முன் எப்போதுமில்லாத ஆனந்தத்தை அனுபவியுங்கள்

  • நாம் நமது வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்ளவே , அல்லவா?

  • துரதிர்ஷ்ட வசமாக நாம் விரும்புவதை எப்போதுமே எளிதாக அடைவதில்லை..

  • ஆனந்த அனுபவப் பயிற்சி உங்களுள் இருக்கும் வற்றாத மகிழ்ச்சியின் மூலத்துடன் உங்களை முயற்சியின்றி மீண்டும் இணைக்கின்றது.

 மகிழ்ச்சியின் திறவுகோல் உங்கள் நாசிக்கருகே உள்ளது

 

மூச்சின் ரகசியங்களை கண்டறியுங்கள்

வாழும் கலை ஆசிரியர் யாரையேனும் எப்படி அசைக்க முடியாத புன்முறுவலை அடைவது என்று கேளுங்கள். மிக எளிமையான ஆனால் ஆழமான ஞானத்தை அடைவீர்கள்- உங்கள் மூச்சினைப் பயன்படுத்தி அசைக்க முடியாத புன்முறுவலை அடைவது அவ்வளவு எளிதானதா என்ன? பார்க்கலாம் வாருங்கள்.

எப்போதாவது உணர்ச்சிகளுக்கு  ஏற்றாற்போன்று மூச்சின் வகை மாறுபடுவதைக் கவனித்திருக்கின்றீர்களா? நீங்கள் கோபமாக இருக்கும்போது, மூச்சின் லயம் எவ்வாறு உள்ளது? மேலோட்டமான மற்றும் குறுகிய மூச்சுக்கள். நீங்கள் தளர்வாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது மூச்சு எவ்வாறுள்ளது? நீண்ட ஆழமான மூச்சுக்களை எடுக்கின்றீர்கள். வெளிப்படையாகத் தெரியும் முடிவு என்னவென்றால், மூச்சு நாம் எவ்வாறு உணருகின்றோமோ அதற்குத் தகுந்தார்ப் போல மாறுகின்றது. அப்படியாயின் நாம் எதிர்மறை உணர்ச்சிகளை மூச்சினைப் பயன்படுத்தி மாற்ற முடியுமா? ஆம், உறுதியாக .

வாழ்க்கையின் இயற்கையான ஆனந்த லயத்தினை சுதர்சனக் கிரியா மூலம் மீண்டும் பெறுங்கள்.

 

பழமையான ஞானம் சமகால பயன்பாட்டு முறையில்:

உடலின் நச்சுக்கள் மூச்சு வழியாக வெளியேறுகின்றன. பெருமளவு உணர்ச்சி மற்றும் உடல் அழுத்தங்களை வெளியேற்றிய பின்னர் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமே மாறி விடும்.

வாழும் கலை ஆனந்த அனுபவப் பயிற்சி ஒரு தனித்துவம் வாய்ந்த ஆழமான மூச்சுப் பயிற்சி. உடல்,மனம் மற்றும் ஆத்மாவை அவற்றின் இயற்கையான லயத்திற்கு மீட்டெடுக்கும் கருவியான சுதர்சனக்ரியா கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையினை மாற்றி இருக்கின்றது.

அதன் தனித்துவம், அதன் செயலாக்கத்தில் மட்டுமல்ல, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பத்து நாட்கள் மௌனத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அதன் தோற்றத்திலும் ஆகும்.

முன்னெப்போதுமில்லாத ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க, சுதர்சனக் கிரியா வுடன் பிற சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சிகள், யோகா, தியானம் இவையனைத்தும், ஆனந்த அனுபவப் பயிற்சியில் கற்பிக்கப் படுகின்றன.

 

மூழ்குங்கள், ஆனந்தப் பயிற்சினை அனுபவியுங்கள்

நீரில் மூழ்கியெழாமல் நீச்சல் எப்படியிருக்கும் என்று உண்மையில் அறிய முடியுமா? தேர்ச்சி பெற்ற நமது ஆசிரியர்கள் ஆனந்தப் பயிற்சியில் உங்களைக் கைப் பிடித்து அழைத்து, ஒவ்வொரு படியிலும் மென்மையாக வழி நடத்தி அழைத்துச் செல்வர்.

வயது, பின்புலம், உடல் நிலை போன்ற எந்த நிலையிலும் நீங்கள் இதைச் செய்து அனுபவிக்கலாம். மனிதராக இருந்தால் மட்டும் போதும் !

