மர்மா சிகிச்சை: 107 குணப்படுத்தவல்ல ரகசிய மையங்கள்
இரகசிய மையங்களை குணப்படுத்தும் முறை என்றால் என்ன?
இது ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான பகுதி. அடைபட்ட சக்தி பாதைகளைச் சுத்திகரிப்பதன் மூலம் உடல் நலத்தினைப் பாதுகாக்கிறது.
மர்மா எனும் சொல் சம்ஸ்க்ருத மூலமாகிய ம்ரின் மரனே என்னும் சொல்லிலிருந்து
வந்தது. இந்த சமஸ்க்ருத சொற்றொடரின் பொருள் ," ம்ரியதே அஸ்மின் இதி மர்மா " என்பதாகும்.- இம் மர்ம மையங்கள் பாதிக்கப் படும் போது, இறப்பு நிகழ வாய்ப்பு உண்டு, அல்லது உடல் நலத்திற்கு மாபெரும் கேடு விளையும் வாய்ப்பு உள்ளது .எனவே இம் மையங்கள் மர்மா என அழைக்கப்படுகின்றன. சம்ஸ்க்ருதத்தில் மர்மா என்றால், மறைந்துள்ள அல்லது இரகசியமான என்ற பொருளும் உண்டு. உடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள், உதாரணமாக, தசைகள், இரத்த நாளங்கள், எலும்புகளை பிணைக்கும் தசை நார்கள், எலும்புகள் மற்றும் இணைப்புகள் போன்றவை சந்திக்கும் புள்ளிகள் மர்ம மையம் என்றழைக்கப் படுகிறது.
குணப்படுத்த உதவும் 107 புள்ளிகள் :
மர்மா மருத்துவ முறை 107 புள்ளிகளை அல்லது உடலின் வாயில் களை உபயோகிக்கிறது. மனம் 108 - வது மர்மாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரதானமான மர்மா மையங்களாவன :
ஏழு சக்கரங்கள்,
இது மட்டுமின்றி உடலின் பிற சிறிய சக்தி மையங்கள், உடம்பு மற்றும் கால்களில் பரவி உள்ளன.
இம்மையங்கள் ஒன்று முதல் ஆறு அங்குல விட்டமுடையவை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சுஷ்ருத சம்ஹிதா எனும் புகழ் பெற்ற ஆயுர்வேத சாஸ்திரீய நூலில், இம்மையங்கள் இருக்கும் இடங்கள் விளக்கமாகக் கூறப்பட்டு உள்ளன. இம்மையங்கள் நம் உடலின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் காணப் படுகின்றன.
- 22 மையங்கள் உடலின் கீழ் நுனிகளில் காணப்படுகின்றன.
- 22 கைகளில் உள்ளன.
- 12 மார்பிலும், வயிற்றிலும் உள்ளன.
- 14 பின்புறத்திலும்,
- 37 தலை மற்றும் கழுத்து பாகத்தில் காணப்படுகின்றன.
மர்மா சிகிச்சையின் போது என்ன நிகழுகிறது?
மர்மா சிகிச்சையின் போது , உடலின் இம்மையங்கள், மிக நுட்பமாக தூண்டப் படுகின்றன.இதன் மூலம் இம்மையங்களின் அடைப்புகள் நீக்கப்பட்டு,உடலளவிலும், மன அளவிலும் ஓய்வும், வலிமையும் கிடைக்கப் பெறுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த ஓர் மருத்துவ முறை மென்மையான, சக்தி மிக்க உணர்ச்சி மையங்களின் அடைப்பினை
நீக்கி, சக்தி பாதைகளைத் திறக்கச் செய்யும் இம்முறை ஸ்ரோதாஸ் என அழைக்கப்படுகிறது. மர்மா புள்ளிகளை , மென்மையாக, தோலின் மீது அழுத்துவதன் மூலம் பல நேர்மறையான நிகழ்வுகள் சங்கிலித் தொடர் போல் தூண்டப் படுகின்றன.
ஏன் மர்மாவினை உயர்வைத் தரக் கூடியதாகக் கருதுகிறீர்கள் ?
மர்மா மருத்துவ முறை பூரணமான ஒன்று. உடலளவிலும், உணர்வு மற்றும் மன அளவிலும் ஆன்ம அளவிலுமாக, பல நிலைகளில் பயனளிக்கக் கூடியதாய் , உடலில் பல ஆச்சரியமான மாற்றங்களைக் கொண்டு வர வல்லது.
- வெகு நாளாக நீடித்து இருக்கும் அல்லது மிகக் கடுமையான , ஓரிடத்தில் மட்டுமோ அல்லது பல இடங்களிலோ இருக்கக் கூடிய வலியிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது.
- எல்லா நிலைகளிலும் நச்சுத் தன்மை நீக்கப் படுகிறது.
- உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் , முக்கியமாக நோய் எதிர்ப்பு ஜீரணம், சுவாசம் நரம்புகள் மற்றும் மனோவியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது.
- ஆரோக்கியமான தோலும், பிரகாசமான தோற்றமும் கிடைக்கிறது.
- உடல் உஷ்ண நிலையை சமன் படுத்துவதுடன், தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது.
- செரடோனின், மெலடோனின் முதலான நியூரோ இரசாயனங்கள் சுரப்பினை மேம்படுத்துவதன் மூலம்,அறிதலை விருத்தி செய்வதோடு, ஆழ்ந்த உறக்கத்தினை யும் கொடுக்கவல்லது. அதிக அளவிலான சக்தியுடன்,படைப்பாற்றல் மிக்கவராவீர்கள்.
மர்மாவினைப் புரிந்துகொள்ள ஒரு பெரும் இரகசியம் -
மர்மா மருத்துவ முறை மன அளவிலும், மாற்றத்தினைக் கொண்டு வந்து, விழிப்புணர்வினையும் மேம்படுத்தவல்லது. மர்மா மையங்களைத் தூண்டுவதன் மூலம் நாம் கீழ்க்கண்டவற்றை கட்டுப்படுத்தலாம்.
- பிராணா வின் நிலைகள்
- உணர்ச்சி சம்பந்தமான மற்றும் இயக்கும் உறுப்புகளையும் ,
- முழுமையான உடல் மற்றும் மன அளவில் கட்டுப்படுத்த சக்தியைத் தருகிறது.
இதன் மூலம் ஆன்ம அளவில் எளிதாக உயர் நிலையை அடைய முடிகிறது. ஆரோக்கியத் தைப் பராமரிப்பதோடு, படைப்பாற்றல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் வாழ லாம்.