“நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது இரும்பினை உந்தித்தள்ளும் அர்னால்ட் ச்வர்சநேக்கேரின் ஆவணப் படத்தினைப் பார்த்திருக்கின்றேன். அவருடைய தசைகளின் அளவு, அத்தகைய பெரிய கைகளையும் தோள்களையும் அடைவது மனித முயற்சியில் முடியுமா என்று என்னை வியக்க வைத்திருக்கின்றன. அதற்குப் பின் வந்த ஆண்டுகள் செதுக்கிய உடற்கட்டினைப் பெற ஜிம்மில் உழைத்த பல மணி நேரங்களைக் கண்டிருக்கின்றன. வகுப்பறையிலிருந்து பணியறைக்கு மாறிய போது, அத்தகைய செதுக்கிய உடற்கட்டின் பொருளும் மாறியது. வயிற்றுச் சுற்றளவை கட்டுக்குள் வைத்திருக்கும் விருப்பம் மட்டுமே மிஞ்சியது. என் கைகள் எப்போதுமே அவ்வளவு வலுவாக இருந்ததில்லை. பளுவான எதையும் தூக்க வேண்டியிருந்தால் என்னால் முடியவும் இல்லை, வெட்கமே ஏற்பட்டது. அதிக வேலையின் காரணமாக ஜிம்மிற்குப் போகவும் விருப்பமில்லை.” என்கிறார் பெங்களூருவில் உள்ள அனீஷ்.
நம்மில் பலருக்கு வலுவான கைகள், தட்டையான வயிறு, செதுக்கிய உடற்கட்டு வேண்டும் என்னும் விருப்பம் உள்ளது. ஆனால் ஜிம்மில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யக் கூடக் கைகளில் பலம் இருப்பதில்லை. எவ்வாறு இலக்கை எட்டுவது? நல்லது, உங்கள் நேரத்தில் இருபது மணித்துளிகளை நீங்கள் ஒதுக்கினால் யோகா அதிசயங்களை நிகழ்த்தும்.
வலுவான கைகள் பெற சில யோகப் பயிற்சிகள்:

1. த்ரிகோனாசனா (Trikonasana) (Triangle pose)
இது கால்களை நீட்டி, மார்பு,இடுப்பு மற்றும் முதுகெலும்பினை பலப் படுத்துகின்றது.

2. பூர்வோத்தனாசனா (Poorvottanasana)
(Upward plank pose)
இது மணிக்கட்டுகள், கைகள், தோள்கள், ஆகியவற்றை வலுவாக்குகின்றது

3.. விபரீத சலபாசனா( Viparita Shalabhasana)(Superman pose)
மார்பு, தோள்கள், கைகள் ,பின் முதுகு ஆகியவற்றின் தசைகளை நீட்டி, வலுப்படுத்துகின்றது. மேலும் அடிவயிறு பின் முதுகு ஆகியவற்றைச் சீர் படுத்துகின்றது.

4. புஜங்காசனம்(பாம்பு தோற்ற நிலை)(Bhujangasana)(Cobra pose)
இந்தத் தோற்றம் தோள்கள் மற்றும் கழுத்துப் பகுதியைத் திறந்து, கைகள் மற்றும் தோள்களில் வலுவை ஏற்படுத்துகின்றது.

5. அதோ முக்த சுவநாசனம்
(நாய் கீழ்நோக்கிப் பார்க்கும் தோற்ற நிலை)(Adho Mukha Svanasana)(Downward facing dog pose)
இது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளித்து கைகள் மற்றும் தோள்கள் வலுவாக உதவுகின்றது.

6. சலபாசனம் (வெட்டுக் கிளி தோற்ற நிலை)(Shalabhasana) (Locust pose)
இந்தத் தொற்றைப் பங்கு முதுகுப் பகுதிக்கு நெகிழ்வுத் தன்மை அளித்து கைகள் மற்றும் தோள்களை வலுவாக்குகின்றது.
ஓர் பன்னாட்டு நிறுவனத்தின் மனித வள நிர்வாகியாகிய பல்லவி " நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக கீழ் முதுகுப் பகுதியில் வலியுடன் இருந்தேன். நான் பணியில் சேர்ந்த பிறகு சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிய வேண்டியிருந்தது. அதனால் கை மணிக்கட்டு நோயால் பாதிக்கப் பட்டு வலியால் அவதிப் பட்டேன். பல மருந்துகளை முயன்ற போதிலும் எதுவும் பயனளிக்க வில்லை. இறுதியாக என் நண்பர் ஒருவர் பரிந்துரையின் பேரில் யோகா செய்யத் துவங்கினேன். இரண்டே மாதங்களில் எனது முதுகு வலி மற்றும் மணிக்கட்டு வலி மறைந்து விட்டது. இன்னமும் நான் தினமும் யோகா பயிற்சி செய்கிறேன் , என் உடல் நிலை நன்கு மேம்பட்டு விட்டது" என்று கூறுகிறார்.
சீரான யோகப் பயிற்சியின் மூலம் உடல் நன்கு திடமடைந்து வலுவுடன் விளங்கும். யோகா ஓர் கலை. அதற்கு நேரமும் அர்ப்பணிப்பும் தேவை. ஆனால் எந்தப் புதிய செயலையும் போன்று யோகாவையும் ஓர் சான்றிதழ் பெற்ற ஆசிரியர் மூலம் கற்பது நல்லது. உங்களுக்கருகில் உள்ள மையத்தில் ஸ்ரீ ஸ்ரீ யோகாவைக் கற்று பழமையான இப்பயிற்சியின் எளிமையையும் பயனையும் அனுபவியுங்கள். யோகா பயிற்சி உடலுக்கும் மனதிற்கும் பல நற்பயன்களை அளிக்கிறது. ஆனால் இது மருத்துகளுக்கு மாற்று அல்ல. பயிற்சி பெற்ற ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியர்களின் மேற்பார்வையில் யோகாசங்களைக் கற்பது முக்கியம் ஆகும். ஏதேனும் மருத்துவ ரீதியான நிலைமை இருந்தால், ஓர் மருத்துவரைக் கலந்தாலோசித்துப் பின்னர் யோகாசங்களைக் கற்கவும். ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி பற்றிக் கண்டறியுங்கள் உங்களுக்கருகாமையிலுள்ள யோகாமையத்தை கண்டறியுங்கள். Do you need information on courses or share feedback? Write to us at info@artoflivingyoga.in