மூலிகைத் தாவரங்களின் நன்மை: வெந்தயம்
ஆரோக்கியத்தின்,அழகின் கருவூலம்
வெந்தயம் ஓர் மூலிகைத் தாவரம். இது சமையலிலும் மருத்துவத்திலும் காலம் காலமாக உபயோகப்படுத்தப்படும் ஒரு மூலிகை. அதன் மணமிக்க கீரையும் வித்தியாசமான மண முள்ள விதையும் இந்தியாவில் வெகு காலமாக பயன் படுத்தப்படுகிறது. பச்சை இலைகள் கீரையாகவும் உலர்ந்த இலைகள் வாசனைப்பொருட்களாகவும் விதைகள் முழுமை யாகவும் முளைக்கட்டியும் பொடியாகவும் பயன்பெறுகிறது.
மற்ற பெயர்கள் :-
தாவரவியலில் இது ட்ரைகோனல்லா யோனுமக்ரேயிகம் எனவும், ஆங்கிலத்தில் பெணுகிரிக் எனவும் சம்க்ருதத்தில் மெதிக்க எனவும், இந்தியில் மேத்தி எனவும் வழங்கப்படுகிறது.
இதன் பலன்கள் :-
ஆயிரமாயிரம் வருடங்களாக வெந்தயம் பெயர் பெற்ற, வீட்டு வைத்தியத்தில் உபயோகப் படுத்தப்படுகிறது. வெயில் காலத்தில் சூட்டைத் தணிக்கவும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும், காய்ச்சலுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மூத்திரத் துவாரத்தில் ஏற்படும் எரிச்சலைத்தணிக்கவும்,மலமிளக்கியாகவும், தலைமுடி வளரவும், வயிற்று வலியை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் பசியைத் தூண்டவும் ஜீரணத்திற்கும் பயன் படுகிறது.
உபயோகிக்கும் முறைகள்:
- சயாடிகா:- வெந்தய விதை விழுதை வலி உள்ள இடத்தில் பூசவேண்டும்.
- ரத்தசோகை :- ஒரு கப் அரிசியுடன் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை வேகவைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து தினமும் ஐந்து நாட்களுக்கு சாப்பிடவும்.
- நெஞ்சுவலி :- ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவிட்டு தேன் சேர்த்து தினமும் உட்கொள்ளவும்.
- அஜீரணம் :- முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடவும்.
- தலை சுற்றல் , தூக்கமின்மை தலைவலி:- இரண்டு ஸ்பூன் வெந்தய இலை சாற்றுடன் தேன் கலந்து தினமும் உட்கொள்ளவும் .
- மலச்சிக்கல்:- ஒரு கப் கொதிக்க வைத்த வெந்தயக்கீரையை தினமும் சாப்பிடவும் .
- முடி கொட்டுதல்:- வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடவும்
- வலியுடன் சிறுநீர்கழிவு, வயிற்று வலி, வயிற்றில் எரிச்சல்:- கால் ஸ்பூன் வெந்தயப்பொடியுடன் மோர் கலந்து பருகவும் .
- வாய்ப்புண்:- வெந்தயக்கீரையை நீரில் கொதிக்கவிட்டு அதை கொண்டு தினமும் நான்கு அல்லது ஐந்து முறை வாய் கொப்பளிக்கவும்
- முகப்பரு, கரும் புள்ளிகள்:- இரவு படுக்கும்போது வெந்தயக்கீரையை முகத்தில் அப்பிக்கொண்டு காலையில் வெந்நீரில் கழுவி விடவும் .
- மார்பகங்களின் வளர்ச்சிக்கு:- அரை ஸ்பூன் வெந்தயப்பொடியுடன் கோதுமை ரவையை கொதிக்கவிட்டு அந்த நீரை பருகவும்
- தொண்டைப்புண்:- வெந்தயம் கொதித்த நீரில் அடிக்கடி கொப்பளிக்கவும்
- பொடுகு:- வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து புங்கம் காய் பொடியால் கழுவி விடவும் தினமும் இதை செய்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்
இதை எழுதியவர் வாழும் கலையின் அனுபவம் மிக்க ஆயுர்வேத ஆலோசகரான டாக்டர் நிஷா மணிகண்டன் ஆவார்.