கொத்தமல்லி ,எலுமிச்சை சாறு ,சேர்த்த சூப்பு

கொத்தமல்லி ,எலுமிச்சை சாறு ,சேர்த்த சூப்பு

 

https://www.artofliving.org/sites/www.artofliving.org/files/styles/unity_carousel_inner/public/achievement_carousel_image/ayur-cooking.jpg?itok=7S2MleeZ

மருந்து மாத்திரைகள் செய்யாததையும் செய்யும் ஒரு சூடான சூப்பு . குளிர் காலத்தில் நல்ல தொரு சூப்பு அருந்தினால் அதனால் கிடைக்கும் சுகமே அலாதி யானது .அதுவும் ஜலதோஷம் ,காய்ச்சல் ,இருமல் இருக்கும்போது கத கதப்பாக இருக்கவேண்டும்போல தோன்றினால் சூப்பு தான் கை கண்ட மருந்து .ஆரோக்கியமானது ருசியானதும் கூட .

எலுமிச்சை -கொத்துமல்லி சூப்பு

இவ்விரண்டும் உலகின் எல்லா பகுதிகளிலும்  கிடைக்கக்கூடியது. தெளிவாக ரசத்தைப் போல இருப்பதால் வயிற்றுக்கு எந்த கெடுதலும் செய்யாது .நன்றாக பசியைத் தூண்டக் கூடியது .டீ.காபிக்கு  பதிலாக இதை தயாரித்து அருந்தலாம் .

செய்வதற்கு சுலபமான இந்த சூப்பு தயாரிக்கும் விதம்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது .இது குளிர் காலத்தில் வரும் ஜலதோஷம் இருமல் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியை தரக்கூடியது. கொத்துமல்லி ஜீரண சக்தியை அதிகரிக்கச்செய்து நீரிழிவு வியாதிக்கு இரத்தத்தில்  சர்க்கரை அளவை குறைக்கச் செய் கிறது . நல்ல கொழுப்புச்சத்தை (ஹெச் டி எல் ) அதிகரிக்கச்செய்து கெட்ட  கொழுப்பை (எல் டி எல் )குறைக்கிறது .

 தேவையான பொருள்கள்

  • எலுமிச்சை ஜூஸ்   2 மேசைக்கரண்டி 
  • புதிதாக பறித்த கொத்தமல்லி இலைகள்  2 மேசைக்கரண்டி
  • எண்ணைய் 2மேசைக்கரண்டி
  • வெங்காயத்தாளிலிருந்து வெங்காயம் 1
  • பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு
  • கடலை மாவு 2 மேசைக்கரண்டி
  • காய்கறி வேகவைத்த நீர் 41/2 கப்
  • முட்டை கோஸ் நறுக்கியது 1/4 துண்டு ,
  • கேரட் நறுக்கியது 1,
  • மிளகு பொடித்தது 7/8
  • உப்பு ருசிக்கேற்ப  

கொத்துமல்லி இலைத்தண்டுகளை தனியே வைத்துக்கொள்ளவும் .கடாயில் எண்ணையை சூடாக்கி , நறுக்கிய பச்சை வெங்காயம் , இஞ்சி சேர்த்து வதக்கவும் கடலை மாவு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும். அதில் காய்கறி வேகவைத்த நீர் கொத்துமல்லித்தண்டு ,முட்டைகோஸ் கேரட் சேர்த்து கொதிக்கவிடவும் .பொடித்த மிளகு சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு நறுக்கிய கொத்துமல்லி இலைகளில் பாதியை சேர்த்து 5 -10 நிமிடம் கொதிக்கவிடவும். வெந்த காய்கறிகளை வடிகட்டிவிடவும். பின் கொதிக்கவைத்து உப்பு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும். மறுபடியும் கொதி வந்ததும் மீதியுள்ள கொத்துமல்லி தூவி பரிமாறவும் .