மாறாத புன்னகைக்கு ஆயுர்வேதம் காட்டும் வழி

மாறாத புன்னகைக்கு ஆயுர்வேதம் காட்டும் வழி

ஆரோக்கியமான என்பது பற்களைப்பற்றி மட்டும் அல்ல . அவை நமது நலமான வளமான வாழ்க்கைக்கு ஆதாரமான ஆரோக்கியத்தின் ஓர் அம்சமே. தெளிவாகப்பேசவும் புன்னகைக்கவும் முத்தம் தரவும் ஸ்பரிசித்து உணரவும் சுவைக்கவும், மெல்லவும் விழுங்கவும், அழவும் ஆரோக்கியமான பற்கள் அவசியம். பற்களை சரியானபடி பேணிப் பாதுகாக்காவிடில் ,அது நமது கல்வியாயினும் ,தொழிலாயினும் ,மற்ற செயல்களாயினும் அவற்றில் சரியான கவனம் செலுத்தமுடியாத நிலையை உண்டாக்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கும் பொது ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பற்கள், ஈறுகள் ,நாக்கு இவை அனைத்தையுமே சரியான முறையில் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியமாகும் .

வாயைப்பொறுத்தமட்டில் பற்கள், பெரியோடொண்டல் எனப்படும் ஈறுகள் சார்ந்த நோய்களே முக்கியமானவையாகும் .மற்றபடி வாய் துர்நாற்றம், வாய் உலர்ந்து போதல் வாய்ப்புண்கள், பற்சிதைவு போன்றவைகளை கண்டறிந்து சரியான சிகிச்சை முறை யினால் குணப்படுத்திவிடமுடியும் .

தொன்மை வாய்ந்த ஆயுர்வேதம் என்பது மூலிகைகளைக்கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும். நமது உடலின் வாதம் பித்தம் கபம், என்னும் மூன்று நிலைகளை சமன்படுத்துவதன் மூலம் பற்களுக்கான பிரச்சனைகளை தீர்க்கமுடியும். பற்களைப் பொறுத்தமட்டில் கப தோஷம் தான் அடிப்படை . அதை சமன்படுத்துவதால் பற்களில் எற்படும் ஓட்டைகளையும் காரைகளையும் குணப்படுத்த ஆயுர்வேதம் நெல்லிக்கனியை பயன்படுத்துகிறது. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு. இதைத்தவிர பில்பெரி, ஹாதோர்ன் பெரி, ஆகியவை ஈறுகளை பலப்படுத்தும் ஆற்றல் உடையவை. பற்களானவை அஸ்தி தாது எனப்படும் எலும்பு வகையைச் சார்ந்தது  என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எலும்புகளையும், மூட்டுக்களையும் வலிமையாக்கும் மூலிகைகள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மஞ்சள் டாக் வேர்  அல்பால்பா இலை, நெட்டில் இலை , பட்டை , மஞ்சள் வேர்  ஆகியவை அப்படிப்பட்ட மூலிகைகள் ஆகும் . 

கால்சியம் மக்னீசியம் ஜின்க் போன்ற தாதுக்களின் குறைப்பாட்டினாலேயே பற்களுக்கான நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை நமது உடலில் சமன்பாடு அடையச் செய்யவே எல்லா சிகிச்சைகளும் உள்ளன. இத்துடன் பற்களுக்கு ஊறு விளைவிக்கும் இனிப்புகள் இனிப்பு பானங்கள் கார்போஹைடிரேட்டு அதிகமாக உள்ள உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது .

பற்களின் ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்

பற்களில் குழி விழுவதைத் தவிர்க்க இரண்டு சிட்டிகை ஏலக்காய் பொடியை சிற்றுண்டியுடன் சேர்த்துக்கொள்ளவும். ஏலக்காய் வாசனை உடையது, புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. பசியை தூண்டக்கூடியது, புத்தியைக் கூர்மையாக்கவல்லது, மூச்சுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது .

நச்சுபொருள்களையும், இறந்துபோன பாக்டீரியாக்களையும்  நீக்க நாக்கை நன்றாக வழித்து சுத்தப்படுத்தவும். சுவையான உணவை உட்கொள்ளவும், வாய் துர்நாற்றத்தை தவிர்க்கவும் ,மனத்தை தெளிவாக வைத்துக்கொள்ளவும் இது உதவும்

தினமும் காலை சிற்றுண்டிக்குமுன் பொரித்த வெள்ளை எள்ளை ஒரு கையளவு வாயில் போட்டு மெல்லவும். பிறகு பல் தேய்க்கவும். எள் விதைகள் பற்களை பளபளக்கச்செய்து சுத்தப்படுத்தும் .

