எவ்வாறு ஆயுர்வேதம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியும்

எவ்வாறு ஆயுர்வேதம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியும்

 

 

பலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விரைவாகப் பரவி வரும் பன்றி காய்ச்சல் (H1N1 வைரஸ்) காரணமாக மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதுகாப்பைப் பற்றி  பயப்படுகிறார்கள். இந்த பயம் மற்றும் கவலையைச் சமாளிக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், சாதாரணமாக ஏற்படும்  காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை முதலில் நாம் அறிந்து கொள்வோம்.

பருவகால மாற்றங்களினால் அல்லது நோய் எதிர்ப்பு நிலை குறைவு காரணமாக சாதாரண காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகை காய்ச்சலின்  அறிகுறிகள் ஜலதோஷம்,  மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் ஆகியவை ஆகும். பொதுவாக, இந்த அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்கு கடைகளில் கிடைக்கும் மருந்துகள் போதுமானவை.

ஆனால்  பன்றி காய்ச்சல் சுவாச அமைப்பு முறையை பாதிக்கிறது, மேலும் நோயாளிக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது. பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிமோனியாவினாலும் (பாக்டீரியா இரண்டாம் நிலை தொற்றுநோய்) பாதிக்கப் படக்கூடும். வைரஸ் தொற்று நீடித்தால், சிலர்  வலிப்புத்தாக்கங்களைக் கூட அடையலாம். நுரையீரலின் இரண்டாம் நிலைப் பாக்டீரியா தொற்று மரணத்திற்கு வழிவகுக்கலாம்; ஆனால் பொருத்தமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின்(Antibiotics) பயன்பாடு சிகிச்சைக்கு  உதவுகிறது.

பன்றி காய்ச்சலிலிருந்து  தேறி வரும்போது  சரியான மருத்துவ கவனம் தேவைப் படுகிறது. நீங்கள் இந்த கொடிய நோய்க்கு இரையாவதைத்  தடுக்கும்  வழிகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் வழிகளில் கவனம் செலுத்துவது நம்மை இந்த தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஆயுர்வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உணவு, வாழ்க்கை முறை மற்றும் மூலிகைத் தீர்வுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளை ஆயுர்வேதம்  அளிக்கிறது.

உணவு

புதிதாக தயாரிக்கப்பட்ட சத்தான சைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும். இத்தகைய உணவு  ஜீரணிக்க எளிதானது;  மற்றும் செரிமான அமைப்பைப் பாதிக்காது. இது உங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பு சக்தியையும்  அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை

நீங்கள் ஆழ்ந்த ஓய்வு எடுப்பதையும்,  உங்கள் வீடு மற்றும் பணியிடங்களை நன்கு காற்றோட்டமாக வைத்துக் கொள்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.பிராணாயாமம் சுதர்சனக் கிரியா  மற்றும் தியானம் ஆகியவை  மன அமைதிக்கு உகந்ததாகவும் உங்கள் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது.

மனநிலை நமது உடலின் நோய் எதிர்ப்பு நிலைகளை ஒரு பெரிய அளவில்  பாதிக்கலாம். ஒரு அமைதியான மனநிலையுடன் ஒப்பிடும்போது பயம் மற்றும் தொந்தரவு நிறைந்த மனநிலையானது சமநிலையற்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகம் கொண்டதாகும்.

புது டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திலும்  மற்றும் பெங்களூரில் உள்ள மனநல மருத்துவம்  மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்திலும் நடத்தப்பட்ட  ஆய்வுகள், பிராணயாமா மற்றும் தியானம் போன்றவை  நோய்த்தொற்று எதிர்ப்பை குறைந்தபட்சம் மூன்று மடங்காக உயர்த்துவதற்கான கணிசமான அனுபவ ஆதாரங்களை அளித்திருக்கின்றன.

மூலிகைகள்

துளசி: ஜலதோஷம்இருமல், இழைப்பு  மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் துளசி ஒரு பழங்கால தீர்வு.. இது திறம்பட காய்ச்சல்  மற்றும் தீங்கு தரும் வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் பிற நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. துளசி டீ  பன்றி காய்ச்சலை தடுக்க உதவும். தண்ணீரில் 20 துளசி இலைகளை போட்டு  கொதிக்க விடவும். அதில் மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். ஆறவைத்து, அதில் தேன் கலந்து அருந்தவும்.

எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் :

எலுமிச்சையை வெறும்  வயிற்றில் எடுத்தால்  நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.  அரை ஸ்பூன்  எலுமிச்சை பழச்சாறில் தேன் மற்றும்  மஞ்சள் கலந்து எடுத்துக் கொள்ளவும். எந்த விதமான நோய்த்தொற்றிலிருந்தும் நெல்லிக்காய்  பாதுகாக்கிறது அதை சாறு, காய்  அல்லது ஒரு மாத்திரை போல எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்..

தூபம்: இது காற்றின் மூலம் பரவும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவுடன் போராடுகிறது. வளிமண்டலத்திலுள்ள  கிருமிகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை வீட்டிலேயே சாம்பிராணி தூபம்  மூலம் அழித்து விடலாம்.

லக்ஷ்மி தரு: லக்ஷ்மி தரு  இலைகளை  (தாவரவியல் பெயர்: சிமருபு) தேநீரில் சேர்த்துப் பருகலாம்.

இஞ்சி மற்றும் மஞ்சள்தூள்: இஞ்சி   மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து, ஒரு நாளைக்கு இருமுறை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மற்ற மூலிகை சூத்திரங்கள்: சக்தி சொட்டுகள், இம்யூஜென்  மாத்திரைகள், சித்ர ஹரிதக்கி  மற்றும் வைரஸ் / நோய் தடுப்பு மருந்துகள், பூமி அம்லக்கி மற்றும் அம்ருட் (அல்லது கிலோய்) ஆகிய  மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மூலிகைகளைப் பயன்படுத்தலாம்.

 நமது உணவை கவனித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, நமது தினசரி வாழ்க்கையில் மூலிகை மருந்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சலைத் திறம்பட தடுக்க முடியும். இந்த குறிப்புகள் வழக்கமான காய்ச்சலுக்கு எதிராகவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது, இதன்மூலம் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.