வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டு பிடியுங்கள்
வாழ்வின், மற்றும் படைப்பின் ஞான ரகசியங்களைக் கண்டுபிடியுங்கள்
விடுதலையை அனுபவித்து உங்கள் இருப்பின் உள்ஆழத்தை ஆராயுங்கள்
ஞானம் பெறுகின்ற பாதையில் வழிகாட்டுதல் மூலம் மென்மையாக அடியெடுத்து வையுங்கள்
முழுமையான உண்மையினை,மிக உயரிய ஞானத்தை மற்றும் குருவின் அண்மையில் ஒப்பில்லா பேரின்பத்தை அனுபவியுங்கள்
ஆன்மீகப் பாதியில் அடையும் அனுபவங்கள் நிச்சயமானவை, ஆயினும் வெளிப்படுத்த முடியாதவை
படிப்படியாக ஓர் ஞானப் பயணம்
குணப்படுத்தவும் மற்றும் உங்கள் உடலுக்கும் மனத்திற்கும் சக்தி அளிக்கவும்.
உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒத்திசைந்து குணமடையுங்கள்
உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒத்திசைந்து தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியான சுதர்சனக் க்ரியாவைக் கற்றுக் கொள்ளுதல் இதன் முதல் படியாகும்.இது, சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அழுத்தங்களை இயற்கையாக, திறம்பட வெளியேற்ற அனுமதிக்கின்றது.
உங்கள் வரம்பற்ற இயல்பு நிலையில் ஓய்வெடுங்கள்
அமைதி நடைமுறையில் மௌனப் பயிற்சிப் பழக்கம் என்பது உணர்வுடன் வெளிக்கவனச் சிதறல்களை உள்ளிழுத்தல் ஆகும். இது உடல்,மன மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கு பல்வேறு பாரம்பரியங்களில் காலங்காலமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நம் மனதை பல்வேறு பயிற்சி செயல்முறைகளில் பங்கேற்றுக் கொள்வதன் மூலம், அசாதாரணமான சாந்தம் மற்றும் புதிப்பிக்கப் பட்ட உற்சாகம் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்விற்கு திரும்ப எடுத்துச் செல்கிறோம்.
உங்கள் இருப்பின் ஆழங்களைக் கண்டறியுங்கள்:
தியானத்தில் ஆழ நிலையினை அனுபவிக்க தகுதி பெற்ற ஆசிரியரிடமிருந்து ஓர் மந்திரத்தைக் கற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.மனமும் நரம்பு மண்டலமும் ஆழ்ந்த அமைதியில் சில கணங்கள் லயித்திருக்கும்போது நமது அமைப்பையும் முன்னேற்றத்தையும் தடை செய்யும் தொகுதிகள் கரைந்து விடும். அன்றாடம் சீறாகச் செய்யப் படும் இப்பயிற்சி முழுவதுமாக ஒருவரது வாழ்க்கைத் தரத்தினை மாற்றியமைத்து அமைப்பையே நாள் முழுவதும் சாந்தம், ஆற்றல் மற்றும் விரிவடைந்த விழிப்புணர்வு ஆகியவற்றுடன் இருக்க வகை செய்யும்.
ஆசீர்வதிக்கவும், ஆற்றுப்படுத்தவும் ஆற்றலைப் பெறுங்கள்
ஆசீர்வாதப் பயிற்சி , மிகுதியுணர்வு, மனநிறைவு, மற்றும் திருப்தி ஆகியவற்றினை நமது அனுபவத்தின் முன்னிலைக்கு எடுத்து வருகிறது. மன நிறைவு மெய்யுணர்வின் ஓர் அழகான குணம். அது ஆசீர்வதிக்கும் திறனையளித்து, ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் இருக்கின்றது.
ஆசி வழங்கும் திறன் என்பது அக்கறை மற்றும் பகிர்தல் தொண்டாற்றுதல், உதவியை நாடுபவருக்கு அமைதி ஒத்திசைவு ஆகியவற்றை எடுத்து வருதல் ஆகிய குணகளின் முழுமையான வெளிப்பாடு ஆகும். நீங்கள் வழங்கும் ஆசி ஒருவரது வாழ்க்கையை மாற்றக் கூடும். பலர் அதிசய அனுபவங்களை அறிவித்துள்ளனர்.
நன்றியில் மலருங்கள் ..
மலர்ந்த மெய்யுணர்வின் மிகத் தூய்மையான மற்றும் சுத்திகரிக்கப் பட்ட வெளிப்பாடு நன்றியுணவே ஆகும். குரு பூஜை என்பது விலைமதிப்பற்ற ஞானத்தைக் காலம்காலமாக காத்து வந்த புனித பாரம்பரிய குருமார்களுக்கு நமது நன்றியினைத் தெரிவிப்பது ஆகும்.
ஓர் சிறு துளி நீர் சமுத்திரத்துடன் தொடர்பு கொள்ளும்போது, சமுத்திரத்தின் வலிமையை உணர்கின்றது. அது போன்று நாம் நமது பாரம்பரியக் குருமார்களுடன் தொடர்பு கொள்ளும்போது அது எல்லையற்ற வலிமையை அளிக்கும் மூலமாகிறது.