மூலத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்
விழிப்புணர்வினை அதன் இயல்பான நிசப்த ஆழத்திற்கு செல்ல அனுமதிக்கும் ஒரு முயற்சியற்ற சக்தி வாய்ந்த பயிற்சியே தியானக் கலை பயிற்சியாகும். இந்தப் பயிற்சி சஹஜ் சமாதி தியானம் என்றும் அழைக்கப் படுகின்றது.
சமஸ்க்ருதத்தில் சஹஜ் என்றால் முயற்சியற்ற என்று பொருளாகும். சமாதி என்பது நிசப்தமான ஆயினும் உயிரோட்டமுள்ள விழிப்புணர்வு நிலை என்பதாகும். அதாவது விழிப்பும்,உறக்கமும், கனவுமற்ற ஓர் நிலை. அந்நிலையில் அளவற்ற ஆற்றல் அறிவுத் திறன் படைப்பாற்றல் எல்லையற்ற அமைதி மற்றும் சாந்தி கிடைக்கின்றன.
உங்களது தியானப் பயிற்சியில் மனம் முயற்சியின்றி இந்த சமாதி நிலையினை அடைகின்றது. தியானம் நிறைவுற்ற பின்னர் ஆற்றல், தெளிவு, படைப்பாற்றல், தவிர முக்கியமாக ஆழ்ந்த உள் அமைதி ஆகிய பண்புகளை பெறுவீர்கள்.
எளிதாகக் கற்கலாம்
தியானப் பயிற்சி, ஓர் எளிய மனப் பயிற்சியாகும். எளிதாக யார் வேண்டுமானாலும் கற்கலாம். 20 நிமிட நேரமே எடுத்துக் கொள்ளக் கூடிய தினசரி தியானப் பயிற்சியில் உங்கள் வாழ்க்கையே மாற்றம் காணலாம். தினமும் இரு முறை செய்ய 20 நிமிட நேரம் இல்லையே என்று எண்ணினால் கவலைப் பட வேண்டாம். இந்த தியானத்தினால் கிடைக்கும் மனத்தெளிவு உங்களுடைய திறமையில் குறைந்த முயற்சியில் கூடுதலாக ஏற்படக் கூடிய ஆற்றலை கணக்கிட்டுப் பாருங்கள்.
தனிப்பட்ட அறிவுரைகள்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருவரால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அறிவுரைகள் வழங்கப் படுவதால் கற்பது எளிதாக இருக்கும். இதை ஓர் புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு இந்த முயற்சியற்ற முறையில் தியானப் பயிற்சியினை சுருக்கமாக சீராக, அதிகபட்சப் பயன்களுடன் கற்றுத்தர, அனைத்து தியானப் பயிற்சி ஆசிரியர்களும் கடினமான பாடத் திட்டத்தின் கீழ், பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நேரிடையாகப் பயிற்றுவிக்கப் பட்டு தகுதி பெற்றிருக்கின்றனர். உண்மையில் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்கால குருமார்கள் கற்பித்த அதே பாரம்பரிய முறையிலேயே இவர்களும் பயிற்றுவிக்கப் பட்டுத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
பயன்கள்
சமாதி நிலையில் அதாவது ஆழ்ந்த தியான நிலையில் ஆற்றல் நீடித்திருக்கும் பேரின்பம் ஆகியவற்றைப் பெறுகின்றீர்கள்.உங்களை மேலும் மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்வதால் உங்களது இருப்பிலேயே அன்பு ஒளி வீசுகின்றது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வாழும் கலையின் நிறுவனர்.
- ஆழ்ந்த உள் அமைதியை அனுபவிக்கின்றீர்கள்
- சுய விழிப்புணர்வு, அதிகத் தெளிவு ஏற்படுகின்றது.
- அதிக ஆற்றல் உருவாகின்றது.
- படைப்பாற்றல் பெருகுகின்றது.
உங்கள் உள்ளூர் ஆசிரியரிடம் தியானப் பயிற்சி நடைபெறும் விபரங்களைக் கேட்டறியுங்கள்