ஆனந்தத்தின் ஐந்து ரகசியங்கள்

ஆனந்தத்தின் ஐந்து ரகசியங்கள்

ஒரு ஞானி ஒரு பலகையில்  ஒரு கோடு வரைந்து அதைத் தொடாமல் மற்றும் அழிக்காமல் அந்தக் கோட்டின் அளவைக் குறைக்குமாறு  தன் சீடர்களிடம் கூறினார். நீங்கள் அதை எப்படி செய்வீர்கள்? அதைத்  தொடாமல் சுருக்க வேண்டும். அறிவார்ந்த ஒருவர் (மாணவரைப் பற்றி குறிப்பிடுகிறார்) அந்தக் கோட்டின் கீழ் நீண்ட மற்றொரு கோடு  வரைந்தார். எனவே, ஏற்கனவே உள்ள கோடு  தானாகவே குறுகியதாக ஆனது. இதிலுள்ள  பாடம் என்ன வென்றால், உங்கள் கஷ்டங்கள் மிகப்பெரியதாக தோன்றினாலும், உங்கள் கண்களை உயர்த்துங்கள், ஏனென்றால் உங்கள் கஷ்டங்களின் மீதே நீங்கள்  கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் உங்களைவிட மோசமான நிலையில் இருப்பவர்கள் மீது கண்களை  செலுத்தினால், நீங்கள் நினைத்தபடி உங்கள் சுமை மோசமாக இல்லை என்று நீங்கள் திடீரென்று உணருவீர்கள். உங்களிடம் சில பெரிய பிரச்சினைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், பெரிய பிரச்சினை கொண்டவர்களை பாருங்கள். திடீரென்று, என் பிரச்சினை மிகவும் சிறியது , அதை நான் நிர்வகிக்க முடியும் என்னும் நம்பிக்கையை அடைவீர்கள்.

 

எனவே முதலாவதாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது முதன்மையான இடம் பெற்றிருக்க வேண்டும்.  இப்பெரிய உலகெங்கும்  பெரிய பிரச்சினைகள் இருப்பதைக் காண வேண்டும். பின்னர், உங்கள் பிரச்சினைகள் சிறியதாகத் தோன்றும். உங்கள் பிரச்சினைகள் சிறியதாகத் தோன்றும் தருணத்தில், நீங்கள் அதை சமாளிக்க அல்லது அதைத் தீர்க்க ஆற்றல், மற்றும் நம்பிக் கையை பெறுவீர்கள். எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமெனில்,  அதிகமாகத் தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

 

இரண்டாவதாக, உங்கள் சொந்த வாழ்க்கையை பாருங்கள். கடந்த காலத்தில், உங்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அவைகள் அனைத்தும் கடந்து போய் விட்டன. இதுவும்  கூட கடந்து போகும் .அதை வெல்ல ஆற்றல் மற்றும் சக்தி உங்களுக்கு இருக்கிறது என்பதை அறியுங்கள். உங்கள் சொந்த கடந்த காலத்தை புரிந்துகொள்வதன் மூலம் சுய நம்பிக்கையை பெறுவீர்கள்.

 

மூன்றாவது மற்றும் மிக முக்கியமானது என்னவென்றால் இளைப்பாறுதலைப் பெற  சில சுவாச பயிற்சிகள் செய்யுங்கள்.

 

நான்காவது, கோபத்தில், 'நான் விட்டு விடுகிறேன்"என்று கூறுகிறீர்கள். விரக்தியோ கோபமோ இல்லாமல், 'நான் இந்த பிரச்சனையைத் தருகிறேன், அதை தீர்க்க முடியாது, தெய்வீகம்  உதவி செய்யட்டும்' என்று எண்ணுங்கள். உதவி கிடைக்கும்  என்று நம்புங்கள்; பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உங்களுக்கு உதவுகிறது.

ஐந்தாவது -  நீங்கள் ஐந்தாவது  என்ன என்று நினைக்கிறீர்கள்? நான் அதை உங்களுக்கே விட்டு விடுகிறேன். நீங்கள் ஐந்தாவது என்ன என்று யோசியுங்கள். நான் இருபத்தைந்து அல்லது முப்பது குறிப்புக்கள்  வரை கூற முடியும், ஆனால் அதை நீங்கள் எடுத்து  வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  எப்போதும் யாரிடமிருந்தாவது  தீர்வுகளைத் தேடுகிறீர்கள். நாம் நம்முடைய மனதை உள்நோக்கித் திருப்பினால் சில யோசனை, சில தீர்வுகளை நாம் பெற முடியும் என்பதை மறந்து விடுகிறோம். இது ஐந்தாவது ஒன்றாகும். தன்னிச்சை!  தன்னிச்சையாக இருங்கள். உங்களுக்குள்ளேயே  ஆழமாக செல்ல ஒரு சில நிமிடங்கள் எடுக்கும்போது தன்னிச்சையானது வரும். எல்லாம் சாதாரணமாகச் நடந்து கொண்டிருக்கையில், எல்லாமே  நீங்கள் விரும்பும் வழியில் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது  புன்னகை ஓர் பெரிய விஷயமல்ல. ஆனால் “ என்ன நிகழ்ந்தாலும் சரி! என் புன்னகையை நான் இழக்கப் போவதில்லை" என்று நீங்கள் உங்களுக்குள் துணிவுடன் முடிவெடுத்தால், உங்களுக்குள்ளிருந்தே எழும்   உன்னதமான ஆற்றலைக்  கவனிப் பீர்கள்.  மற்றும் பிரச்சனை என்று எதுவும் இல்லை; அது வருகிறது, மறைகிறது என்பதையும் அறிவீர்கள்.