சிரோதாரா - உடல் நச்சுக்களை வெளியற்றும் சிகிச்சை
சிரோதாரா (சிரோ - தலை ; தாரா - பாய்ச்சல்) என்னும் சிகிச்சை முறை அனைத்து ஆயுர்வேத சிகிச்சைகளிலும் மிகவும் தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. 5,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அளிக்கப் படும் பண்டைய ஆயுர்வேத சிகிச்சை முறை இது. இந்த அற்புதமான உடல் நச்சு வெளியேற்ற முறையில் உச்சந்தலையில் மற்றும் நெற்றியில் மெல்லிய சொட்டுக்களாக மருந்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றப் பட்டு, இளைப்பாறலைத் தருகிறது. மிகவும் நிதானமாகவும், புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், அளிக்கப் படும் சிரோதாரா மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது கண் நோய் கள், சைனஸ் மற்றும் நினைவாற்றல் குறைவு உள்ளிட்ட பல்வேறு நிலைமை களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இது உங்கள் உடலின் உள்ளுணர்வு அறிவை விழிப்பூட்ட உதவும் மிகவும் தெய்வீக சிகிச்சைகள் ஒன்றாகும்.
ஆயுர்வேதத்தின்படி, வாதம் மற்றும் பித்தம் சமநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரோதாரா மிகவும் பயனளிக்கிறது. வாதம் சமநிலையில் இல்லாதபோது, பயம், பாதுகாப்பற்ற தன்மை, கவலை அல்லது வேகமாக ஓடும் எண்ணங்கள் ஏற்படுகின்றன. பித்த சமச்சீரின்மை, எரிச்சல், ஏமாற்றம் அல்லது தீர்ப்பு நிலை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. சிரோதாராவில் பயன்படுத்தப்படும் திரவத்தின் செயலும் குணங்களும் சமநிலையின்மையை தடுக்கிறது. இது மென்மையானது, நரம்புகள், நெற்றி, உச்சந்தலை, மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தோஷங்களை திரவ பயன்பாடு குணப்படுத்துகிறது.
ஆயுர்வேத நிறுவனம் வழங்கும், 'ஆயுர்வேதம் இன்று' என்னும் பத்திரிகையின் 1995 ஆம் ஆண்டு வசந்த கால இதழில், ஆயுர்வேதப் பயிற்சியாளர் எட் டன்ஹர் (Ed Danaher) சிரோதாரா மன அழுத்தத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குகிறார்.
சிரோதாரா செய்யும் சமயத்தில், நெற்றியில் எண்ணெய் ஊற்றுவதன் மூலம் நெற்றியில் அழுத்தம் மற்றும் அதிர்வலைகள் உருவாக்கப்படுகிறது. மூளையின் எலும்புகளில் உள்ள வெற்றிடத்தினால் இந்த அதிர்வு உரத்து ஒலிக்கிறது. இந்த அதிர்வுகள் செரிப்ரோ ஸ்பைனல் திரவம் (CSF) என்ற திரவத்தின் மூலம் உட்செலுத்தப் படுகிறது. சிறிது வெப்பநிலையுடன் இந்த அதிர்வு, மூளை நரம்பு முடிச்சுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, செரோடோனின் மற்றும் கேட்சாலாமைன் ஆகியவற்றின் அளவை தூக்கத்தை தூண்டுவதற்கான சாதாரண கட்டத்திற்கு கொண்டு வருகிறது. திரவ மருந்து நீடித்த மற்றும் தொடர்ச்சியான அழுத்ததுடன் தரப்படுவதால் மனஅமைதி மற்றும் இயற்கையான தூக்கம் தூண்டப் படுகிறது.
சிரோதரா சிகிச்சை முறை
துளையுள்ள ஒரு பானை, ஒரு நூலில் பொருத்தப் பட்டு, சிகிச்சை மேஜையில் படுத்திருக்கும் நோயாளியின் நெற்றியில் மீது தொங்கிக்கொண்டிருக்கும். மூலிகை மருந்து அடங்கிய திரவமாயினும் அல்லது பால் ஆயினும் அந்த திரவ மருந்து, பானைக்குள் ஊற்றப்படும். இது படிப்படியாக தலையில் ஊற்றப்படும். நோயாளி யின் கண்களுக்குள் எண்ணெய் செல்வதைத் தடுக்க ஒரு கட்டு அல்லது சுருட்டப் பட்ட ஓர் டவல் நெற்றியில் வைக்கப்படும். இந்த சிகிச்சை ஒரு நாளில் சுமார் 45 நிமிடங்கள் நடக்கும். இந்த சிகிச்சை, நரம்புகளை அமைதிப் படுத்தி, கட்டுப் படுத்திச் சேர்க்கப் பட்ட உணர்ச்சிகளை வெளியிடுவதற்கும், மனதை சுத்தப் படுத்துவதற்கும், சோர்வை நீக்குவதற்கும், தூக்கமின்மை, நாள்பட்ட தலைவலிகள், பதட்டம் ஆகிய பலவற்றிலிருந்து விடுவிக்கவும் உதவுகிறது.
சிரோதாரா சிகிச்சைக்கான அறிகுறிகள்:
• அதிர்ச்சிகளுக்குப் பின் ஏற்படும் அழுத்தம்
• தூக்கமின்மை
• சோரியாசிஸ் என்னும் தோல் நோய்
• உயர் இரத்த அழுத்தம்
• நாள்பட்ட தலைவலி
• நினைவாற்றல் குறைவு
• காது இரைச்சல் மற்றும் காது கேளாமை
சிரோதாராவின் நன்மைகள் - ஒரு உடல் நச்சு நீக்கும் சிகிச்சை திட்டம்
• நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகிறது
• தூக்கமின்மையை சரிப்படுத்துகிறது.
• மைகிரைன் தலைவலி நிவாரணம்
• கவனக் குவிப்பு மற்றும் கவனச் செறிவு
• உயர் இரத்த அழுத்தம் குறைகிறது
• முடி இழப்பு மற்றும் களைப்பு ஆகியவற்றைக் குறைக்கிறது
• மன அழுத்தம் குறைகிறது
மேலும் விவரங்களுக்கு, 91 80 32721298, 91 9620211000 ஆகிய எண்களுக்கு தயவு செய்து அழைக்கவும்: அல்லது onguestrelations@ssapd.org. என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.