ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் புத்தாண்டுச் செய்தி
புதன், 2014 பாத் அன்டோகாஸ்ட் ,ஜெர்மனி
மாறும் காலம், மாறாத சாட்சி
ஒரு புத்தாண்டு துவங்கும் நேரம் , பலர் "ஓ! மற்றொரு ஆண்டு போய்விட்டது!" என்று உணர்ந்து தடுமாறும் நேரம். நாம் கடந்து சென்றதை பற்றி சில தருணங்கள் ஆச்சரிய பட்டுப் பின்னர் மீண்டும் பிஸியாகி விடுகிறோம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், கிட்டத் தட்ட ஒவ்வொரு ஆண்டும் இது நடக்கிறது.
இந்த அதிசயத்தின் ஆழத்தை நாம் சென்று பார்த்தால், நம்முள் உள்ள ஓர் அம்சம் எல்லா காலங் களுக்கும் ஒரு சாட்சியாக இருப்பதை உணர்கிறோம். நமக்குள் இருக்கும் இந்த சாட்சி மாற்றம டையாததுடன், காலம் எடுத்து வரும் அனைத்து மாற்றங்களையும் நாம் கவனித்து வருகிறோம்.
கடந்து வந்த வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளும் ஒரு கனவாக மாறிவிட்டன , இந்த கனவு போன்ற வாழ்க்கைத் தன்மை இப்போது விரிவடைந்து கொண்டிருப்பதைப் பற்றிய விழிப்புணர்வு கொள்வதுதான் ஞானம்.
இவ்வாறு உணர்ந்து தெரிந்துகொள்வது மிகுந்த வலிமையளிக்கிறது; மற்றும் நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளால் நீங்கள் அதிர்ச்சியடைவதில்லை. அதே சமயம், நிகழ்வுகள் வாழ்க்கையில் அவற் றின் சொந்த இடத்தைக் கொண்டிருக்கின்றன. நாம் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேறி நகர்ந்து செல்ல வேண்டும்.
இந்த ஆண்டு நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களில், இந்தியாவில் நடந்த தேர்தல்கள் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் மற்றும் தவறான ஆளுமைக்கு எதிராக வாக்களிப்பதில் மக்கள் தீவிரமாக ஒற்றுமையுடன் செயல்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, நாட்டில் ஒரு நிலையான பெரும்பான்மை அரசாங்கம் கிடைத்தது. இந்த மாற்றம் உலக அரங்கில் இந்தியாவை மிகவும் வலுவாக நிலை நிறுத்தி இருக்கிறது. மற்ற நாடுகளுடன் நமது உறவுகள் முன்பிருந்ததை விட மேம்பட்டிருக்கிறது. மற்றும் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில் பேரில் ஐ.நா. சர்வதேச யோகா தினத்தை அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தகுதியை எடுத்துக் காட்டியுள்ளது.
ஆயினும், உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான மக்கள் படுகொலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் இந்த ஆண்டு மிகவும் கவலைக்குரிய விஷயங்களாக உள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆர்ட் ஆப் லிவிங் (வாழும் கலை) மையத்தைத் தீயிட்டு எரித்த அதே குழுவான தெஹ்ரிக்-இ-தாலிபன் தற்போது பெஷாவரில் 130 பள்ளிச் சிறுவர்களைக் கொன்றுள்ளனர். ஐ எஸ் (IS) பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி யுள்ளது. ஈராக்கில் சிஞ்சார் மலைகள் மற்றும் எரிபில் பகுதிகளில் நமது தொண்டர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர், அங்கு யேசிடி (Yezidi) சமூகத்தினர் இனப் படுகொலையில் உயிர்தப்பியவர்கள் உள்ளனர். பல தொந்தரவுகள் இருந்த போதிலும், நமது தொண்டர்கள் விமானம் மூலம் 120 டன்கள் உணவு அளித்து, மற்றும் ஐ எஸ் (IS) இடமிருந்து 200 பெண்களைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால் இன்னும் நிறைய செய்யப்பட வேண்டும்.
நீங்கள் உங்களுள்ளே செல்ல செல்ல, சாட்சி அம்சம் உங்களுக்குள் வளரும்; மற்றும் நீங்கள் நிகழ்வுகள் மூலம் தீண்டப்படாமால் இருப்பீர்கள். நீங்கள் வெளியிலேயே சஞ்சரிக்கும்போது உங் களுள் இருக்கும் நடிகர் சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதில் மிகவும் திறமையானவராகத் திகழ்வார்.
என்ன சவால்கள் இருந்தாலும், ஒரு நல்ல உலகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நமக்குள் நாம் நிறுவியிருக்கையில் இது சாத்தியமாகும்.
நீங்கள் உங்களுள்ளே செல்ல செல்ல, சாட்சி அம்சம் உங்களுக்குள் வளரும்; மற்றும் நீங்கள் நிகழ்வுகள் மூலம் தீண்டப்படாமால் இருப்பீர்கள். நீங்கள் வெளியிலேயே சஞ்சரிக்கும்போது உங்களுள் இருக்கும் நடிகர் சூழ்நிலைகளுக்குப் பதிலளிப்பதில் மிகவும் திறமையானவராகத் திகழ்வார்.
நமக்குள் இருக்கும் இந்த முற்றிலும் எதிர்மாறான அம்சங்கள் தியானம் செய்வதன் மூலம் வளரும். நீங்கள் சுய ஆத்மாவை நெருங்கி வருகையில், உங்கள் செயல்கள் உலகில் சக்தி வாய்ந்ததாகிறது. சரியான செயலைச் செய்யும்போது நீங்கள் சுய ஆத்மாவை நெருங்கி வருகிறீர்கள்.
புத்தாண்டு நெருங்கி வரும் இந்நேரத்தில் உள்ளே அசைக்க முடியாத அளவு உறுதி பெற்று சிறந்த உலகை நோக்கிச் செல்ல தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள். காலம் மக்களை மாற்றும்; ஆனால் காலத்தை மாற்றும் மக்களும் இருக்கின்றனர். நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கக்கூடும்.
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !