எங்களது அதிகாரமளிக்கும் உருப் படிவம்
இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சி
உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான இளைஞர்கள் தொகை உள்ளது. இந்திய மக்கட் தொகையில் 40 % இளைஞர்களாவர்.(தேசிய இளைஞர் கொள்கையில் வரையறுக்கப் பட்டபடி) நமது இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சியானது, அவர்களை முன் மாதிரி யாக்குகின்றது.
நம் நடைமுறை பயிற்சி தொடர்கள் கிராமங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களிலுள்ள இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரை சமூக மற்றும் பொருளாதார அளவில் சுய சார்புள்ளவர் களாகவும், நம்பிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் களாகவும் உருமாற்றுகின்றன. அவர்களது மனிதப் பண்புகளை புதிப்பித்து, அவர்களது மன திறனுக்குப் புத்துணர்வு அளித்து, உடல் நலனை மேம்படுத்தி, அவர்களது தொழில் திறனை வளர்த்து, இயற்கை வளங்களை நிலையான மேலாண்மை செய்யும் உணர்வூட்டி நாங்கள் இவ்வுரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம்.
நமது இளைய சமுதாயத்தினரே நமது வருங்காலம். வாழும் கலையின் திட்டங்களுக்கு ஆதரவளித்து, இந்தியாவின் வருங்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.
எங்களது சாதனைகள்: (இளைஞர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் பயிற்சி- இந்தியா)
- 110,000 க்கு மேற்பட்ட கிராமப் புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கின்றோம்
- 40000 க்கு மேற்பட்ட கிராமப் புற வளர்ச்சித் திட்டங்களை மேற் கொண்டிருந் திருக்கின்றோம்
- 2,3 மில்லியன் மரங்கள் நட்டிருக்கின்றோம்
- 2.5 மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும் 48000 க்கு மேற்பட்ட சுகாதார முகாம்கள் 23000 மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கின்றோம்.
- 55 முன்மாதிரி கிராமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.