பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்ச்சிகள்
எப்படி உணர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே உணர ஒரே தீர்வு !
உங்களது தற்போதைய உணர்ச்சிக்குத் தகுந்த தியானத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றீர்களா ? கீழ் கண்டவற்றிலிருந்து தேர்ந்தெடுங்கள்
அழுத்தமாகவும் விரக்தியாகவும் உணருகின்றீர்களா? இந்த நாளின் களேபரத்திலிருந்து விடுபட்டு அமர விருப்பமா?
இந்த வழிகாட்டுதல் இணைந்த தியானத்தினை செய்து அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்.
எரிச்சலும் குழப்பமும் உள்ளதா? சற்று தனியாக அமர்ந்து இளைப்பாற விரும்புகிறீர்களா?
இந்த உணர்ச்சிகளை 20 நிமிஷ நேரம் தியானம் செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.
களைப்படைந்தே களைத்து விட்டீர்களா? புத்துணர்வு பெற வேண்டுமா? வசந்த கால ஆனந்தத்தை அடைய வேண்டுமா?
இந்த 20 நிமிஷ தியானத்தினைச் செய்யுங்கள்.
சாதாரண மகிழ்வுடன் இருக்கிறீர்களா? அதிக ஆனந்தம் பெற வேண்டுமா?
20 நிமிஷ நேரம் பேரின்ப தியானப் பயணம் செய்யுங்கள்
தியானம் எவ்வாறு உதவுகின்றது?
தியானம் செய்வதில் நீங்கள் புதியவராக இருந்தாலும் பயிற்சி விட்டுப் போயிருந்தாலும், அல்லது ஒழுங்காக தியானம் செய்பவராக இருந்தாலும், வழிகாட்டுதல் இணைந்த தியானப் பயிற்சி உங்களுக்குப் பெரிதும் உதவக் கூடும்அமைதி, ஆனந்தம், ஆற்றல், செயல்திறன்.எப்படி வேண்டுமானாலும் நீங்கள் உணர உங்கள் தியான சக்தியினைத் தட்டுங்கள்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால், வழிகாட்டுதல் இணைந்த தியானப் பயிற்சி, அதை உங்களுக்கு எளிதாக்கும்.ஓர் வல்லுனரின் குரலில் கிடைக்கப் பெறும் தியானம் உங்களை முயற்சியின்றி தியானம் செய்ய வைக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கண்களை மூடி அமைதியான அந்த 20 நிமிட நேரத்தில் உங்களை வழிநடத்தும் அக்குரலை ஏற்றுக் கொள்வதுதான்.
எந்த நோக்கமும் சரியாக இன்றி அமைதியற்று உணருகிறீர்களா? உணர்ச்சிகள் உங்களுடைய சொந்த வாழ்க்கை மற்றும் பணி வாழ்வினை துன்புறுத்து கின்றனவா? எவ்வாறு தியானம் அன்றாட பிரச்சினைகளை தாண்டி வரவும், உங்கள் வாழ்வு மேம்படவும் உதவும் என்று கற்றுக் கொள்ள கீழே தரப்பட்டிருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.