ஹோலி

ஹோலி

இந்தியாவில் ஹோலிப் பண்டிகை விளையாட்டுக்கள் நிறைந்த பிரபலமான பண்டிகை. ஹோலி சந்தனம் மற்றும் வண்ணப் பொடிகள் கரைத்த நீருடன் மக்கள் விளையாடி மகிழ்வர்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத் துவக்கத்தில் இப்பண்டிகை கொண்டாடப் படுகிறது. அடர்ந்த நிறங்கள் ஆற்றல் உயிர்ப்பு மற்றும் சந்தோஷத்தைக் குறிப்பிடுவதாக மக்கள் நம்புகின்றனர்.

 

ஹோலியைப் பற்றி குருதேவரின் உரையிலிருந்து சில பகுதிகள்....

வாழ்க்கை வண்ணமயமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வண்ணமும் தனித்தனியாகக் கண்டுணர பட்டு அனுபவிக்கப் பட வேண்டும்; அவையாவும் கலந்து விட்டால் கருப்பாகக் காணப்படும். சிவப்பு, மஞ்சள், பச்சை தனித்தனியாக வைக்கப் பட்டு ஒன்றாகக் கண்டு களிக்கப்  படவேண்டும். அது போன்றே வாழ்க்கையில் ஒருவரால் ஏற்கப்  படும் பல பங்குகள் தனித் தனி யாக அவருக்குள்ளேயே  சாந்தமாக ஏற்கப் படவேண்டும். உதாரணமாக ஓர் தந்தை அலுவலகத் தில் 'தந்தை' யின் பங்கினை ஏற்றால் குழப்பமாகி விடும். நம் நாட்டில் ஓர் அரசியல்வாதி முதலில் 'தந்தை' யாக பங்கேற்று பின்னர் அரசியல்வாதியாகி விடுகிறார் !

எந்த நிலைமையில் நாம் இருந்தாலும் அந்தந்த பங்கை உச்சி வரையில் ஆற்றினால் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும். இந்தக் கோட்பாடு வர்ணாஸ்ரமம் என்று பழங்காலத்தில் அழைக்கப் பட்டு வந்தது. அதாவது, ஒவ்வொருவரும் மருத்துவர், ஆசிரியர், தந்தை யாராயினும் அந்தந்த பங்குகளை சிறப்பாக உற்சாகத்துடன் ஆற்ற வேண்டும். தொழில்களை கலவை செய்வது எப்போதுமே எதிர்வினையாற்றும். மருத்துவர் வணிகராக வேண்டுமெனில்  அவர் வணிகத்தைத் தனிப்பட்ட முறையில் தன்னுடைய இரண்டாவது தொழிலாக ஏற்றுச்   செய்ய வேண்டும்; மருத்து  வத்தில் வணிகத்தைக் கலக்கக் கூடாது. இவ்வாறு  மனதளவில் தனித்தனியான செயல்படும் முறை தான், வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிகோலும். அதைத்தான் ஹோலி கற்றுத் தருகிறது.

அனைத்து நிறங்களும் வெண்மை நிறத்திலிருந்து உருவாகின்றன. அவையனைத்தும் கலந்த நிலையில் கருப்பாக மாறுகின்றன. உங்கள் மனம் வெண்மையாக, உங்கள் மெய்யுணர்வு சாந்தமாக ஆனந்தமாக தியான நிலையில் இருக்கும்போது பல்வேறு வண்ணமயமான பங்குகள் தோன்றுகின்றன. அனைத்துப் பங்குகளையும் முழு நேர்மையுடன் ஏற்று ஆற்ற வலிமை பெறுகிறோம்.அவ்வாப்பொது நமது மெய்யுணர்வை தூய்மைப் படுத்த வேண்டும். உள்நோக்கி விட்டு வெளியே உள்ள வண்ணங்களுடன் விளையாடாத துவங்கினால் மீண்டும் கறுப்பாகவே அனைத்தும் தோன்றும். இடையிடையே ஆழ்ந்த ஓய்வு எடுக்க வேண்டும்; அப்போதுதான் அனைத்துப் பங்குகளையும் நேர்மையுடன்    ஆற்ற முடியும். ஆழ்ந்த ஓய்வுக்குப் பெரும் தடையாக இருப்பது ஆசை. ஆசை அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சிறிய  ஆசைகள் கூட உயர் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.உயர்ந்த இலக்குகள் குறைந்த அளவே கவலைகளை ஏற்படுத்துகிறது ! ஆசைகள் சில நேரங்களில் மனதைச் சித்திரவதை செய்கின்றன.

எனவே ஒருவர்  என்ன செய்ய வேண்டும்?

