நமது முழு இருப்பும் ப்ராணா என்று அழைக்கப் படும் நுட்பமான உயிர்சக்தியின் அடிப்படையிலேயே உள்ளது. நமது அமைப்பிலுள்ள நாடிகள் என்னும் நுண்ணிய ஆற்றல் கால்வாய்கள் மற்றும் சக்கிரங்கள் என்னும் ஆற்றல் மையங்களின் வழியாகவே ப்ராணா பாய்ந்தோடுகின்றது. ஆயிரக்கணக்கான நாடிகளும் பல சக்கிரங்களும் நம்முள் இருக்கின்றன. பிரம்மாண்டமான அளவு ஆற்றல் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் சேமிக்கப் பட்டிருக்கும் உள்ளுறை ஆற்றல் குண்டலினி என்று அழைக்கப் படுகின்றது. மேல்நோக்கிச் செல்லும் அந்த ஆற்றலின் மையம் பிற சக்கிரங்களின் மற்றும் நாடிகளின் நிலைமையைப் பொறுத்தே உள்ளது. ஹரி ஓம் தியானம் இந்தச் சக்கிரங்களை செயல்படுத்துவதற்கு உதவுகின்றது.
ஹரி என்னும் சொல்லின் பொருள் " விலக்குபவர்" இந்தப் பெயரை நினைவில் வைத்து, திரும்பத் திரும்பக் கூறுவதால் குற்றங்கள், கர்மவினைகள், தீய ஜோதிட விளைவுகள் சீராக அழிக்கப் படுகின்றன. வலியும் வேதனையும் நீங்குகின்றன. ஓம் என்பது பிரணவ மந்திரம். இதிலிருந்தே அனைத்து படைப்புக்களும் தோன்றின. ஹரி ஓம் மந்திரம் மிகப் புகழ்பெற்ற ஒன்று. அதாவது ஹரி என்பதே ஓம். ஹரி ஓம் மந்திரம் அனைத்து உலகியல் துன்பங்களையும் நீக்குகின்றது. இம்மந்திரத்திலேயே அண்ட அதிர்வு அடங்கியிருக்கின்றது. ஹரி ஓம் தியானத்தின் மூலம் ப்ராணா ஓர் ஆற்றல் மையத்திலிருந்து மற்றொரு ஆற்றல் மையத்திற்கு நகருகின்றது.
முதுகெலும்பினை ஒட்டி ஏழு ஆற்றல் மையங்கள் அல்லது சக்கிரங்கள் அமைந்துள்ளன. ப்ராணா இந்தச் சக்கிரங்கள் வழியாக மேல்நோக்கிச் செல்கின்றது. ஒவ்வொரு சக்கிரத்திலும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் உள்ளது. உதாரணமாக மூலாதார சக்கிரத்தில், அதாவது முதுகுத் தண்டின் அடிப்பாகத்திலுள்ள ஆற்றல் மையத்தில், சோம்பலும் உற்சாகமும் உள்ளன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் ஹரி ஓம் தியானம் பயிலவும், இரண்டாம் நிலை முதிர் தியான பயிற்சி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி இவற்றினை செய்யப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் வழிநடத்தப் படும் ஹரி ஓம் தியானம் குறுந்தகடு ( CD) மற்றும் ஒலி நாடா வடிவில் கிடைக்கும் இடங்கள்: