சுவையான வேனிற்கால குளிர் பானங்கள்
வேனிற்காலம் தொடங்கவும், சூரியன் மெல்ல,மெல்ல மேலெழும்ப, தாகத்தாலும், சோர்வினாலும் யாவரும் துன்புறுகின்றனர். முக்கியமாக பூமத்திய ரேகை மீதோ அல்லது அதற்கு அருகிலோ இருக்கும் நாடுகளில் வாழ்வோருக்கு வேனிற்காலம் மிக,மிக கஷ்டமான பருவ காலமாகும். வெய்யிலின் உஷ்ணத்தைத் தணிக்க , யாவரும் குளிர்ந்த நீரையோ அல்லது குளிர் பானங்களையோ நாடுகின்றனர். தாகம் தணிக்க,பண்டைய காலம் தொட்டு, இந்திய நாட்டில் சில முழுமையான இயற்கையான பானங்கள் இருந்து வருகின்றன,
கடுக்கும் ருசி மிக்க எலுமிச்சை பானம் : [ lemonade ]
எலுமிச்சை பழங்கள் கிடைத்தால் பானம் தயாரிப்பது, மிக,மிக நல்லது. வைட்டமின் - c, புரதம் மற்றும் மாவுச்சத்து நிறைந்த கால்ப் பந்து [ golf ] டைனமோக்கள் அவை என அவற்றைக் கூறலாம்.இரத்த அழுத்தம், கொலஸ்டிரால் அளவினைக் கட்டுப்படுத்தல், சிறுநீர்ப் பாதை தொற்றுக் கான நிவர்த்தி, மன அழுத்தம் நீக்கம் முதலான உடல் நலனுக்கான பயன்பாடுகளை அளிக்கிறது. எலுமிச்சை சாறு தோலினைப் பாதுகாக் கிறது.சூரிய வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தினைப் போக்கவும், தோல் சுருக்கங்களைத் தவிர்க்கவும் துணை புரிகிறது. ஜீரணத்திற்குத் துணை புரிவதோடு, சக்தியை உடனடியாக அளிக்கவல்லது, ஆன்டிஆக்சிடெண்ட் குணநலன்கள் உடையது. சூரிய வெப்பத்தினால் உடலில் ஏற்படும் நீர் பற்றாக் குறையினின்றும் எலெக்ட்ரோலைட்
பவுடர் போன்று காக்கவல்லது. சப்ஜா விதைகளை [ sabja seeds - basil ] பானத்துடன் சேர்க்கையில் குளுமை மேம்படுகிறது.
எச்சரிக்கை:
அல்சர்களும் [ புண்கள் ] , பற்களில் பிரச்னைகளும் உள்ளவர்கள் , மருத்துவரின் ஆலேசனையின் கீழ் எலுமிச்சை பானம் அருந்தவும்.
தேவையானவை:
சப்ஜா விதைகள் : 2 மேஜைக் கரண்டி
சர்க்கரை :1 1/2 மேஜைக் கரண்டி
எலுமிச்சை சாறு : 1 மேஜை கரண்டி
இஞ்சி சாறு - 1/2 மேஜை கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
சப்ஜா விதைகளை 1/2 மணி நீரில் ஊற வைத்து வடிகட்டவும். எலுமிச்சை சாறு சர்க்கரை, இஞ்சி சாறு, தண்ணீர் இவற்றினைச் சேர்த்து, நன்கு கலக்கவும். சப்ஜா விதைகளை சேர்த்துப் பரிமாறவும் .
சுவையான லஸ்ஸி [ மோர் ] :
பண்டைய காலம் தொட்டு இருந்து வருவதும், வெயில் காலத்தில் விரும்பி உண்ணப் படுவதுமான குளிர் பானம் லஸ்ஸி- மோர். இது ப்ரோபயாடிக், வைட்டமின் B-12, மற்றும் எலெக்ட்ரோலைட் நிரம்பியது. உடலில் நீர்ப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதோடு, சோர்வை நீக்கி வயிற்றுப் பிரச்னைகளை சமனப்படுத்துகிறது. ஜீரணத்திற்கு உதவுகிறது. ஜீரணப் பாதையில் அதிகம் இருக்கும்
கொழுப்பினையும், விறுவிறுப்பூட்டும் மசாலாக்களையும் துடைக் கிறது.
கீழே கூறப்பட்டுள்ள செய்முறையில் காணப்படும் கறிவேப்பிலையும், சீரகமும் குளுமையை சேர்ப்பவை.
புதிய தயிர் 1/2 டம்ளர்
தண்ணீர் 1 டம்ளர்
கருவேப்பிலை 2 ஈர்க்கு
சீரகப்பொடி 1/4 தேக்கரண்டி
உப்பு 1/4 தேக்கரண்டி - [ சுவைக்கேற்ப ]
கொத்துமல்லி இரண்டொரு தழை
செய்முறை :
அதிகாலையில் ஓர் மண் பாண்டத்தில் வெது வெதுப்பான பாலில் சிறிது தயிர் ஊற்றி,வைக்கவும். கருவேப்பிலையை சற்றே அரைத்துக் கொள்ளவும். தயிர், கருவேப்பிலை விழுது, நீர், சீரகப்பொடி, உப்பு யாவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
கொகும் ஷர்பத் :
பண்டைய காலத்ததும் , நம் பாட்டி காலம் முதல் இருந்து வருவதுமான ஓர் பானம் கொகும் ஷர்பத். கொகும் பழங்களின் அரசன் எனப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்து காணப்படுகிறது.
செல்கள் புதுப்பிக்கப்படுவதற்குத் துணைபுரிகிறது. பித்தத்தைத் தணிப்பதுடன், மலச்சிக்கல் , ஒவ்வாமை மற்றும் அமிலத் தன்மையைக் குறைக்கப் பயன்படுகிறது.
எச்சரிக்கை :
கொகும் பழங்களை ஓர் எல்லைக்குட்பட்டே உண்ணவும். கொகும் உண்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகே பால் / பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்ணவும்.
தேவையானவை:
கொகும் 10 துண்டுகள்
சர்க்கரை 2 மேஜைக் கரண்டி
உப்பு 2 மேஜைக் கரண்டி
சீரகப்பொடி 1/4 மேஜைக் கரண்டி
தண்ணீர் 1 டம்ளர்
பல்ஸா 1 மேஜைக் கரண்டி
செய்முறை:
கொகும், வறுத்த சீரகப்பொடி, சர்க்கரை மற்றும் உப்பினைக் கலந்து விழுதாக்கிக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி விழுதினைக் கலந்து, பல்ஸா
கொண்டு அலங்கரிக்கவும். இந்த ருசியான பானங்கள் மட்டுமின்றி , பித்தத்தைத் தணிக்க இளநீர் மற்றும் தர்பூஸ் உண்ணவும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதும் உடலின் தண்ணீர் பற்றாக்குறையை ஈடு செய்வ தோடு சக்தியுடன் இருக்கவும் உதவுகிறது.
>>>>>>>>>>>>>>>>>>>