சாக்லேட் கேக் செய்முறை
புது வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க, குடும்பத்தில் உள்ளோர் மற்றும் நண்பர்களை உற்சாகப்படுத்த சற்று சிரமம் பாராமல் ஒரு கேக் செய்யலாமா! உலர் பழங்களும் கொட்டைகளும் கலந்த சாக்லேட் சுவையுடன் கூடிய இந்த கேக்கின் ருசி வருடம் முழுவதும் நாவில் தங்கி மகிழ்வூட்டும்
தேவையான பொருட்கள்:
- ¾ கப் வெந்நீர்
- 1 கப் மேப்பில் சிரப் ,
- 3 டேபிள் ஸ்பூன் பீ நட் பட்டர் ,
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 2/3 கப் நெய்,
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சுச் சாறு
மேலே கூறியவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து கலக்கவும்.
2 கப் கோதுமை மாவு
3 அல்லது 4 டேபிள் ஸ்பூன் அரோரூட் பவுடர்
இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளவும்
- ½ டேபிள் ஸ்பூன் தனியாத்தூள்
- ½ டேபிள் ஸ்பூன் வெனிலா
- ½ டேபிள் ஸ்பூன் சாத்துக்குடி (அ) எலுமிச்சை தோல் பொடி
- ½ டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடி
இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் வால்நட், சூரியகாந்தி விதை, பாதம் கோட்டை ஆகியவற்றை சிறு துண்டுகளாக்கி மாவுடன் சேர்க்கவும்
செய்முறை
பொடித்தவைகளை எல்லாம் திரவக்கலவையுடன் நன்கு அடித்து கலக்கவும். அதன் மேல் சுக்குப்பொடி சேர்ப்பதானால் தூவவும். கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பரை போட்டு அதில் கலவையை ஊற்றவும்.பின்பு அவனில் 350 டிகிரி வெப்பத்தில் 45-55 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு அதை 10- 20 நிமிடங்கள் ஆற விடவும்.பின் பாத்திரத்திலிருந்து எடுத்து குளிர வைக்கவும் 50-75 கிராம் சாக்கலேட்டை உருக்கி சிறுது நெய் கலந்து, (மேலும் சுவைக்கூட்ட துருவிய தேங்காயை சேர்க்கலாம்) கேக்கின் மேல் ஊற்றவும்
அதன் மேல் அலங்கரிக்க உலர் பழங்கள், தேங்காய்த்துருவல், பாதம் என தூவி பரிமாறலாம். உடன் ஐஸ்கிரீம் மும் தரலாம்.