அன்பின் அறிகுறிகள் யாவை?

அன்பின் அறிகுறிகள்  யாவை?

 

அன்பின் அறிகுறிகள் இதோ !

  1. நீங்கள் ஒருவரை விரும்பும்போது அவரிடம் எந்தத் தவறையும் காண மாட்டீர்கள். அப்படி ஏதேனும் தவறிருந்தாலும்  அதனை " சரி! எல்லோரும் செய்யக் கூடியதுதான் ! " என்று கூறி ஏற்றுக் கொள்வீர்கள்.
  2. நீங்கள் விரும்புபவருக்கு போதுமான அளவு செய்யவில்லையென்றே கருதுவீர்கள். மேலும் மேலும் செய்ய விரும்புவீர்கள்.
  3. அவர்கள் எப்போதும் உங்கள் மனதில் நிறைந்திருப்பர்.
  4. சாதாரண விஷயங்கள் கூட அசாதாரணமானவை ஆகி விடும். உதாரணமாக ஓர் குழந்தை தன் பாட்டியைப் பார்த்துக் கண் சிமிட்டுவது கூட அதிசயமான  ஓர் நிகழ்வாகக் கருதப் படும்.
  5. உங்களுக்கு மட்டுமே நீங்கள் விரும்புபவர் சொந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள்
  6. சிறிய விஷயங்களுக்கு கூட காயப் படுவீர்கள்.

 

நீங்கள் ஒருவரை விரும்பும்போது அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவர்கள்  மிகச் சிறப்பானவற்றையே அடைய வேண்டும் என்று விரும்புவீர்கள்.

ஒருவருக்கு இல்லாததையே நீங்கள் வாழ்த்துவீர்கள் அல்லவா?

பெஸ்ட் விஷஸ் என்று நீங்கள் வாழ்த்தும்போது அவர்கள் பெஸ்ட் ஆக தற்போது இல்லையென்பதையே குறிப்பிடுகிறீர்கள் !

நான் கூற விரும்புவது என்னவென்றால், இத்தருணம்தான் (Now) பெஸ்ட்.

இதை நீங்கள் கண்டுணரும்போது நாளை  இதை விடச் சிறப்பாக அமையும்.