வாழும் கலையுடன் இணைந்து, 156 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் யோகா பாயினை விரித்தனர் (Yoga Day in Tamil)

India
21st of Jun 2016

பெங்களூரு: முதிர் நிலை பயிற்சியாளர்கள் மற்றும் ஆரம்ப நிலையில் கற்பவர்கள் என அனைத்துத் தரப்பு யோகா ஆர்வலர்களும் வாழும் கலையுடன் இணைந்து இரண்டாவது சர்வதேச யோகா தினத்(International Yoga Day) தைக் கொண்டாடினர். பல்வேறு விதமான பின்புலங்கள், கலாச்சாரங்கள் சமூக படி நிலைகள் ஆகியவற்றிலிருந்து வந்த மக்கள் யோகாவின் பொதுமையை உடற்பயிற்சி என்னும் நிலையில் மட்டுமல்லாது உடல், மனம் மற்றும் ஆத்மாவின் மொத்தக் கூட்டிணைப்பு என்னும் வகையில் அனுபவித்தறிந்தனர்.

நிகழ்வினைக் குறிப்பிடும் வகையில், வகையில், சாதாரண யோகா நெறிமுறையின் அடிப் படையில் யோகா அமர்வுகள் சிறைச்சாலைகள், நிறுவன அலுவலகங்கள் (1000 இடங்களில்) சரக்கு கப்பல்கள் , சிறப்பாக மாற்றுத்திறன்குழந்தைகளுக்கான பள்ளிகள், இந்தியா பாகிஸ்தான் எல்லை, பொது பூங்காக்கள், மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன . இந்தியாவில், ஒரு மாத கால இலவச யோகா(Yoga) முகாம்கள் நாட்டின் அனைத்து முக்கிய மாவட்டங் களிலும் நடைபெற்று முடிவுக்கு வந்தது. வாழும் கலை, மத்திய யோகா மற்றும் நேச்சுரோபதி ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த முகாம்களை ஏற்பாடு செய்தது.

இந்தியர்கள் பெருமைப்படும் வகையில், வாழும் கலையின் நிறுவனர் குரு தேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(Gurudev Sri Sri RaviShankar) அவர்கள் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில், சர்வதேச யோகா தின (International Yoga Day) கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தார். அவர், மதிப்புமிக்க யெஹுதி மெனுஹின் ஹாலில் ஒரு கேள்வி பதில் அமர்வு, ஒரு வழிகாட்டுதல் தியானம் (Meditation)ஆகிய வற்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார். குருதேவ் அவர்கள், வாஷிங்டன்டிசி, பாஸ்டன், கொலம்பஸ், மினிசோட்டா, சான்பிரான்சிஸ்கோ, போர்ட்லேண்ட், மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களில் தியானத் தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உசிதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தொடர்ச்சியாக பொது நிகழ்ச்சிகளை வழி நடத்துவார். அண்மையில் யூ கே யில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு, அங்குள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் , தியானம் 2.0 (Meditation 2.0), என்னும் ஓர் சிறப்பு நிகழ்வினை நடத்தினார். யூ கே யின் பிரதமரான டேவிட் கேமெரூன் வலைத் தள தாரையின் வழியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

யோகா (Yoga) தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு முன்னோடியாக, வாழும்கலை அமைப்பு "யோகாவின் மீது சூரியன் மறைவதில்லை" என்னும் பிரசார நிகழ்வை முன்வைத்தது. உலகெங்கிலும் மக்கள் அதிகாலைப் பொழுதில் குறிப்பிடத்தக்க இடங்களான , இந்தியா கேட், வாழும் கலை சர்வதேச மையம் பெங்களூர், வோர்லி கடல் இணைப்பு, சித்தோர்கர் கோட்டை, சாஹ்ரான் அரண்மனை (ஜோர்டான்), படான் தர்பார்சதுரம் (நேபால்), லயன் சிட்டி (சிங்கப்பூர்), விக்டோரியா ஹார்பர் (ஹாங்காங்) மற்றும் பேரூத்(லெபனான்), பெலாரஸ், ​​ரஷ்யா, நியூசிலாந்து, பூட்டான், தைவான், கஜகஸ்தான் மற்றும் பிற பல இடங்களில் பண்டைய நுட்பமான சூரிய நமஸ்காரம் (Surya Namaskar) எனும் பயிற்சியினைச் செய்தனர்.