எவ்வாறு நாம் தியானத்திற்குத் தயார் செய்து கொள்வது? முதலில் இயல்பாக இருங்கள் ! இறுக்கமாக இருந்தால் தியானம் செய்ய முடியாது. தியானம் செய்ய நீங்கள் முறை சாராமல் இயல்பாக இருக்க வேண்டும்.
இப்போது ஏன் தியானம்செய்ய வேண்டும் எவ்வாறு வெற்றி கரமாக தியானம் செய்வது மற்றும் பல்வேறு வகையான தியானங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
ஒவ்வொரு மனிதப் பிறவியும் தியானம் செய்ய வேண்டும்.ஏனெனில் குறையாத இன்பமும் அழியாத அன்பும் அது எதிர்மறை உணர்ச்சியாக மல் இருக்க வேண்டும் என்பதுவும் மனித வாழ்க்கையின் இயல்பான தேடுதல் ஆகும்.
தியானம் என்பது அயலான ஒன்றா என்ன? இல்லவே இல்லை. பிறப்பதற்கு முன்னர் இரண்டு மாதங்கள் நீங்கள் தியனத்தில்தான் இருந்தீர்கள். உங்கள் தாயின் கருவில் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தீர்கள்! உங்கள் உணவைக் கூட சுவைக்க வில்லை,அது உங்களுக்கு உங்கள் வயிற்றுக்கு நேராகவே வழங்கப் பட்டது, இங்குமங்குமாக திரும்பியும் உதைத்தும் நீங்கள் திரவத்தில் மகிழ்வாக மிதந்து கொண்டிருந்தீர்கள். அதுவே தியானம்.எதுவும் செய்ய வில்லை.அனைத்தும் உங்களுக்குச் செய்யப் பட்டது. எனவே அத்தகைய சுகமான நிலையை தேடுவது என்பது அனைத்து மனித உயிர்களுக்கும் இயல்பான நிலையே ஆகும்.
உங்களுக்கு அந்நிலை ஏன் தேவைப் படுகிறது தெரியுமா? ஏனெனில், நீங்கள் அந்த வசதியான சுகமான நிலை தியான நிலையில் ஓர் சமயத்தில் இருந்தீர்கள்.
தியானம் என்பது முற்றிலும் வசதியான நிலை. இந்த களேபரமான உலக வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே அனுபவித்துவிட்ட அந்த நிலைக்குத் திரும்பச் செல்ல விரும்புவது இயற்கைதான். ஏனெனில் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே மீழ்சுற்றுதான். அனைத்தும் மூலத்திற்கே செல்ல விரும்பும். அதுவே உலக இயல்பு.
இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து விடுகின்றன.மண்ணிற்குச் செல்கின்றன. இயற்கை அவற்றை மறு சுழற்சி செய்ய அதனுடைய சொந்த வழியினைப் பின்பற்றுகின்றது. இயற்கையான மறு சுழற்சி என்பது அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கும் எண்ணப் பதிவுகள் அனைத்தையும் விட்டு, இந்த உலகிற்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அந்த மூலத்திற்கே செல்ல விரும்புவதுதான், அதுவே தியானம்.புதுமையாகவும் உயிரோட்டத்துடனும் ஆவதே தியானம்.உங்களது இயல்பான குணமாகிய சாந்த நிலைக்குத் திரும்புவதே தியானம்.முழுமையான மகிழ்வும் ஆனந்தமுமே தியானம்.
எழுச்சியற்ற இன்பமே தியானம். பதட்டம் இல்லாத சிலிர்ப்பே தியானம்.வெறுப்பில்லாத அன்பே தியானம். தியானம் ஆத்மாவின் உணவு. உணவிற்கு ஏங்குவது இயற்கையே. பசியுடன் இருக்கும்போது தன்னிச்சையாகவே எதையாவது உண்கின்றீர்கள்.தாகமாக இருந்தால், நீர் அருந்துகிறீர்கள். அதே போன்று, ஆத்மா தியானத்தை விரும்பி ஏங்குகிறது.அதுவே அனைவருக்கும் இயல்பான ஒன்றாகும்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட ஞானத்தினை வேண்டாதவர் இல்லை.அதை அறிவதில்லை அவ்வளவுதான். எங்கு உணவு கிடைப்பது இல்லையோ அங்கேயே அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம், அதுதான் பிரச்சினை.
கலிபோர்னியாவில் 20 ஏப்ரல் 2012 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அளித்த,தியான ரகசியங்கள் என்னும் தொடர் உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது. இவையனைத்தும் ஞான உரைகளில் உள்ளது.