ஆரோக்கியமான தலை முடிக்கு ஆயுர்வேதம்

ஆரோக்கியமான தலை முடிக்கு ஆயுர்வேதம்

 

 உலக அளவில் பிரசித்தி பெற்ற , பூரணமான உடல் நலத்தினை நல்கக் கூடியதாகிய, ஆயுர்வேதம், இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த  மருத்துவ முறைகளில் ஒன்றாகும். ஒரு தனி மனிதனின் உடல் நலத்தினை, தேக நிலையை,  அவனது தலை  முடியின் ஆரோக்கி யமே பிரதிபலிக்கிறது. ஆயுர்வேதத்தில், ஆஹாரா - விஹார் [ உணவு முறை மற்றும் வாழ்க்கை  முறை ]  ஆகிய இவையே  நம் உடம்பு மற்றும் தலை முடியின் நலத்தினைச் சரிசெய்யக்கூடிய,இரு பெரும் காரணிகள் . ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் [ சீரான உணவுப் பழக்கம் இன்மை ] , சத்தற்ற உணவு, உடல் நலக்  குறைவு , வைட்டமின் மற்றும் தாதுக்களின் குறைபாடு ஆகிய இவை  தலை முடியின் தரத்தினைப் பாதிக்கக் கூடியவை. இவற்றால்  பொடுகு, இளவயது வழுக்கை ,இள  வயது நரை முதலானவை ஏற்பட  வாய்ப்புண்டு.

தலை முடியின் நல் ஆரோக்கியத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை வழிகாட்டுதல்களை  ஆயுர்வேதம் வழங்குகிறது. நீண்ட, பளபளப்பான ,ஆரோக்கியமான தலை முடிக்கு ,பின்கண்ட எளிய வழிமுறைகளை முயற்சித்துப் பார்க்கவும்.  

  1. தலைமுடியின் வேர்க்கால்களை தவறாது மசாஜ் செய்தல்

தலை முடியையும், வேர்க்கால்களையும் தவறாது சுத்தம் செய்ய வேண்டும்.

தலைமுடியில் அடைப்புகளையும் அரிப்பினையும் தவிர்க்க , தலை  முடியையும் அதன் வேர்க்கால்களையும்  சுத்தமாக வைத்திருத்தல்  அவசியம். மென்மையான மூலிகை ஷாம்பூவினால்  சுத்தம் செய்யவும். கடின மான ஷாம்பூவினை உபயோகிப்பதன் மூலம், வேர்க்கால்கள் வறண்டு  போவதோடு,தலைமுடியும் பாழடைய வாய்ப்பு உண்டு. தலைமுடியை  சுத்தம் செய்ய,வெதுவெதுப்பான, சுத்தமான நீரினை உபயோகித்து, இயற்கையான கண்டிஷனரையும் உபயோகிக்கவும். முடியை தானாக  உலர விடவும்.[ ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல.]. சரியான கால அளவில் தலைமுடியின் நுனிகளை கத்தரித்து [ trim ] சமன் செய்வதன் மூலம், நுனிகள் பிளவுபடுவதையும், இயற்கையாக  நிகழும் தேய்மானத்தையும் தவிர்க்கலாம். ஒழுங்காக தலைமுடியை சுத்தம் செய்வதும்,தலை வாருவதும் மிக,மிக  முக்கியம். சீப்பு கொண்டு நன்கு வாருவதால் , வேர்க்கால்களிலுள்ள  எண்ணைச் சுரப்பிகள்  தூண்டப்படுகின்றன. இயற்கையான இந்த  எண்ணெய்ப்பசை, தலைமுடியை ஆரோக்கியத்துடனும், பளபளப் பாகவும் வைக்க உதவுகிறது.

 

2. உணவுப் பழக்கத்தினை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும்.

வெளிச்சமான , அமைதியான ஓர் இடத்தில் அமர்ந்து, உணவு உண்ண  வேண்டும். உணவு உண்ணும் போது வேறு எந்த செயலும்  தவிர்க்கப்  பட வேண்டும்.உணவு உண்ணும் போது , அது நன்கு ஜீரணிக்க, அதிக மான நீரை  அருந்துதல் கூடாது. உண்ட அரை மணி நேரத்திற்குப் பிறகே தண்ணீர் அருந்துவது நல்லதோர் பழக்கம். எண்ணெய்  பதார்த்தமோ, காரமான மற்றும் அசைவம் உட்கொண்டாலோ,வெது வெதுப்பான நீரை அருந்தவும். இம்முறைகளைப்  பின்பற்றுவதால், உடலினை  "ஆமா" [நச்சுப் பொருள்] விலிருந்து  பாதுகாக்கலாம். உணவிலுள்ள சத்துக்கள், உடலிலுள்ள செல்களையும், தசைகளையும் சென்று சேராமல் , நச்சுப் பொருட்கள் தடுக்கின்றன.அதிக அளவில் டீ , காபி,ஆல்கஹால் அசைவம் உட் கொள்வதும், புகை பிடிப்பதும், நிறுத்தப்பட வேண்டும். வறுத்த, எண்ணெய்பசையுள்ள , காரமான,புளிப்பான மற்றும்  அமிலத்தைச்  சுரக்கச் செய்யும் உணவுகளை உண்பது, கெடுதலை  விளைவிக்கும். இரசாயன மற்றும் செயற்கையான  மருந்துகள் தவிர்க்கப்படவேண்டும். ஆகவே தலைமுடி சரியான முறையில் பாதுகாக்கப்பட நாம் உண்ணும்  உணவு கவனிக்கப்பட வேண்டும்.

