பெண்: நான் முடிவு செய்து விட்டேன்,இளஞ்சிவப்பு நிறம்தான் எனக்கு வேண்டும்
தெனாலி: நல்லது. உன் விருப்பப்படியே ஆகட்டும். இந்தக் கண்ணாடியினை அணிந்து கொள். சுவர்கள் மட்டுமல்லா, நான் கூட இளஞ்சிவப்பு வண்ணத்திலேயே தெரிவேன்.
தெனாலி ராமன் என்று அன்புடன் நினைவு கூறப்படும் ராமகிருஷ்ணா ஓர் 16 ஆம் நூற்றாண்டு கவிஞன். இந்தியாவில், விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்.தெனாலி என்னும் சிறு நகரைச் சேர்ந்தவர். இன்றும் அசாதரணமான நகைச் சுவை புத்திக் கூர்மை,ஞானம் ஆகியவற்றுக்காக நினைவில் கொள்ளப் படுகின்றார்.
நாம் வாழ்வில் வேண்டுவது என்ன? கணக்கில் 100 மதிப்பெண்கள் வாங்குவதிலிருந்து பங்கீ குதியல் முறையினை பயிலுவதிலிருந்து மகளுக்குத் திருமணம் செய்வது வரையில் ஒரு பெரிய பட்டியல் தயாராக இருக்கலாம்.ஆயினும் ஒவ்வொரு செயலிலும் இறுதியாக வேண்டுவது மகிழ்ச்சியே.எவ்வாறு மகிழ்ச்சியை நாடுவதை விடுத்து மகிழ்ச்சியாகவே வாழ்க்கையை வாழுவது எப்படி?
#1: இப்போதே மகிழ்ச்சியாக இருங்கள்!
கடற்கரைக் காற்றை அனுபவித்துக் கொண்டு கனவுலகில் சஞ்சரிக்கும் ஓர் விரிந்த புன்னகை யுடன் தெனாலி ராமனின் நண்பன் ஒரு ஊஞ்சலில் படுத்துக் கொண்டுஇருந்தான்.
தெனாலி: ஏன் நீ தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருக்கிறாய்?
நண்பன்: நான் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கப் போகும் நாளை எண்ணி சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
தெனாலி:அது எப்போது?
நண்பன்:கடலோரம் எனக்கு ஓர் சொந்த வீடு. வசதியான கார், வங்கியில் அதிக பணம் அழகான பெண்ணுடன் திருமணம், நான்கு ஆண் குழந்தைகள், அவர்களுக்கு நல்ல வேலை அமையும் விதத்தில்,உயர்ந்த கல்வி, ஏராளமான சம்பாத்தியம் பின்னர்...
தெனாலி:: எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்குப் பின்னர் என்ன செய்வாய்?
நண்பன்: பின்னர் நான் இளைப்பாறி, கால் மேல் கால் போட்டு சுகமாக இளஞ்சூரிய ஒளியில் கடற்கரைக் காற்றை அனுபவிப்பேன்.
தெனாலி:நண்பனே! அத்தகைய கடின வேலைகள் எதையும் செய்யும் முன்னரே இப்போதே நீ அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய் !
சாதரணமாக எவ்வாறு நாம் நமது மகிழ்ச்சியை ஒத்தி வைத்துக் கொண்டே இருக்கின்றோம் பார்த்தீர்களா ? உதாரணமாக நீங்கள் பள்ளியில் இருக்கும்போது, " இப்பள்ளிக் கல்வி முடிந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணுகிறீர்கள்.பின்னர் கல்லூரி, பின்னர் பணி, இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஓர் ஆசையை நிறைவேற்றுகின்றீர்கள் தாற்காலிகமாக மகிழ்வுணர்வு ஏற்படுகிறது ஆனால் அதை நீங்கள் கண்டுணரும் முன்னரே வேறு எதிலாவது மகிழ்ச்சியைத் தேடத் துவங்குகின்றீர்கள்."சரியான வாழ்க்கைத் துணை அமைந்தால் நான் மகிழ்ழியாக இருப்பேன்." பின்னர் எனக்கு பதவியுயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். என்று சங்கிலித் தொடர் போன்று போய்க் கொண்டே இருக்கின்றது.
