நாம் சிந்தனை செய்பவர்களை பார்த்து வியக்கின்றோம். ஐன்ஸ்ட்டின், பிளாட்டோ, ஆர்க்கிமிடிஸ், மேரி கியூரி, சார்லஸ் டார்வின், வில்லியம் ஷேக்ஸ்பியர். இது போன்ற புத்தி கூர்மை மிகுந்த, புதுமை சிந்தனை கொண்ட, உள்ளுணர்வு கூடிய மக்கள், அவர்களுடைய தாக்கம் நிறைந்த எண்ணங்களால் உலகின் வழியை மாற்றி அமைத்தார்கள். எப்படி இருந்தாலும், சிந்தனை செய்வது என்பது நேர்மறையான தன்மை என்று கருதப்பட்டது, ஆனால் அளவுக்கு மீறிய சிந்தனை அல்ல.
அது ஒரு தொடர்பில்லாத பல பல எண்ணங்களின் தாக்குதல். அளவுக்கு மீறிய சிந்தனை, மனதில் தெளிவை கொண்டு வராதது மட்டுமல்லாமல், உங்களை ஒரு அறிவுபூர்வமான தீர்வையும் எடுக்க விடாது. அது வன்மம் மற்றும் அலைக்கழிப்புடன் கூடிய தேவையில்லாத எண்ணங்களை தான் தோற்றுவிக்கும். அளவுக்கு மீறிய சிந்தனைக்கு பழக்கப்பட்ட மனதில், சரியான கண்ணோட்டம் மறைக்கப்படுகிறது. கடந்தகாலத்தை மாற்ற முடியாது, யாருக்கும் எதிர்காலம் என்ன என்பது தெரியாது என்பது உங்களுக்கு தெரியுமா? இருந்தும் இந்த மனது, எண்ணங்களின் குவியல்களில் தொலைந்து போகிறது. உங்களுடைய கடந்த கால தவறுகளில் இருந்து படம் கற்றுக்கொள்வதற்கும், அந்த தவறுகளால் அலைக்கழிக்க படுவதற்கும் இடையே ஒரு சிறு நூலளவு இடைவெளி தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் எப்போதாவது ஒரு சிறு குழந்தையை கவனித்து இருக்கிறீர்களா, ஒரு குழந்தையின் மனதில் "இன்று" என்பது மட்டுமே இருப்பதை உங்களால் பார்க்க முடியும். கடந்தகாலத்தை பற்றியோ, எதிர்காலத்தை பற்றியோ எந்த வித எண்ணங்களும் இல்லாமல், இந்த கணத்தில் மட்டுமே வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். நாம் அனைவரும் கூட குழந்தைகளாக இருந்தவர்கள் தான். நமக்கும், அதீத சிந்தனைகளின் அழுத்தத்தில் இருந்து வெளி வந்து இந்த கணத்தில் வாழும் திறமை இருக்கிறது. எவ்வாறு?
அதீத சிந்தனைகளில் இருந்து வெளி வர தியானத்தை முயற்சித்து பாருங்கள். அது உங்களை, எளிமையான அந்த நாட்களுக்கு மீண்டும் போக உதவும்.
அதீத சிந்தனைகளை நிறுத்த, தியானம் எவ்வாறு உதவுகிறது என்பதற்கான 4 காரணங்கள்.
1. உங்களுடைய கண்ணோட்டத்தை நேர்படுத்துகிறது.
அதீத சிந்தனை உங்களுடைய மனதை, தேவையில்லாத எண்ணங்களாலும், கருத்துக்களாலும் கொள்ளை நோய் போன்று பற்றிக் கொள்கிறது. அது உங்களை, சந்தேகங்கள், கற்பனை பயங்கள், ஐயங்கள், வருத்தங்கள், மற்றும் நிதர்சனத்தில் இருந்து மாறுபட செய்து மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுகிறது. இது போன்ற எந்த பண்பும் அமைதியான அல்லது சந்தோசமான வாழ்க்கைக்கு வழி வகுக்காது. தியானம் உங்களுக்கு சிறந்த காணோட்டத்தை அளித்து, இங்கு ஒரு மிகப்பெரிய நிலை இருப்பதை உணரச்செய்கிறது. உங்களுடைய எண்ணங்கள் எவ்வளவு குறுகியதாயும், தடைகளோடும் இருக்கிறது என்பதையும் உங்களால் உணர முடியும். இதில் மேலும் நீங்கள் ஆராய தயாராகும் போது, உங்களுடைய வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளுக்கான புள்ளிகளை உங்களால் இணைக்க முடியும்.
2. எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதுவுகிறது.