  1. சத்தான உணவு 

சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவு மிக,மிக அவசியம். இள வயதி  லேயே தலைமுடி உதிர்தல், இளநரை ஆகியவற்றை தவிர்க்க, தலை  முடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையானவை, வெள்ளை எள் , புதிய  தேங்காய், பச்சை காய்கறிகள், முழு தானிய உணவு, பேரீச்சை, திராட்சை , தயிர், முளை  கட்டிய பீன்ஸ் வகைகள் , கொட்டைகள், விதைகள் மற்றும்  ஆரோக்கியமான கொழுப்புகளாகிய  நெய், எண்ணெய்  ஆகியவற்றினை உபயோகித்தல் அவசியம்.    வாசனை மசாலாக்களையும் [ மிளகு, சீரகம், கிராம்பு ஏலம் முதலா னவை ] வாசனையான மூலிகைகளையும் சேர்த்து உணவு சமைக்குமாறு  ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. அவை ஜீரணசக்தியை மேம் படுத்து வதோடு, திசுக்களில் உள்ள நச்சுக்களை அகற்றவல்லது. ஹரித்ரா[ மஞ்சள் ],  மரீசா [ மிளகு ] , வெந்தயம், தனியா மற்றும்  சீரகம் ஆகியவற்றை தொடர்ந்து உபயோகிக்குமாறு ஆயுர்வேதம்  கூறுகிறது.இவை நறுமணம் கொடுப்பதோடு, ஜீரணத்திற்குத்  தேவை யான அக்னியை மேம்படுத்துகிறது. அமலாகி [ emblica officionalis ]  ஹரிடாகி [ terminaaliachebula ], பெருங்காயம்,பிரிங்கராஜ் மற்றும் அவ்வப்பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், முக்கியமாக சிட்ரஸ் பழங்கள் உண்ணுமாறு ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. இவை ஜீரணத்தை மேம்படுத் துவதோடு, எல்லா வயதினருக்கும் நோய்  எதிர்ப்பு சக்திக்கும், தோஷ  நிவர்த்திக்கும் துணை புரிகிறது.  

 

  1. தேவையான அளவு  தூக்கம் :

ஆயுர்வேத முறைப்படி, நம் உடல் நலத்திற்கு தேவையான அளவு  உறக்கம்  மிக,மிக அவசியம்.சரியற்ற, முறையற்ற உறங்கும் பழக்கங்கள்,நம் உடல் செயற்பாடு எனும் கடிகாரத்திற்கு  ஊறு விளைவிக்கிறது. உறக்கத்தின் போது தான் நம் உடல் , திசுக்களைப் பழுது பார்க்கிறது. நம் உடல் கட்டுமான அமைப்பினைச் சரிசெய்கிறது. இரவு 10 மணிக்கு  முன்னதாக உறங்கச் செல்லவேண்டும். உறக்கத்திற்கு 2 மணி  முன்பாக இரவு உணவை முடித்தல் வேண்டும். இரவு உணவு இலேசாக, காரம், மசாலா  முதலானவை குறைவாக இருப்பதோடு, ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு டம்ளர் பால் குடிப்பது நல்ல உறக்கத்தைக் கொடுக் கும் என நம்பப்படுகிறது. போதுமான தூக்கம் இன்மை தலைமுடியின்  ஆரோக்கியத்தினைக்  கெடுத்துவிடும்.

  1. மன அழுத்தத்தைக் கையாளுதல் :

தொடர்ந்து மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது, அதிகமான  தலைமுடி உதிர்வு, இளநரை, வறட்சியான, கவர்ச்சியற்ற, உயிரற்றதான  தோற்றத்தினையுடைய தலை முடியாக காணப்படுகிறது. மூலிகை  தேநீரில்.பிராம்மி [ bacopa monnieri ] , மண்டூகபர்னி  [ centella asiatica ] , அஸ்வ கந்தா [ nithuania somnifera ] மற்றும் ஜடமான்சி [ nardo stachys jatamansi ] ஆகிய இவற்றில் ஏதாவது ஒன்றினையோ அல்லது பலவற்றினையோ சேர்த்து  குடிப்பதனால் இயற்கை முறையில் மன அழுத்தத்தினைக் கையாள இயலும். ஓய்வு  எடுக்கவும்,தளர்த்திக் கொள்ளவும்.. அதற்கான யோகப் பயிற்சிகள் செய்வதோடு,தியானப் பயிற்சியும் செய்தால் , மனஅழுத்தத்தினைக்  கட்டுப்படுத்தலாம், மருத்துவ குணமுடன் கூடிய மூலிகை தைலத்தினை  உபயோகித்து, மயிர்க் கால்களைத் தேய்த்த்துவிடுவதால்  மனம் ஓய்வு  பெற்று, தளர்வடைகிறது. மற்றும் மனத்தின் ஏற்ற, இரக்கத்தினையும் கட்டுப்படுத்த இயலுகிறது.

 

                                                   ----------------------------------------