவர்களுக்குத் துணை செய்கிறார். அஷ்டவக்ர கீதை ஞானத்தொடர் சொல்லப்படும் அருகில் உள்ள மையத்தைக் கண்டுபிடிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

பதஞ்சலி யோக சூத்திரங்கள்: “ விஷயங்கள் என்னும் கூண்டில் அடைபட்டிருக்கும் மனிதனை விடுவிப்பதே பதஞ்சலி யோகத்தின் நோக்கமாகும். மனம் என்பது விஷயம் சார்ந்த வஸ்துவின் ஒரு உயர்ந்த வடிவமாகும். மனிதன், சித்தம் அல்லது அகங்காரம் என்னும் இந்த விரிக்கப்பட்ட வலையிலிருந்து விடுபட்டு தூய்மையான வடிவமாக ஆக வேண்டும். "- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். பதஞ்சலி யோக சூத்திரங்கள் என்பது அறிவியல், கலை, தத்துவம் ஆகியவற்றை விளக்கும் ஒரு தொகுப்பு யோகா ஆகும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்தப் பண்டைய நூல்களை ஆய்வு செய்து, யோகாவின் கொள்கைகளை இன்றைய வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் தமது எளிமையான, மற்றும் ஒளி பொருந்திய வர்ணனையில் விளக்குகிறார். விருப்பு வெறுப்புகளைக் கையாள்வதில், பற்றுதல் இல்லையென்றாலும் வலிமையுடன் வாழ்க்கையைத் தொடர்தல், அறிவுடனும் பயிற்சியுடனும் மனதின் போக்கை எதிர்கொள்தல், விழிப்புணர்வை உருவாக்குதல் ஸ்ரீ ஸ்ரீ யின் வர்ணனைகள் இந்த தலைப்புகளை உள்ளடக்கியதாய் உள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் எண்ணற்ற யோகா ஆர்வலர்கள் இந்த உரைகளின் எழுத்து மற்றும் வீடியோ தொடர்கள் மூலம் இந்த பேச்சுக்களைக் கேட்டு மகிழ்கின்றனர்.   பதஞ்சலி யோக சூத்திர ஞானத்தொடர் சொல்லப்படும் அருகில் உள்ள மையத்தைக் கண்டுபிடிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

 

"புன்னகை, சிரிப்பு மற்றும் தியானம் மனித வாழ்வின் முன்னுரிமைகள்"

                                                                                                                            ~ "ஸ்ரீ ஸ்ரீ"

உங்கள் மின்னஞ்சல் :