நிறைய நேரங்களில், நம் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களுக்கான காரணங்களை தேடி தீர்க்க முற்படுகிறோம். உங்கள் குழப்பங்களுக்கு மற்றவரை கை காட்ட முடிந்தால் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது எளிதாகிறது. தியானம் இது போன்ற எதிர்மறை எண்ணங்கள், மற்றவரை குறை கூறுதல் மற்றும் அவர்களை காரணமாக கை காட்டுதல் போன்றவைகளில் இருந்து மீண்டு வர செய்கிறது. மனதார தியானத்தை முயற்சி செய்யுங்கள். அது ஒரு அதிசயம் போல செயல்பட்டு, உங்களுடைய அதீத சிந்தனைகளை நிறுத்துகிறது. இது போன்ற விழிப்புணர்வு நிலையில், உங்களால் எதிர்மறை எண்ணங்களை அழித்து, மேன்மையான உண்மை நிலையை அடைய முடிகிறது. மேலும் இது உங்களை சிறந்த எண்ணங்களிலும் செயல்களிலும் ஈடுபட உதவுகிறது.
3. உங்களுடைய மனதின் கலக்கத்தை அகற்றுங்கள்.
அதீத எண்ணங்கள் என்பது, உங்களுடைய மனதை எதுவோ நச்சரித்துக் கொண்டிருப்பதற்கான வெளிப்பாடு. உங்களுடைய அமைதியில்லா நிலையின் ஆழம் வரை சென்று, அதை நேருக்கு நேராக சந்தியுங்கள்.
தியானம் உங்களுடைய மனதின் கலக்கத்தை நீக்க உதவுகிறது. அதன் பின் உங்கள் புத்தியால் தெளிவாக ஆராயவும், முதண்மைப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இயலும். ஒருமுறை பிரச்சனை என்ன என்பதை அறிந்து கொண்டு விட்டால், அதை தீர்ப்பதற்கான முயற்சியை எடுக்கலாம். இதன் மூலம் சம்பந்தமில்லாத, எதிர்மறை எண்ணங்களின் தொகுப்புகளின் நடுவே வளைந்து நெளிந்து கொண்டு செல்வதை தடுக்க முடியும்.
4. உங்களை பற்றில் இருந்து விடுவிக்கிறது.
அதீத எண்ணங்கள் என்பது, உங்களின் வார்த்தைகள், செயல்கள், கருத்துக்கள், மற்றும் எண்ணங்களின் மேலுள்ள உங்களுடைய பற்றின் வெளிப்பாடே ஆகும். நாம் மனிதர்களிடமும், மற்றும் உறவுகளிலும் மிகுந்த பற்றை கொண்டு விடுகிறோம். இது காரணங்களையும், தீர்வுகளையும் மேகம் போல மறைத்து, நம்மை அதீத விமர்சகராயும், அதீத பகுப்பாய்பவராயும் செய்து விடுகிறது.
நீங்கள் எவ்வாறு உறவுகளில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ள முடியும்?
தியானம் உங்களை அதீத பற்றில் இருந்தும், அதீத சிந்தனைகளில் இருந்தும் உடைத்துக் கொண்டு வெளிவர உதவுகிறது. அது உங்களுக்கு தெளிவான மனதை தந்து, உங்களின் மனதின் எல்லையை விரிவாக்குகிறது. இதன் விளைவு கண்டிப்பாக, நாம் வாழ்வின் உள்ள எல்லையற்ற சாத்தியக்கூறுக்கான நம்பிக்கையை விரிவாக்குகிறது.
நினைவில் கொள்வதற்கு 3 விரைவான குறிப்புகள்.
- தியானத்தை தொடங்குவதற்காக, அதீத எண்ணங்களின் தொடர்கள் தோன்றுவதற்கு காத்திருக்காதீர்கள்
- உங்களின் பதட்டத்தில் இருந்து வெளிவர, தினமும் இருமுறை 20 நிமிடங்கள் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மன அழுத்தம் உருவாகும் போது, அது அதீத சிந்தனைக்கும், அதீத ஆராய்ச்சிக்கும் வழிவகுக்கிறது. நீங்கள் இப்போது தான் தொடங்குபவராய் இருந்தால், மன அழுத்தத்தை நீக்கும் தியானத்தை வழிகாட்டுதலின் படி செய்யும் போது, அது அதீத எண்ணங்களை தடுக்கிறது
- நல்ல உணர்வுகளின் மீதான அதீத எண்ணங்களும் எதிர்வினையை தந்து விடும். நீங்கள் ஒவ்வொரு புதிய அனுபவத்தையும், ஒரு உயர்ந்த ஒன்றோடு, தொடர்ந்து பொருத்தி பார்த்து கொண்டிருப்பீர்கள். அடிக்கடி இல்லாவிட்டாலும், நீங்கள் உங்கள் எதிர்பார்ப்பில் குறுகிய அளவில் விழுந்து கொண்டு தான் இருப்பீர்கள். அதனால், அதீத எண்ணங்களான படுகுழியில் கவனமாக இருங்கள்..
வாழும் கலை அமைப்பின், ஸஹஜ் சமாதி தியான பயிற்சி, உங்களின் முடிவில்லாத எண்ண ஓட்டங்களை அமைதியாக்குகிறது. அந்த ஓய்விலும், புத்துணர்விலும், உங்களுடைய மனது இலேசாவதை நீங்கள் உணர முடியும்.
உங்களுக்கு அருகில் உள்ள ஸஹஜ் சமாதி தியான பயிற்சி நிகழ்வை கண்டு பிடியுங்கள்