மகிழ்ச்சி எங்கோ வருங்காலத்தில் இல்லை. சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாக நேற்றோ நாளையோ இருக்க முடியுமா? நீங்கள் திட்டமிடலாம், ஆனால் மகிழ்ச்சியாக இப்போது மட்டுமே இருக்க முடியும்.அல்லவா? சந்தோஷமாக அனைத்தையும் செய்து கொண்டிருப்பது என்பது எப்படி? மகிழ்ச்சியைத் தேடி,ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொண்டிருப்பது என்பது எப்படி இருக்கிறது? தியானம் மட்டுமே இதற்கு விடை.தியானம் மனதை நிகழ் தருணத்திற்கு எடுத்து வருகின்றது. அங்குதான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது.அதுவே உங்களுக்கு ஒவ்வொரு நொடியும் புன்முறுவலுடன் இருக்கும் வலுவினைத் தருகின்றது.
#2: உங்களிடம் இருப்பதில் மன நிறைவினை அடையுங்கள்
ஒரு நாள், தெனாலி ராமன், ஒரு மனிதன் ஒரு பெரிய வட்ட வடிவ கேடயத்தால் சூரியன் ஒளி வரும் திசையில் தனது தலையினை மறைத்து நடந்து சென்று கொண்டிருந்தான். ஏன் அவ்வாறு செய்கிறான் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தெனாலி அவனது அண்மையில் சென்று விசாரித்தான்.
தெனாலி:என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
அம்மனிதன்:சூரியனை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகவும் வெளிச்சமாக உள்ளது.
தெனாலி:நண்பனே! ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறாய்? என்னிடம் ஓர் எளிய வழி உள்ளது.
என்று கூறியவாறே தெனாலிராமன் ஒரு துளி மணலை எடுத்து அம்மனிதனின் கண்களில் ஊதினான்.
நீங்கள் எப்போதுமே ஆசைகளின் பின்னாலேயே அவை மகிழ்ச்சியினைப் பெற்றுத் தரும் என்று எண்ணி ஓடிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த துரத்திப் பிடிக்கும் ஓட்டத்தில், உங்களிடம் ஏற்கனவே என்ன உள்ளதோ அதை அனுபவிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.இந்த ஆசைகள் கண்ணில் விழும் மணல் தூள்கள் மாதிரியாகும்.அவை உங்களிடம் ஏற்கனவே இருக்கும் அழகினை கண்டெடுக்க முடியாமல் செய்து விடுகின்றன.
தியானம் இத்தகைய ஜுர வேகத்திலிருந்து நம்மை விடுவிக்கின்றது.அழுக்குகளை நீக்கி விடுகின்றது.உள் விடுதலையையும் மன நிறைவினையும் அளிக்கின்றது.
#3: தியானத்தின் மூலம் கவனிப்பு, கருத்து, மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
தெனாலி ராமனும் அவரது மனைவியும் தங்கள் வீட்டு சுவர்களுக்கு என்ன வண்ணம் தீட்டுவது என்று முடிவு செய்து கொண்டிருந்தார்கள்.
மனைவி:எனக்கு இளம் சிவப்பு வண்ணம்தான் வேண்டும்!
தெனாலி:நீ உறுதியாக இருக்கிறாயா? வெண்மை சிறந்ததல்லவா? பிரகாசமாக இருக்கும்!
மனைவி: என் மனதில் தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இளம் சிவப்பு வண்ணம்தான் எனக்கு வேண்டும் அதுவே எனக்கு மகிழ்வளிக்கும்.
தெனாலி:( இளம் சிவப்பு வண்ண கண்ணாடிகளை அவளிடம் தந்து) நல்லது. உன் வழியிலேயே ஆகட்டும். இந்தக் கண்ணாடிகளை அணிந்து கொள். இந்தச் சுவர்கள் மட்டுமல்ல, நானுமே இளம்சிவப்பு வண்ணத்தில் இருப்பேன்!