சில மணி நேரங்களே நடத்தப் படும் ஆனந்த அனுபவப் பயிற்சியில் நீங்கள் ஏற்கும் பயிற்சிகள், நடைமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றால் முயற்சியின்றி பஞ்சு போன்றாகி, அமைதியான உடல் நலனுடன் , மிக்க அதிக அறிவாற்றலுடன், மகிழ்ச்சி மிகுந்தவராக வீடு திரும்புவீர்கள். இவற்றை மேலாண்மை செய்யத் தேவையான பயிற்சிகளும் உங்களுக்கு அளிக்கப் படும்.

மகிழ்ச்சியான மனமே உங்களைச் சரியான முடிவுகள் எடுக்கும் அமைதி மிக்கவராக ஆக்குகின்றது. உங்கள் வாழ்க்கைத் தரமும் மேம்படுகின்றது.

கீழ்கண்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆனந்த அனுபவத்துடன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்.

  • பங்கேற்றவர்களின் அனுபவங்கள்...
  • நான் இழந்தது / நான் பெற்றது
  • “வாழும் கலை பயிற்சி தான் என் வாழ்வில் நான் பெற்ற மிக பெரிய பரிசாகும்..இங்கு யோக நடைமுறைகளும், ஞானமும் மிகவும் அன்பு கலந்த வகையில் கற்று தரப்படுகிறது. நான் மிகவும்மகிழ்ச்சியுடனும், வலிமையுடனும்,அமைதியுடனும் இருக்கிறேன். இந்த உலகமே வாழும் கலை பயிற்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது." - டேனியல் மெண்டஸ், எழுத்தாளர், ஹூஸ்டன், டெக்சாஸ்.

    "“நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயிற்சியை பெற்றது என் அதிர்ஷ்டம் என்று தான் கூற முடியும். மேலும் இந்த பயிற்சியை கற்று கொண்ட எவரும் மகிழ்ச்சியின்றி வாழ்ந்ததை நான் பார்த்ததில்லை. நான் பார்க்க முடிந்ததெல்லாம் அளவற்ற மகிழ்ச்சி, அளவு கடந்த ஞானம். மேலும் தங்கள் வாழ்வில் நடந்த அனைத்து எதிர்மறையான செயல்களையும் ஆர்வத்துடன் மாற்றிக் கொள்ள முனைந்த திறன்." - கொரடானா திஹோமிரோவிக் பிரஞ்சு பேராசிரியர், குரோஷியா.

    "இந்த வாழும் கலை பயிற்சியானது பண்டைய கால ஞானத்தை நவீன யுகத்தில் நமது அன்றாட வாழ்வின் தேவைகளோடு இணைக்கிறது.இன்றைய ஓய்வில்லாத மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் இந்த வாழும் கலை பயிற்சியை பயின்று அதனை இந்த நவீன யுக வாழ்வில் நமது உணர்ச்சிகளை கையாளுவதில் நாம் உபயோகிக்கலாம்”. - ராவுல் ஆல்வாரெஸ், தொழில்நுட்ப நிபுணர், பராகுவே

  • நான் இழந்தவை:

    • மன அழுத்தம்
    • தெளிவாக குறிப்பிட முடியாத நீண்டு தொடர்ந்திருக்கும் நல்லதல்லாத மனநிலை
    • ஆற்றல் இல்லாத நேரங்களில் அனைத்தும் தவறான திசையில் செல்வதை போல் உணர்தல்.
    • எதிர்மறை எண்ணங்கள்/ அனுபவங்கள் மனதிற்குள்ளேயே அழுத்துதல்
    • ஒரு கூட்டத்தினரின் முன்பாக பேச தன்னம்பிக்கையின்றி இருத்தல்.
    • எண்ணங்களை ஆட்கொள்ளும் ஆதாரமற்ற பயம்.
    • விடாமல் தொடரும் என் உடல்வலி.

    நான் பெற்றவை:

    • நடைமுறை பயிற்சிகள் என்னுள் இருந்த புதிய பரிணாமத்தை எனக்கு காட்டியது.
    • எப்போதும் குறையாத மகிழ்ச்சியும் ஆர்வமும்
    • ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான மனம்.
    • பேச்சிலும் செயலிலும் எளிமை மற்றும் தன்னம்பிக்கை
    • செயல்திறன் அதிகரிப்பு - நான் விரும்பும் செயல் செய்வதற்கு நிறைய நேரம்
    • என் எதிர் காலத்தை தீர்மானம் செய்ய கூடிய ,என் முடிவுகளில் எனக்கு இருந்த தெளிவு.
    • எனக்குள் ஏற்பட்ட அபரிமிதமான ஆற்றல் என்னை ஒரு இளைஞனைப் போல் உணரச்செய்தது