இதற்கு ஒரே வழி, ஆசையின் மீது கவனத்தைக் குசித்து அதனைச் சரணாகதியாக சமர்ப்பித்து விடுவதுதான். இவ்வாறு விழிப்புணர்வின் மீது கவனத்தைக் குவித்தல் அல்லது (காம)ஆசையைக் கவனித்தல்  காமாக்ஷி என்றழைக்கப் படுகிறது. பெண் தெய்வமான காமாக்ஷி  ஒரு கையில் கரும்பு, மற்றொரு கையில் மலர் என்று காட்சி தருகிறார். கரும்பு கடினமானது, அதைக் கசக்கிப் பிழிந்தால் இனிப்பான ரசம் கிடைக்கும்; ஆனால் மலர் மென்மையானது, அதிலிருந்து இனிப்பான தேனெடுப்பது சுலபம். இது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. வாழ்க்கை இவ்விரண்டும் இணைந்தது. வெளியுலகிலிருந்து அதிக முயற்சியுடன் இன்பத்தை சாறெடுப்பதை விட உள்ளி ருந்து பேரின்பத்தை அடைவது சுலபம்.

வண்ணங்களின் மகிழ்ச்சியுடன்  உங்கள் ஆத்மாவை உயர்த்துங்கள்- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

இந்தப் பண்டிகையுடன் பிரபலமான ஓர் கதை இணைந்துள்ளது.

புராணம் என்பது சமஸ்க்ருதச் சொற்களான புரா நவா அதாவது  "நகரில் எது புதியதோ அது" என்பதிலிருந்து தோன்றியது. புது விதமாக கருத்துக்களை எடுத்துக் கூறுவது என்பதாகும். புராணங்களில் வண்ணமயமான விளக்கங்கள் கதைகள் நிறைந்துள்ளன. மேலோட்டமாகக் காணும்போது அவை கற்பனைக்கு கதைகள் போன்று தோன்றினாலும் உண்மையில் நுட்பமான உண்மைகளை அவை உள்ளடங்கியுள்ளன.

ஹிரண்யகசிபு என்னும் அசுர அரசன் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று விரும்பி னான். ஆனால் அவனது மகனான பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணனின் பக்தன். அதனால் அரசனின் எதிரியானான். கோபமுற்ற அசுரர் அரசன் தனது சகோதரியான ஹோலிகாவிடம் பிரஹலாதனைக் கொன்றுவிடுமாறு கூறினான். நெருப்பைத் தாங்கும் சக்தி பெற்ற ஹோலிகா பிரஹலாதனைத்  தன் மடியில் ஏந்தி எரியும் நெருப்பில் அமர்ந்தாள். நெருப்பில் ஹோலிகா எரிந்து போனாள். ஆனால் பிரஹலாதன் எப்பாதிப்புமின்றி வெளியே வந்தான்.

ஹிரண்யகசிபு  பொருளுலைகை குறிப்பவன். பிரஹலாதன் களங்கமின்மை நம்பிக்கை மற்றும் ஆனந்தம் /பேரின்பம் ஆகியவற்றைக் குறிப்பவன். ஹிரணியகசிபு உலகிலுள்ள மகிழ்ச்சியனைத் தும் பொருளுலகிலிருந்தே பெறப்பட வேண்டுமென விரும்பினான். அவ்வாறு நிகழவில்லை. ஜீவாத்மா எப்போதும் பொருளுலகில் கட்டுண்டு இருக்காது. இயல்பாக நாராயணனை – ஒரு வரின் உயர் ஆத்மநிலையைச் சென்றடையும்.

ஹோலிகா பிரஹலாதனின் கடந்த கால சுமைகளை எரிக்க முயற்சிப்பவளாகச் சித்தரிக்கப் படு கிறாள். நாராயண பக்தியில் வேரூன்றியிருக்கும் பிரஹலாதன் தன்னுடைய அனைத்துக் கடந்த கால எண்ணப்பதிவுகளையும் எரித்து புதிய வண்ணங்களில் மிளிருகிறான். வாழ்க்கை ஓர் கொண்டாட்டமாகிறது. கடந்த காலத்தை எரித்த பின்னர் புதிய துவக்கத்திற்குத் தயாரா கிறீர்கள்.உங்களது உணர்ச்சிகள் நெருப்புப் போன்று உங்களை இருக்கின்றன. ஆனால் வண்ணங்கள் ஒளிரும் போது அவை வாழ்க்கைக்கு கவர்ச்சியைச் சேர்க்கின்றன. அறியாமையில் உணர்ச்சிகள் ஓர் சுமை, ஆனால் ஞானத்தில் அவை வண்ணங்களை சேர்க்கின்றன.

ஒவ்வொரு உணர்ச்சியும் ஒரு வண்ணத்துடன் தொடர்புள்ளது. கோபம் சிவப்புடன், பொறாமை பச்சையுடன், உயிர்த்துடிப்பு மற்றும் ஆனந்தம் மஞ்சளுடன், அன்பு வெளிர் சிவப்புடன், பரந்த மனநிலை  நீளத்துடன். சாந்தம் வெண்மையுடன் தியாகம் காவியுடன் ஞானம் ஊதா நிறத்துடன் தொடர்புள்ளவை.

இந்தப் பண்டிகையின் சாரத்தை அறிந்து, அதனை ஞானத்துடன் அனுபவித்து மகிழுங்கள்.