கருவேப்பிலை சேர்த்து காய்கறியுணவை சுவையும் மணமும் மிகுந்ததாக ஆக்குங்கள்
கருவேப்பிலை மணம் வாய்ந்தது மட்டுமின்றி , அதன் சிறு இலைகள் சாதாரண உப்புமா மற்றும் போஹாவினையும் கூட , போற்றப்படவல்லதாய் சுவையூட்டக்கூடியவை. . அதன் தனித்தன்மை வாய்ந்த வாசனை மற்றும் அவ்விலைகள் உணவிற்கு அளிக்கும் தோற்றத்தினால் இந்திய உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சாதம்,தோசை,,இட்லி இவற்றுக்கான நாக்கில் நீரினை ஊறவைக்கக் கூடிய சட்னிகள் மற்றும் பொடிகள் செய்யவும் கருவேப்பிலை பயன் படுகிறது.
பிற பெயர்கள்:
தாவர இயல் பெயர் ; Murraya koenigii
ஆங்கிலம் : curry leaf
சம்ஸ்க்ருதம் : கிருஷ்ண நிம்பா
ஹிந்தி : கரி பட்டா
உபயோகங்கள் :
கருவேப்பிலையில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளதோடு, மருத்துவ குணங்கள், நோய் தடுப்பு குணங்கள்தவிர அழகினை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சிறு புழுக்களை, பூச்சிகளை அழிக்க வல்லது. உஷ்ணத்தைக் குறைப்பதுடன், விஷத்தை முறிக்கவல்லது. பசியைத் தூண்டவல்லது. மலத்தினை இளக்குவதோடு, வயிற்று உப்புசத்தை நீக்குகிறது. இளம் கருவேப்பிலை , முதிர்ந்த இலைகளைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது.தலை முடிக்கும், கண்களுக்கும் நன்மை பயக்கவல்லது. ஆயுர்வேத தயாரிப்புகளிலும் , சிகிச்சையிலும், இதன் வேர்கள் மற்றும் தண்டு ஆகியவையும் முக்கியம் வாய்ந்தவை.
நடைமுறை பயன்பாடுகள்
- அமிலத் தன்மை, அதனால் ஏற்படும் வாந்தி - இதன் தண்டைப் பொடி செய்து, குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கவும்.
- மலச்சிக்கல் - உலர்ந்த கருவேப்பிலை இலைகளைப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி பொடியுடன் தேன் சேர்த்து, ஒரு நாளில் இருமுறை சாப்பிடவும்.
- அஜீரணம் - உலர்ந்த கருவேப்பிலை இலைகளையும், வெந்தயம் மற்றும் மிளகினைப் பொடி செய்து. நெய் சேர்த்து தினமும் உண்ணவும்.
- வயிற்றுப் போக்கு - [ பேதி ] - கருவேப்பிலை இலைகளை சாறு செய்து தினமும் 2 தேக்கரண்டிகள் இருமுறை அருந்தவும்.
- வாந்தியும், பிரட்டலும் : நான்கு கோப்பை நீரில்,கையளவு கருவேப்பிலை இலைகளைப் போட்டுக் கொதிக்கச் செய்து, 1 கோப்பையாக வற்றியதும், 4 - 6 முறை ஒரு நாளில் அருந்தவும்.
- தீப்புண்: தீப்புண் ஏற்பட்ட இடத்தில் கருவேப்பிலை விழுதினைத் தடவவும்.
- பொடுகு - எலுமிச்சை தோல்,கருவேப்பிலை, வெந்தயம் மற்றும் பூவந்திக் கொட்டை [ soap nut powder ] ஆகிய இவற்றைப் பொடி செய்து, இப்பொடியினை தலை முடியினைச் சுத்தம் செய்ய ஷாம்பூவாக உபயோகிக்கவும்.
- ஆரோக்கியமான தலை முடிக்கு : தேங்காய் எண்ணையில் கருவேப்பிலை இலைகளை கருத்த பிரௌன் நிறமாகும் வரை,கொதிக்க விடவும். இலைகளை வடிகட்டி,எண்ணையை தினமும் மயிர்க்கால் களில் தடவவும்.
- நரைமுடிக்கு : தினமும் இளம் கருவேப்பிலை இலைகளை மெல்வதால் தலைமுடி கொட்டுவது குறைகிறது. கருவேப்பிலை இலைகளு டன் கொதிக்கவைக்கப்பட்ட எண்ணையைத் தடவுவதால் ,தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.
இக்கட்டுரையை எழுதியவர் - Dr. நிஷா மணிகண்டன், வாழும்கலையின் மூத்த ஆயுர்வேத நிபுணர்.
---------------------------------------------------