தோட்ட நகரம் என்றழைக்கப் படும் பசுமையான அழகிய நகரம் பெங்களூரு. இந்த நிசப்தமான தெருக்கள் நிரம்பிய ஜெயநகர்,மற்றும் தகவல் தொழில் நுட்பம் நிறைந்த மின்னணு நகருக்கு வருகை தந்தால், மிகவும் ஆழ்ந்து அனுபவிக்க இவை தவிர வேறொன்றும் உள்ளது.அதற்கு 20 நிமிடங்கள் இருந்தால் போதும்!
பெங்களூருவில் நீங்கள் உங்கள் பெரும்பாலான நேரத்தை 10 முதல் 12 மணி நேரம் வரையில் பணியிலேயே கழிப்பீர்கள். மற்ற நகரவாசிகளைப் போன்றே நீங்களும் பணி யில் கவனமாக முழு நேரமும் இருப்பீர்கள்.அத்தகைய நீண்ட பரபரப்பான வேலை வாரத்திற்குப் பின்னர் நண்பர்களுடன் விருந்துகளுக்கும் பிற இடங்களுக்கும் செல்ல வேடிக்கைகள் நிறைந்த வார இறுதி நாட்களை எதிர் நோக்கிக் கொண்டிருப்பீர்கள்.
இந்த அனைத்து "வெளியே செல்லுதலும்" நன்றாகவே இருக்கும். அழுத்தக் குறைவுக்கு நண்பர்கள் சந்திப்பே சிறந்தது என்று கூறுகிறீர்கள். ஆயினும் அந்நேரத்தில் ஒரு தாற்காலிகமான "உயர்"உணர்வு ஏற்படுகிறது, களைப்புடன் கூடவே! திங்கள் காலையில் எவ்வாறு உணருகிறீர்கள்? மற்றுமொரு வேலை நாளாக இருக்கிறதா?அல்லது உற்சாகமாகச் செல்கின்றீர்களா?
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது என்பதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்களோ, அதே போல் உங்களுக்காக சற்று நேரம் செலவிடவும் எண்ணுவது நல்லது.
அவ்வாறு செய்ய ஒரு நல்ல விதம் - சஹஜ் சமாதி தியானம். இது ஒரு எளிய தியானப் பயிற்சி. எப்போதும் "உயர் நிலை, உடல்நலமின்றி இருந்தால் உடனடி நிவாரணம், பருவநிலை, சூழ்நிலை, பணி நிலை எதுவாயினும் சரி-நன்றாக மகிழ்வாக உணர்வீர்கள் என்பது உறுதி.
நான் ஏன் சஹஜ் பயில வேண்டும்?
- தனித்துவம் வாய்ந்த மந்திரம் இணைந்த பயிற்சி
- கற்பது எளிது
- பெங்களூருவில் ஒரு சஹஜ் வகுப்பு கண்டுபிடிப்பது எளிது
- அது 20 நிமிட நேரம் மட்டும்தான்
- ஒரு முறை கற்றுக் கொண்டு விட்டால் பின்னர் நீங்களே செய்யலாம்.
- ஏராளமான நன்மைகள்
- ஒழுங்கான பின் தொடர் வகுப்புகள் உண்டு
பத்து மணி நேர பணி நேரத்திற்குப் பின்னர்,ஒரு பாம்பு போன்ற போக்குவரத்து கோடுகளை தாண்டினால் கூட தியானப் பயிற்சி உங்களை சாந்தமாக வைக்கும். புதிதாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, இங்கு வந்திருந்தாலும் இந்த பெங்களூரு வானிலை, உணவு அனைத்தையும் உங்களைச் சமாளிக்க வைக்கும்.
நான் படபடப்பாக உணரும்போது, ஒரு நிசப்தமான மூலையில் அமர்ந்து தியானம் செய்வேன்.என்கிறார் ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையைக் கொண்ட ஜெயநகர் வாசி."20 நிமிஷ சஹஜ் சமாதி தியானம் உடனடியாக எனக்கு ஆழ்ந்த ஓய்வை அளித்து, ஆக்கத் திறனைக் கூட்டுகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கற்றுக் கொண்டேன், நம்பகமான தீர்வு இது" என்று கூறுகிறார்.
சஹஜ் சமாதி தியானப் பயிற்சிக்கு தனித்துவம் அளிப்பது எது?
