கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கலந்து கொள்ள, அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மையத்தில் சேர்ந்து, இந்த வகுப்புகளின் பயன்களைப் பெறலாம்.
வாழும்கலை ஆனந்த அனுபவப் பயிற்சி வகுப்பு
உங்களுக்குள் விரிந்து பரவி, திறக்கப்படாமல் இருக்கும் நிகழத் தேவையான உங்களால் செய்து முடிக்கப்பட வேண்டியவை, கண்டுபிடிக்கப்பட காத்திருக்கின்றன. வாழும் கலை பயிற்சி யின் மூலமாக, இந்த சக்தித் திறன்கள் விடுவிக்கப்பட்டு, நீங்கள் யார் என்னும் பெரும் தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களை விடுவிக்கக் கூடிய, தனிச்சிறப்புமிக்க, சக்தி பொருந்திய, இயற்கையின் இயைபுடன் கூடிய, சுதர்சன க்ரியா என்னும் பயிற்சியின் அற்புத அனுபவத்தைப் பெறுவீர்கள். வாழும் கலை வகுப்பின் பங்கேற்பாளராக, உங்கள் வாழ்க்கையின் மீதி நாட்களை பயனுடன் வாழ்வதற்கு உதவும் பல சக்தி வாய்ந்த செய்முறைப் பயிற்சிகளைப் பெறுவீர்கள்.
தியானக் கலை வகுப்பு – சகஜ சமாதி தியானம்
சகஜ சமாதி தியானம் என்று அழைக்கப் படும் தியானக்கலை வகுப்பு மேலும் ஒரு சக்தி பொருந்திய எளிமையான முறை, விழித்திருக்கும் மனதின் இயற்கை வடிவான மௌனத்தின், அமைதியின் ஆழத்தை அனுபவிக்க வழிகாட்டுகிறது. சமஸ்கிருதத்தில், சகஜ – அதிக முயற்சி இன்றி, எளிமையாக ; சமாதி – அமைதி, மௌனம், என்பது பொருள். விழிப்புணர்வுநிலையில் எண்ணங்கள் தோன்றுமிடத்தில், இருக்கும் அமைதி – நடத்தல், உறங்குதல், கனவு காணுதல் இவைகளுக்கு அப்பாற்பட்ட நிலை. இது ஒரு எல்லையில்லாத சக்தியை அறிவாற்றலை, படைக்கும் ஆற்றலை, சேர்த்துவைக்கும், முடிவில்லா அமைதியின் நிலையான இடமாகும். இந்த சகஜ சமாதி தியானப் பயிற்சியில், உங்கள் மனம் எளிதாக இந்த சமாதி நிலையை அடையும். இந்த தியானத்தை முடிக்கும்போது சக்தியை, தெளிவான சிந்தையை, படைக்கும் திறனைப் பெற்று, அனைத்தையும் விட மிக முக்கியமாக ஆழ் மனதில் ஆழ்ந்த அமைதியுடன் இருப்பதை உணர்வீர்கள்.
யெஸ் ப்ளஸ் வகுப்பு
யெஸ் ப்ளஸ் வகுப்புகள் பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. ஒருவருக்குள்விரிந்து பரவி, திறக்கப்படாமல் இருக்கும் சக்தியை அனுபவத்தில் அறிந்துகொள்ள அனுமதிக்கிறது.
யெஸ் ப்ளஸ் பயிற்சியின் மூலமாக, இந்த சக்தித் திறன்கள் விடுவிக்கப்பட்டு, நீங்கள் யார், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்னும் பெரும் தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களை விடுவிக்கக் கூடிய, தனிச்சிறப்புமிக்க, சக்தி பொருந்திய, இயற்கையின் இயைபுடன் கூடிய, சுதர்சன க்ரியா என்னும் பயிற்சியின் அற்புத அனுபவத்தைப் பெறுவீர்கள். பயனுள்ளதாக, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குரிய சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்பதையும், நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு உயர்ந்து வளரும் அளவில் தன்னம்பிக்கை அதிகரிப்பதையும் கண்டுகொள்வீர்கள்