தூக்கமின்மைக்கு ஆயுர்வேத முறையில் ஒரு தீர்வு
Say Goodbye to Insomnia!
வாரம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை வேலை என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது மிகவும் தேவையானது என்பதே மறந்து விட்டது. தூங்கமுடிவது அதிருஷ்டம் என்றாகிவிட்டது. 30% முதல் 40% மக்கள் வேலை பளுவின் காரணமாக தூக்கம் வருவதில்லை என்றும் 10%முதல் 15% மக்கள் தூக்கமே வருவ தில்லை என்றும் கூறுவதாக தேசிய அளவில் தூக்கத்தை ஆராயும் நிறுவனம் கூறுகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் மனதின் குழப்பமான நிலையே முக்கிய காரணம். உடல் உபாதை, சீதோஷ்ண நிலையின் கடுமையான தாக்குதல், சூழ்நிலை அல்லது கடுமையான, தீராத உடல் நலக்கேடு ஆகியவற்றால் தூக்கமின்மை உண்டாகலாம். மேலும் வேலை பளு, மனக்கவலைகள்கூட காரணமாகலாம். ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல்,வேளைதவறிய உணவுப்பழக்கங்களுள்ளவர்களும் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள்.காரணம் எதுவாக இருந்தாலும் நல்ல தூக்கமே மனஅமைதிக்கும் சக்திவாய்ந்த உடலுக்கும் மிக முக்கியம் என்பது உலகம் முழுவதும் அறிந்ததே.
ஆயுர்வேதத்தில் தூக்கமின்மையை 'அநித்ரா ' என்கிறார்கள். உடலின் சக்திமையங்களின் சமன்பாட்டிற்கு முக்கியமானதாக கருதுவது மூலிகை வைத்தியமும் முறையான உணவு பழக்கங்களும் நெறியான வாழ்க்கை முறையுமே ஆகும்.அதைத்தவிர மனதை தளர்வடையச்செய்வது இந்த சிகிச்சை முறையின் ஓர் முக்கிய அங்கமாகும்.
தூக்கமின்மைக்கு சில இயற்கையான தேர்வுகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.
- படுக்கும் முன் சூடான பாலருந்துவது தூக்கமின்மைக்கு இயற்கையான தீர்வு. உடலின் வேலை நேரம்,உறங்கும் நேரத்தை கட்டுப்படுத்தும் முக்கியமான ஹார்மோன் மெலடோனின். இது மூளையில் சுரக்கிறது. இதற்குத்தேவையான கால்சியம் சத்து பாதாமில் உள்ளதால் பாதாம் பால் அருந்துவது நல்ல உறக்கத்தைக்கொடுக்கும்.
- தூங்கும் முன் இயற்கை முறையில் தயாரித்த நல்லெண்ணையை பாதங்களில் தேய்த்துக்கொள்ளவும். ( மறக்காமல் காலுறை அணியவும்)
- 3 கி புதினா இலையையோ 1.5 கி புதினா பொடியையோ ஒரு கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இளம் சூட்டில் தேன் கலந்து குடிக்கவும்.
- வாழைப்பழத்துண்டின் மேல் சீரகம் தூவி இரவு சாப்பிடுவதை தவறாமல் செய்யவும்.
- மனதை அமைதிப்படுத்த மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவை மிகச்சிறந்தது.
நெறியான வாழ்க்கைமுறைக்கான பரிந்துரைகள்
- இரவு வெகுநேரம் டெலிவிஷன் பார்ப்பது, கணினியில் வேலை பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்கவும்.
- மாலைக்குப்பின் தேனீர், காப்பி ரசாயனம் கலந்த பானங்கள் முதலியவற்றை அருந்துவதைத் தவிர்க்கவும்
- ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வது, ஷீரோதாரா ஆகியவை மனம் இளைப்பாற உதவும்..
- தினமும். 30 நிமிடங்கள் தேகப்பயிற்சியிலோ அல்லது விளையாட்டிலேயோ தவறாமல் ஈடுபட்டு உடலை சோர்வடையச்செய்யவும்.
- மேலும் விவரங்களுக்கு https://www.artofliving.org/in-en/yoga/health-and-wellness/yoga-for-sleep என்ற எங்கள் இணையத்தளத்தைப்பார்க்கவும்.
- தியானம் செய்வது தூக்கத்தை சீர்செய்யும். அதைப்பற்றி மேலும் அறிய
- என்ற எங்கள் இணையத்தளத்தைப்பார்க்கவும்.