(சஹஜ் சமாதி வல்லுனர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்)
#1 எளிய ஆனால் ஆழமான செறிவுள்ளது.
ஆழமான செறிவுள்ள ஒன்றாக கற்க மிகவும் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டும் என்றும் எளிதாகக் கிடைப்பது ஆழ்ந்த செறிவுள்ளது அல்ல என்றும்,பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள். ஆழ்ந்த செறிவுள்ள சஹஜ் சமாதி தியானம் எளிதாகக் கிடைக்ககூடியதாகவும் எளிதாகக் கற்கக் கூடியதாகவும் வடிவமைக்கப் பட்டிருகின்றது.
#2 ஆழ்ந்து செல்ல ஓர் வாகனம்
நீங்கள் ஜெய நகரிலிருந்து கோர மங்களா செல்ல வேண்டுமெனில், நடந்து செல்லலாம். காரில் சென்றால் எளிதாகவும் விரைவாகவும் மேம்பட்ட அனுபவத்துடனும் செல்ல முடியும்.அது போன்றே, இந்த வகுப்பில் கற்பிக்கப் படும் மந்திரம், ஒரு சக்தி வாய்ந்த வாகனமாக திகழ்ந்து, உங்களை முயற்சியின்றி ஆழ் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.
#3 நம் பழமையான முனிவர்களின் பரிசு
தியானம் உடலையும் மனதையும் இளைப்பாற்றுகின்றது. ஆயினும் நாம் இளைப்பாறும்போது, சில சமயங்களில் கண்ணயர்ந்து விடுவோம்.நமது பழங்கால ஞானிகள் இதையுணர்ந்து, ஒரு எளிய வழியினைக் கர்பித்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தப் படும் ஒலி அதிர்வின் மூலம் (மந்த்ரம்) விழிப்புணர்வுடன் கூடிய ஆழ்ந்த இளைப்பாறல் நிகழ்கின்றது.
#4 எங்கு வேண்டுமானாலும் எந்நேரத்திலும்...
நான் எங்கு சஹஜ் சமாதி தியானம் கற்க முடியும்?
- உங்களுக்கு அருகாமையில் உள்ள எந்த சஹஜ் தியான மையத்திலும் கற்கலாம்.
- பெங்களூருவில் வாழும் கலை சர்வ தேச மையத்தில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கற்கலாம்.
யாரை அணுகி விசாரிக்கலாம்?
sahajsamadhi@vvmvp.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்
எங்கேயும் வசதியாக அமர்ந்து செய்யலாம். ஒரு மருத்துவரிடம் காத்திருக்கும் நேரத்தில், போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் (அப்போது வண்டி ஒட்டாத)நேரத்தில் , ஒரு வணிக வளாகத்தில் நண்பருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் மற்றும் வீட்டில், அலுவலகத்தில்....
சரி! எங்கு பெங்களூருவில் தியான வகுப்புக்கள் என்று கண்டு பிடிக்க விரும்புகிறீர்களா?
பரபரப்பான பெங்களூரு நகரில் உங்கள் புலன்களை விழிப்படையச் செய்யும் இடம்...
நீங்கள் சஹஜ் சமாதி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால், வாழும் கலை சர்வ தேச மையமே சிறந்த அழகான தேர்வு ஆகும். அங்குள்ள பசுமையான மரங்கள், புத்துணர்வு அளிக்கும். உங்கள் காதுகள் பறவைகளின் இனிமையான ஒளியில் நனையும்.மிக அமைதியான விசாலாக்ஷி மண்டபம்(ஐந்து அடுக்குகள் கொண்டது)உங்களை ஆழ்ந்து தியானத்தில் சென்று ஓய்வெடுக்க வைக்கும்.
இயற்கைஎழில் மிகுந்த இடம் உங்களுடனேயே ஆழ்ந்திருக்கலாம்" என்று கூறுகிறார் இங்கு தியானப் பயிற்சி பெற்ற குஞ்சன்.
எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். இன்றே சஹஜ் சமாதி தியான பயிற்சிக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்.ஆசைகள் மற்றும் முன்னுரிமைகள் நிறைந்த களேபரமான அன்றாட வாழ்வில் உங்களுக்கு அமைதியளிக்கும் ஒன்று. நன்றான அந்த ஒன்றை இன்றே செய்யுங்கள்!
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் அருளுரைகளைளிருந்து எடுக்கப் பட்டது