தெனாலி ராமன் என்ன எண்ணினார்? இளம் சிவப்பு வண்ணக் கண்ணாடிகள் அணிந்தால் வீடு இளம் சிவப்பு வண்ணமாகாது. கண்ணாடிகள் உண்மையை உணருதலை அழுத்தும்.அதன் பயனாக எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நம்மால் பார்க்க முடியாது.அது தவறான புரிதலை ஏற்படுத்தி அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.இந்த தீய வட்டத்தினை ஒருவன் எவ்வாறு கடப்பது?
தியானம் உங்களுக்குத் தெளிவையும் எதுவுமே எவ்வாறு உள்ளதோ அவ்வாறே காணும் திறமையையும் அளிக்கின்றது.கவனிப்பு, கருத்து மற்றும் வெளிப்பாடு ஆகிய அனைத்தும் தியானத்தின் மூலம் மேம்படுகின்றன. சில குறைந்த அளவு தவறான புரிதல்கள், தொடர்பு இடைவெளி இவற்றுடன் மகிழ்ச்சியாக இருப்பது எளிதாகும்.
தியானம் உங்களுக்குத் தெளிவையும் எதுவுமே எவ்வாறு உள்ளதோ அவ்வாறே காணும் திறமையையும் அளிக்கின்றது.கவனிப்பு, கருத்து மற்றும் வெளிப்பாடு ஆகிய அனைத்தும் தியானத்தின் மூலம் மேம்படுகின்றன.
சில குறைந்த அளவு தவறான புரிதல்கள், தொடர்பு இடைவெளி இவற்றுடன் மகிழ்ச்சியாக இருப்பது எளிதாகும்.
#4: எப்படியாவது உங்கள் மனதை காத்துக் கொள்ளுங்கள்
தெனாலி ராமனும் அவரது மனைவியும் ஒரு நண்பரின் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். தெனாலியின் மனைவி அழகிய புடவையும் நகைகளும் அணிந்திருந்தாள்.
திடீரென்று பின்னாலிலிருந்து ஒரு மாட்டு வண்டி முற்றிலும் கட்டுப்பாடின்றி நெருங்கி வந்தது. தெனாலி விரைவாகத் தன மனைவியைத் தன்னை நோக்கி இழுத்து கொண்டதில் இருவரும் நிலை தவறி சாலையில் இருந்த ஓர் குழியில் விழுந்து விட்டனர்.
மனைவி: (வருத்தத்துடன்) என்ன செய்து விட்டீர்கள்? என்னுடைய அழகிய சேலை பாழாகி விட்டதே? எவ்வாறு நான் இந்த நிலையில் திருமணத்திற்கு செல்ல முடியும்?!
தெனாலி:(அவள் காப்பாற்றப் பட்டதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே ) நல்லது, ஓர் புதிய சேலை வாங்குவதற்குத் தருணம் வந்து விட்டது !
நல்லது செய்யப் போக, சற்று இனிமையற்ற நிகழ்வுகளில் மாட்டிக் கொண்ட சூழலில் இருந்திருக்கின்றீர்களா? அத்தகைய தருணங்களில் நீங்கள் வருந்தி, உங்களை நீங்களே குறை கூறிக் கொண்டிருந்திருக்கின்றீர்களா? இது ஏனென்றால் உங்கள் நோக்கம் நல்லதே என்னும்விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான். செயல்கள் நிறைவானதாக இல்லாவிடினும் நோக்கம் தூய்மையாக இருக்க வேண்டும். தியானத்தின் மூலம் நமது நோக்கத்தை அறிந்து கொண்டு செயலில் உள்ள நிறைவின்மையை ஏற்றுக் கொள்ள முடியும். இது நம் மனத்தைக் காத்து, நம்மை எது வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்கின்றது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.
சஹஜ் சமாதி வல்லுநர் பாரதி ஹரீஷ் அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கி திவ்யாசச்தேவ் அவர்களால் தொகுக்கப் பட்டது.