மிளகினால் பயனடையுங்கள்
சுரீரென்ற காரத்தினை நினைக்கையில் , மனக்கண் முன்னே தோன்றுவது, மிளகும், தும்மலை வரவழைக்கும் அதன் தன்மையுமே . காரமான ருசிக்கும், மசாலா வாசனைக்கும் உலகம் முழுவதுமே உபயோகிக்கப்பட்டு வருவது மிளகு. அது மட்டுமின்றி இந்தியாவில்
பண்டைய காலந்தொட்டே இருந்துவரும் ஓர் வாசனைப் பொருள்.
இது மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பதாலேயே "கருப்பு தங்கம்" என அழைக்கப்படுகிறது.
பிற பெயர்கள்:
தாவரவியல் பெயர் - Piper Nigrum
ஆங்கிலம் - Black Pepper
சம்ஸ்க்ருதம் - மரிச்சா
ஹிந்தி - காலி ம்ருச்
மிளகு பெப்பர் கார்ன் என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண ஜலதோஷம் முதல் சீத பேதி [ bloody diarrhea ] வரை பல நோய்களை குணப்படுத்தக் கூடியதால் மிளகில் சூரிய சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. ஜீரணத்தை மேம்படுத்தக்கூடியதும், நரம்புகளை ஊக்குவிக்கக் கூடியதும், போஷாக்கு அளிக்கக்கூடியதுமான மருந்தாகப் பயன் படுகிறது. மிளகு, பசியைத் தூண்டக்கூடியதும், தலைவலிக்கு ஓர் நிவர்த்தியுமாகும் .
பயன்பாட்டுக்கு உகந்த முறைகள்:
- ஜலதோஷம் : ஒரு தேக்கரண்டி கோதுமை சீவல்களை 5 மிளகுகளுடன், ஒரு கோப்பை நீரில் தேவை யான உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அந்நீரை அருந்தவும்
- அஜீரணம் : மிளகு, சீரகம் இரண்டினையும் பொடி செய்து, மோரில் கலந்து குடிக்கவும்.
- முகத்தில் பரு: சந்தனத்தையும், மிளகினையும் பொடி செய்து,குளிர்ந்த நீரில் கலந்து, முகத்தில் தடவவும்.
- துர்நாற்றமுள்ள மூச்சும், இரத்தம் வடியும் ஈறுகளும் : மிளகு, உப்பு கலந்த பொடியினை உபயோகித்துப் பல் துலக்கவும்.
- பல் வலி: மிளகுப் பொடியினை இலவங்க எண்ணையுடன் கலந்து , பல் வலி இருக்கும் இடத்தில் தடவவும்.
- ருமாட்டிக் மூட்டு வலி:தேங்காய் எண்ணையில் மிளகுப் பொடியினைக் கலக்கவும். அதனைக் கொதிக்கவைத்து, பாதிக்கப்பட்ட இணைப்புகளில் தடவவும்.
- ஜுரம்: 1/4 தேக்கரண்டி மிளகுப் பொடியினை வெல்லத்தில் கலந்து, ஒவ்வொரு
இரவும் உண்ணவும்.
- தோல் வியாதி: தேங்காய் எண்ணையைச் சுடவைத்து,மிளகுப் பொடியைக் கலந்து பாதிக்கப் பட்ட இடத்தில் தடவவும்.
- குளிர்: மிளகுக் கஷாயத்தில் பால் கலந்து அடிக்கடி குடிக்கவும்.
இக்கட்டுரை யை எழுதியவர் வாழும் கலையின் மூத்த ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் நிஷா மணிகண்டன் அவர்கள்.