லிகோ ரைஸ் வேரை மெல்லுவதால் வாய் சுத்தமடைந்து உமிழ் நீர் சுரப்பும் அதிகரிக்கிறது .

உங்கள் கடவுச்சொல்லை (password) போல உங்கள்ப்ரஷ்ஷை வைத்துக்கொள்ளுங்கள் வேறு யாரும் அதை உபயோகிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஆறு மாதத்திற்கு  ஒரு முறை புது ப்ரஷ் உபயோகியுங்கள். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத பொருட்களில் பற்களின் ஆரோக்கியத்திற்காக  சுதந்தா பற்பசையும் சொட்டு மருந்தும் இருக்கின்றன 

பற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

பொதுவான பல் பிரச்சனைகளும் அதற்கான ஆயுர்வேத சிகிச்சைகளும்

வாய் துர்நாற்றம் :சிகிச்சை

  • எலுமிச்சை ரசத்தால் வாய்க்கொப்பளிக்கவும்
  • பற்களின் ஆரோக்கியத்திற்கு வெந்தய டீயைக்குடிக்கவும்
  • கொய்யாப்பழம் சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தை தடுக்கும்

பற்களின் மஞ்சள் நிறமும் ,  அசுத்தமான பற்களும் :சிகிச்சை

  • உப்பும் எலுமிச்சையும் கலந்த கலவையால் பல் துலக்கவும்
  • இரவு படுக்கப்போகுமுன் ஆரஞ்சு பழத்தோலை பற்களின் மீது தேய்ப்பது பற்களை வெண்மையுறச்செய்யும் .

பற்சிதைவு :சிகிச்சை

  • பால் தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்
  • பச்சை காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உப்பு,மஞ்சள் தூள் நல்லெண்ணெய் ஆகியவற்றின் கலவையால் தினமும் இரண்டு முறை பல் துலக்கவும்.
  • சூரியகாந்திஎண்ணெயையோ, நல்லெண்ணெயையோ தேங்காய் எண்ணெயை யோ  வாயில் ஊற்றி தினமும் இரண்டு முறை கொப்பளிக்கவும்.
  • மிதமான வெந்நீரில் அரை டீஸ்பூன் கல்லுப்பைக்கரைத்து வாய் கொப்பளிக்கவும்.
  • உலர்ந்த நெல்லிக்கனி ஒன்று அல்லது இரண்டு கிராம் அரைத்து உட்கொள்ளவும்

ஈறுகளில் இரத்தக்கசிவு: சிகிச்சை

  • வேப்பங்குச்சியால் பல் துலக்கவும்.
  • படிகாரம்,  நல்லெண்ணெய் உப்பு ஆகியவற்றின் கலவையால் ஈறுகளையும் பற்களையும்    நன்றாகத்தேய்க்கவும்.
  • இரண்டு கொய்யா இலைகளை வாயில் சில நிமிடங்கள் மெல்லவும்.
  • வேப்பிலை, வேப்ப மர பாகங்கள், கிராம்பு, மஞ்சள் ஆகியவை ரத்தக் கசிவைத் தடுக்கும்.
  • ஒரு கப் ஆரஞ்சு சாற்றுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து குடிக்கவும்.

குழிப்புண்கள்: சிகிச்சை

  • கற்றாழை பசையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
  • இரவு நேரத்தில் அரை ஸ்பூன் திரிபலாவை வெந்நீரில் கலந்து குடிக்கவும். இது பித்தத்தை சமன் படுத்தும்.
  • உண்பதற்கு முன் அரை கோப்பை கிரேன்பெரி ரசத்தைக் குடிக்கவும். அது புண்ணை குணப்படுத்தி எரிச்சலை குறைக்கும்.

பல் வலி : சிகிச்சை வலி நிவாரணிகள் :

  • பழுப்பு உப்பும் இஞ்சி லவங்க எண்ணெய் காடி, மரப்பட்டையின் பொடி ஆகியவற்றின் கலவை    இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் கல்லுப்பு கொண்டு ஈறுகளை மசாஜ் செய்தல்
  • லவங்க எண்ணெய்யுடன் நல்லெண்ணெய் கலந்து ஒரு பஞ்சில் தொட்டு சொத்தையுள்ள இடத்தில் வைக்கவும்     
  • பச்சை கற்பூரத்தை இருக்குமிடத்தின்   அருகில் வைக்கவும். உமிழ் நீருடன் கலந்து அது வலியைக்குறைக்கும்.