நமது இளைய மொட்டுக்களுக்கு தங்கள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் தங்களுடைய மதிப்பெண்கள் மூலம் பெருமையடைய வைக்க சில விரைவுக் குறிப்புக்கள். தியானம் கவனக் குவிப்பை கூட்டி, உங்கள் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.
இன்று வரலாற்று வகுப்பு. உங்கள் பாடப் புத்தகம் திறந்திருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் ஒரு வார்த்தை கூட படிக்க வில்லை. ஆசிரியர் உங்கள் மூளைக்குள் செல்லாத ஏதோ ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.உடலளவில் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள், மனமோ வேறெங்கோ இருக்கிறது.
இது அன்றாடம் பள்ளியில் நடக்கும் நிகழ்வு அல்லவா? உங்களுக்குப் பிடிக்காத பாடத்தினை விடுத்து, சுவாரஸ்யமான வேடிக்கையோ,மர்ம நாவலோ, இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த மந்தமான பிடிக்காத ஆய்வு அறிக்கையில் ஒரு அத்தியாயம் கூடப் படிக்காமல் நமக்குப் பிடித்த தொலைக் காட்சி நிகழ்ச்சி இனிக் கண்கொட்டாமல் பார்ப்பது என்பது முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கவனக் குவிப்புக் குறை என்பது சாதரணமாக ஆசிரியர்களும் பெற்றோரும் எப்போதும் கூறும் புகார், எப்போதும் அது நமது எதிரியும் கூட. மேலும், அடுத்த நாள் தேர்வு என்னும் நிலையில், இரவு நாம் படித்துக் கொண்டிருக்கும்போது நமக்கு அது தேவை ஆனால் அது நம்மைத் தவிர்த்து விடும். சரி, இப்போது இந்தப் பிரச்சினைக்கு ஓர் உடனடித் தீர்வு உள்ளது.-ஓர் எளிய பயிற்சி அதுதான் தியானம்.
சீரான தியானம் சலிப்பான பணிகளில் கூட, நமது கவனத்தை அதிகரித்து, நிலைநிறுத்தி, வைப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. அத்தகைய ஓர் ஆய்வு,பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில், செய்யப் பட்டு, சில நிமிஷ நேர தியானம் கூட கவனம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று கூறுகின்றது.
முக்கியமான நேரங்களில் கவனம் குவிக்க எவ்வாறு தியானம் நமக்கு உதவும் என்பதற்கு சில குறிப்புக்கள் உள்ளன.அவை கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
#1 உங்கள் பாடத்தை விரும்புங்கள். அது உங்கள் மதிப்பெண்களைக் கூட்டும்.
இதுதான் ரகசியம். உங்கள் பாடத்தை நீங்கள் விரும்பத் துவங்கியவுடன், நீங்கள் அதில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள்.வேதியல் பாடம் பிடிக்கவில்லையெனில், அந்தப் புத்தகத்தை உங்கள் முன்னால் வைத்துக் கொண்டு,"நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்" என்று கூறிக் கொண்டிருங்கள்.! பின்னர் நிகழும் மாற்றத்தைப் பாருங்கள்! கிரிக்கெட்டோ, அல்லது திரைப் படமோ காண்பதற்கு முயற்சி எடுக்கிறீர்களா என்ன? அது தானாகவே நிகழ்கிறது அல்லவா?அதே போன்றுதான், உங்கள் படிப்பு விஷயமும்.விரும்புங்கள், தானாகவே கவனம் குவியும். விளைவு: மேம்பட்ட மதிப்பெண்கள் மற்றும் படித்தரம்..
#2 தினமும் யோகப் பயிற்சி செய்யுங்கள். அது சலிப்பினை விலக்கும்.
யோகா ஆசனங்கள் உதாரணமாக சூரிய நமஸ்காரம் அல்லது சர்வாங்காசனா மூளையில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக மேம்பட்ட சுறுசுறுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் மனம் பணியிலிருந்து விலகிச் செல்லாது.உங்கள் செயல்பாடும் மேம்பட்டு இருக்கும்.
#3 பிராணாயாமம் செய்யுங்கள்.வேடிக்கையில் அதிக நேரம் செலவிடுங்கள்
இரண்டரை நிமிஷ நேரம் செய்யும் பிராணாயாமம் மூன்று மணி நேரத்திற்கு உங்கள் நினைவுத் திறன் மற்றும் கவனக் குவிப்பை மேம்படுத்தும் என்பதை நம்ப முடியுமா? ஆம். வாழும் கலையில் கற்றுத் தரப்படும் பிராணாயாமப் பயிற்சி, அதைச் செய்கிறது. நினைவாற்றலை அதிகப் படுத்தி,உங்கள் படிப்பினை முடிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்கிறது.நீங்கள் அதிக நேரம் விளையாடவும், நண்பர்களுடன் செலவழிக்கவும் உதவுகிறது. இது மிக்க நல்லது அல்லவா? சேருங்கள் எஸ் பிளஸ் பயிற்சியில்.
