Tabbed Content for Art of Living Program Page Tamil
- பங்கேற்றவர்களின் அனுபவங்கள்...
- நான் இழந்தது / நான் பெற்றது
“வாழும் கலை பயிற்சி தான் என் வாழ்வில் நான் பெற்ற மிக பெரிய பரிசாகும்..இங்கு யோக நடைமுறைகளும், ஞானமும் மிகவும் அன்பு கலந்த வகையில் கற்று தரப்படுகிறது. நான் மிகவும்மகிழ்ச்சியுடனும், வலிமையுடனும்,அமைதியுடனும் இருக்கிறேன். இந்த உலகமே வாழும் கலை பயிற்சிக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது." - டேனியல் மெண்டஸ், எழுத்தாளர், ஹூஸ்டன், டெக்சாஸ்.
"“நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பயிற்சியை பெற்றது என் அதிர்ஷ்டம் என்று தான் கூற முடியும். மேலும் இந்த பயிற்சியை கற்று கொண்ட எவரும் மகிழ்ச்சியின்றி வாழ்ந்ததை நான் பார்த்ததில்லை. நான் பார்க்க முடிந்ததெல்லாம் அளவற்ற மகிழ்ச்சி, அளவு கடந்த ஞானம். மேலும் தங்கள் வாழ்வில் நடந்த அனைத்து எதிர்மறையான செயல்களையும் ஆர்வத்துடன் மாற்றிக் கொள்ள முனைந்த திறன்." - கொரடானா திஹோமிரோவிக் பிரஞ்சு பேராசிரியர், குரோஷியா.
"இந்த வாழும் கலை பயிற்சியானது பண்டைய கால ஞானத்தை நவீன யுகத்தில் நமது அன்றாட வாழ்வின் தேவைகளோடு இணைக்கிறது.இன்றைய ஓய்வில்லாத மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் இந்த வாழும் கலை பயிற்சியை பயின்று அதனை இந்த நவீன யுக வாழ்வில் நமது உணர்ச்சிகளை கையாளுவதில் நாம் உபயோகிக்கலாம்”. - ராவுல் ஆல்வாரெஸ், தொழில்நுட்ப நிபுணர், பராகுவே
நான் இழந்தவை:
- மன அழுத்தம்
- தெளிவாக குறிப்பிட முடியாத நீண்டு தொடர்ந்திருக்கும் நல்லதல்லாத மனநிலை
- ஆற்றல் இல்லாத நேரங்களில் அனைத்தும் தவறான திசையில் செல்வதை போல் உணர்தல்.
- எதிர்மறை எண்ணங்கள்/ அனுபவங்கள் மனதிற்குள்ளேயே அழுத்துதல்
- ஒரு கூட்டத்தினரின் முன்பாக பேச தன்னம்பிக்கையின்றி இருத்தல்.
- எண்ணங்களை ஆட்கொள்ளும் ஆதாரமற்ற பயம்.
- விடாமல் தொடரும் என் உடல்வலி.
நான் பெற்றவை:
- நடைமுறை பயிற்சிகள் என்னுள் இருந்த புதிய பரிணாமத்தை எனக்கு காட்டியது.
- எப்போதும் குறையாத மகிழ்ச்சியும் ஆர்வமும்
- ஆரோக்கியமான உடல் மற்றும் ஆரோக்கியமான மனம்.
- பேச்சிலும் செயலிலும் எளிமை மற்றும் தன்னம்பிக்கை
- செயல்திறன் அதிகரிப்பு - நான் விரும்பும் செயல் செய்வதற்கு நிறைய நேரம்
- என் எதிர் காலத்தை தீர்மானம் செய்ய கூடிய ,என் முடிவுகளில் எனக்கு இருந்த தெளிவு.
- எனக்குள் ஏற்பட்ட அபரிமிதமான ஆற்றல் என்னை ஒரு இளைஞனைப் போல் உணரச்செய்தது