சில நேரங்களில் எதிர்மறையான எதையும், அது ஒரு புகாராக இருந்தாலும் அல்லது வாதமாக இருந்தாலும் அது உங்களுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. சில நேரங்களில், ஒரு ஆக்க பூர்வமான விமர்சனம் கூட விஷயங்களை நன்றாக மாற்றி விடும்.இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இது நீங்கள் பார்த்த திரைப்படத்தின் விளைவு அல்லது ஷாப்பிங் செய்த விஷயம் அல்ல. இது மனதை பொறுத்த விஷயம்.
நீங்கள் ஆயுர்வேத வழியைப் பின்பற்ற விரும்பினால் - அது நம்மில் ஒரு ஆற்றல் அதிகரிக்கும் வழிமுறை.
நம்மில் உள்ள ஆற்றல் அதிகமாகவும் நேர்மறையாகவும் இருந்தால் நாம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறோம். மற்றும் ஆற்றல் வீழ்ச்சியடைந்தால் அனுபவம் மோசமாகி றது.
நற்செய்தி: ஆற்றல்களின் விளையாட்டு தற்காலிகமானது, நிச்சயமாக, நாம் ஆற்றல் நிலை களை உயர்த்த முடியும். தியானம் இங்கே ஒரு முக்கியமான காரணியாகும். பெரும்பாலும், "நேர்மறை ஆற்றலுக்கான தியானம் உங்களுக்குத் தெரியுமா?" அல்லது, “எதிர்மறை சக்தியை நாம் எவ்வாறு அகற்றுவது?” என்னும் கேள்விகள் எழுகின்றன. நமது தியான பயிற்சியில் நாம் எவ்வளவு சீராக இருக்கிறோமோ, அவ்வளவு நேர்மறையான ஆற்றலையும் பெறுகிறோம்.
தியானம் எவ்வாறு செயல்படுகிறது?
தியானம் பல நிலைகளில் செயல்படுகிறது:
- தியானம் உடலைத் தளர்த்துகிறது : உடலியல் மற்றும் உணர்ச்சி மட்டங்களில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. தியானத்தின் போது வளர்சிதை மாற்றம் குறைகிறது, உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு மிகவும் தேவையான ஓய்வு கிடைக்கிறது . இது வலிமையை எடுத்து வருகிறது. மற்றும் உடலைப் புதுப்பிக்கிறது.
- மனதை அமைதியாகவும் ஆற்றலுடனும் உணர வைக்கிறது: தியானம் என்பது மனதை சுத்தம் செய்வது ஆகும். மன சுகாதாரம் போன்றது. மனதில் உள்ள பதிவுகள் அழிக்கப் பட்டு, தேவையற்ற உணர்ச்சிகரமான நினைவுபதிவுகள் விடுவிக்கப்படுகின்றன.
- மெய்யுணர்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது: தியானம் அதிக விழிப்புணர்வை வளர்க்கிறது. இது மெய்யுணர்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது, மனிதர் என்னும் வகையில் நம்முடைய தொடர்பைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வைக்கிறது. நாம் அனைவரும் ஒன்று என்ற மிக உயர்ந்த யதார்த்தத்தை இது உங்களுக்குத் தெரியப் படுத்துகிறது.
ஆரோக்கியமான உடலும் மகிழ்ச்சியான மனமும் நேர்மறை ஆற்றலின் அளவை அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு நாளும் தியானம் செய்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் தியானங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்
ஆயுர்வேத வழி
ஆற்றல் அளவை அதிகரிப்பதன் மூலம், தியானம் ஒரு நபரின் சத்வ குண அளவை அதிகரிக் கிறது.
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு நபரிடமும் மூன்று குணங்கள் உள்ளன:
- ரஜோ குணம் : இது உடலும் மனமும் செயல்படுவதற்கு காரணமான குணம் . ஒரு குறிப்பிட்ட அளவிலான ரஜோ குணம் இல்லாமல் நாம் 'செயல்பட' முடியாது.