#4 சுதர்சனக் க்ரியாவினை உங்கள் அன்றாட வீட்டுப் படமாக ஏற்றுக் கொள்ளுங்கள், அப்போது வீட்டுப் பாடம் வேடிக்கையாக மாறும்.
சரியான நேர மேலாண்மை, நல்ல மதிப்பெண்கள்,போட்டியை சமாளிக்கும் பலம், கோபம் குறைதல் இன்னும் எதையெல்லாம் விரும்புகிறீர்களோ அதையெல்லாம் தர வல்லது சுதர்சனக் க்ரியா இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் உருவாக்கப் பட்டது. இது மன எண்ணங்களின் அளவினைக் குறைத்து, எப்போது மிகத் தேவையோ அப்போது கவனக் குவிப்பை ஏற்படுத்திட மிகவும் உதவுகிறது.
#5 ஓய்வற்ற மன நிலையினை அகற்ற,ஆரோக்கிய உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்
கவனத் திறனை மேம்படுத்த ஆரோக்கிய உணவு உதவுகிறது.இனிப்புகள், சாக்க லேட்டுகள் ,ஐஸ் க்ரீம்,பிற சத்தற்ற உணவுகளை உண்ணும்போது உங்கள் மனம் இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கும். அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. அல்லவா?எனவே என்ன உண்கிறீர்கள் என்பதில் சற்றுக் கவனமாக இருங்கள்.அதிக சர்க்கரை அதிக காரம் உள்ளவற்றைத் தவிர்த்து விடுங்கள். பொரித்த சத்தற்ற உணவையும் குறையுங்கள். அவை உங்களைச் சோம்பேறியாக்கி, முக்கியமாக மதிய வேளையில் வீட்டுப் பாடத்தை செய்ய விடாமல் தடுக்கும்.புதிய பழங்கள், காய்கறிகள், பழரசங்கள், சாலடுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: ஆயுர்வேத மருந்துகளும் கவனக் குவிப்புக்கு உதவும்.உதாரணமாக தேவவாட்டி, பிரம்மி ஆகியவை .ஆனால் ஓர் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா மருத்துவரைக் கலந்தாலோசித்து, மேலும் வழி காட்டுதலைப் பெறுங்கள்.
#6 நன்றாகத் தூங்குங்கள், அப்போது வரலாற்று வகுப்பில் தூங்க மாட்டீர்கள்
சரியான ஓய்வின்மை உங்களை படபடப்பாக்கி உங்கள் பணியில் கவனம் செலுத்த விடாமல் செய்யலாம். எனவே உங்கள் உடலும் மனமும் நன்றாக ஓய்வெடுக்கின்றனவா என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். எட்டு மணி நேரம் உறங்குங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் அல்லது மதிய உணவிற்கு முன்னர்,20 நிமிடம் தியானம் செய்யுங்கள். இது உங்களுக்குத் தேவையான ஆழ்ந்த உடல்,மன ஓய்வினை அளிக்கும். உணவிற்கு பின்னர் கண்ணயருவதைத் தடுத்து, உங்கள் கவனக் குவிப்பு திறன் மேம்படும்.
நீங்கள் பள்ளியில், கல்லூரி வளாகத்தில், வீட்டில், ஏன் உங்கள் நண்பர்களுடன் பூங்காவில் கூட தியானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களுடன் உங்கள் உறவு மேம்படும். கூடுதலாக, தியானம் செய்தல் உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைத்து,மனத் தெளிவினை ஏற்படுத்தும்.
தியானம் செய்து வரும் சில பதின்வயதினர் என்ன கூறுகிறார்கள்?
நினைவில் கொள்ளுங்கள்!
தியானம் தானாகவே நிகழ்கின்றது.தியானம் செய்யும்போது,கவனத்தைக் குவிக்காதீர்கள்.
"தியானம் என்பது கவனக் குவிப்பு என்பது பொதுவான கருத்து. அதற்கு மாறாக தியானம் கவனக் குவிப்பின்மையாகும்.நல்ல கவனமும், கூர்மையும் சீரான தியானத்தின் பலன்களாகும். தினமும் தியானம் செய்தால், அலைபாயும் உங்கள் மனம் நிலைப்பட்டு, கையில் இருக்கும் பணியில் குவியும்.
சஹஜ் சமாதி ஆசிரியரான பானுமதி நரசிம்மன்," தியானம் அலைபாயும் மனதை ஆச்சர்யப் படும் மனமாக ஆக்கி விடும்" என்கிறார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.
By Pritika Nair
Based on inputs by Bharathy Harish, Sahaj Samadhi Meditation Teacher, and Shreya Chugh, National Director for Art of Living Youth Empowerment Programs.
Feeling lack of motivation or restlessness? Are emotions taking a toll on your personal and work life? Fill in the form below to learn more about how meditation can aide you in overcoming daily issues and improve your life.