- தமோ குணம்: உடலிலும் மனதிலும் ஓய்வுக்கு இதுவே பொறுப்பு. ஒரு குறிப்பிட்ட அளவிலான தமோ குணம் இல்லாமல், ஒருவர் 'தூங்க முடியாது'. இருப்பினும், தமோ குணம் சமநிலையில் இல்லாதபோது, மாயை, தவறான புரிதல், மந்தமான தன்மை போன்றவை ஏற்படுகின்றன.
- சத்வ குணம் : தெளிவு, ஞானம் மற்றும் நேர்மையான செயல்களுக்கு காரணமானது சத்வ குணம் . சத்வா நம் சூழலில், அல்லது உடலில் ஆதிக்கம் செலுத்தும் போது, பிரகாசம் , சந்தோஷம், இனிமை, மகிழ்ச்சி, எச்சரிக்கை, தெளிவான உணர்வு ஆகியவை விழிப்புடன் தெளிவாக இருக்கும்.
ஆற்றல்கள் நமக்கு ஏன் முக்கியமானது?
நேர்மறை ஆற்றல் | நேர்மறை ஆற்றல் இன்மை |
|
|
உங்கள் சத்வ குணத்தை மேம்படுத்தவும்
- சரியாகச் சாப்பிடுங்கள்: நாம் உட்கொள்ளும் உணவு நம்மில் உள்ள மூன்று குணங்கள் மற்றும் அவற்றின் ஆதிக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, பச்சை காய்கறிகள், புதிய பழங்கள் போன்ற உணவுகள் இலகுவானவை, எளிதில் ஜீரணிக்கக்கூடியவை, எனவே அவை சாத்விக உணவு ஆகும். சர்க்கரை போன்ற இனிப்புகள் , ஊறுகாய் போன்ற புளிப்பு மற்றும் காரமான பொருட்கள் கொண்ட உணவுகள் ரஜசிக் குணத்தைத் தூண்டுகின்றன. அசைவ உணவு, வறுத்த உணவு மற்றும் உறைந்த பொருட்கள் தமசிக் தன்மையை உருவாக்குகின்றன.
- நன்றாக சுவாசிக்கவும்: நமது ஊட்டச்சத்தில் 90 சதவிகிதம் ஆக்ஸிஜனிலிருந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. உணவு மற்றும் நீர் மீதமுள்ள 10 சதவிகிதம் ஆகும் பிராணயாமம் நமது நுரையீரல் திறனை மேம்படுத்துகின்றது சத்வ அளவை அதிகரிக்கின்றது . ஆர்ட் ஆஃப் லிவிங் ஆனந்தப் பயிற்சித் திட்டத்தில் கற்பிக்கப்படும் சக்திவாய்ந்த சுவாச நுட்பமான சுதர்சனக் கிரியா© உடல், மூச்சு மற்றும் மனதை ஒத்திசைக்கிறது.
- தியானம்: உங்கள் தியானம் ஆழமாகவும் நேர்மறையாகவும் இருப்பதால் சத்வ குணம் அதிகரிக்கிறது. தியானம் என்பது எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள பயிற்சி. உங்கள் தியானத்தை எவ்வாறு ஆழப்படுத்துவது என்பதை இங்கே மேலும் அறிந்து கொள்ளுங்கள்
எனவே அடுத்த முறை, நீங்கள் சோர்வாக உணரும்போது சற்று தியானம் செய்யுங்கள். ஒரு சிறிய தியான அமர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நீங்கள் தியானத்தை ஒரு வழக்க மான பயிற்சியாக மாற்றும்போது, பயிற்சியைச் செய்வதற்கான காரணம் மறைந்து போகத் தொடங்குகிறது. ‘நேர்மறை ஆற்றலுக்கான தியானம்’ அல்லது ‘எதிர்மறையைத் தவிர்ப் பதற்கான தியானம்’ என்பனவெல்லாம் வெறுமனே ‘தியானமாக மாறும், ஏனென்றால் அதனை விரும்புவீர்கள் .’ இதுவே மிகச் சிறந்த காரணம்.
குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளால் ஈர்க்கப்பட்டு தி ஆர்ட் ஆஃப் லிவிங் ஆசிரியர் டாக்டர் பிரேமா சேஷாத்ரியின் உள்ளீடுகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டது.