யோகாவின் மூலம் கொழுப்பினைக் கட்டுப் படுத்துங்கள் (Yoga for cholesterol in tamil)

கொழுப்பு என்பது ரத்த ஓட்டத்தில் காணப்படும் ஒரு லிப்பிட் , இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. இந்த பிரபலமான நம்பிக்கைக்கு எதிராக கொழுப்பு உடல் செயல்பாட்டிற்கு மற்றும் பராமரிப்புக்கு மிக அவசியமான ஒன்றும் ஆகும். கொழுப்பு, தோள் சவ்வுகளை மற்றும் சவ்வு திரவங்களை வளர்ப்பதற்குத் தேவையானதாகும். தவிர வைட்டமின் டி மற்றும் புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் தொகுப்பிற்கும் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றது.

உடலுக்கு மிக நன்மை தரக் கூடியதாயினும், அதிக அளவு கொழுப்பு மிகத் தீங்கு விளைவிக்கக் கூடியது.ரத்த ஓட்டத்தில் அதிக அளவு கொழுப்பு ரத்தக் குழாய்களை அடைக்கக் கூடும், பின்னர் அது இதய சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.இந்த அளவினை சரியாக வைத்துக் கொள்ள, சரியான உணவுப் பழக்கம் சீரான உடற்பயிற்சி உள்ளிட்ட ஓர் ஆரோக்கிய வாழ்வு முறையினை கடைப் பிடிக்க வேண்டும்.

யோகா இயற்கையாகவே எந்தப் பக்கவிளைவுமின்றி,கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் இவற்றின் மூலம் உடலைசரியாக வைத்து, மனதை அமைதிப் படுத்தும் ஓர் பழமையான கலை யோகாவாகும்.இந்த யோகா தோற்ற நிலைகள் உங்கள் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தும்.

இந்தப் பிராணயாமப் பயிற்சி, வளர்சிதை மாற்ற அளவினை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கின்றது. மேலும் வயிற்றுப் பகுதில்யுள்ள உறுப்புக்களை ஊக்குவித்து, ஜீரண சக்தியினை அதிகப் படுத்துகின்றது.

சக்ராசனா : (சக்கரத் தோற்ற நிலை)

 

இந்தத் தோற்ற நிலை, வயிற்றுப் பகுதி உறுப்புக்களுக்கு மசாஜ் அளித்து மலச் சிக்கலை நீக்குகின்றது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதிகக் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றது.

 

இந்தத் தோற்ற நிலை வயிற்றுப் பகுதியினை நீட்டுவித்து, வயிற்றுப் பகுதி உறுப்புக்களை ஊக்குவிகின்றது. மேலும் இது மலச் சிக்கலையும் நீக்குகின்றது.

இந்தத் தோற்ற நிலை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை ஊக்குவிக்கின்றது. அடிவயிற்றுப் பகுதியிலுள்ள அதிகக் கொழுப்பினை அகற்றுகின்றது.

 

 

இது அடிவயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு மசாஜ் அளித்து, கல்லீரலை ஊக்குவித்து, ஜீரணக் கோளாறுகளைக் கடக்க உதவுகிறது.

 

 

கொழுப்பை அதன் வேரிலேயே கட்டுப்படுத்துங்கள்:

நாம் உண்ணும் உணவுகளைளிருந்தே கொழுப்பு உருவாகின்றது. எனவே அதன் வேர்களைக் முக்கியமானது. குப்பையுணவு, ஆழ்ந்து பொரித்த உணவு, மாமிச உணவு ஆகியவை கொழுப்பினை அதிகரிக்கும் உணவு வகைகளாகும்.இந்த உணவு வகைகளை உண்பது மந்தம் மனநிலை மாற்றங்கள் அதிக உடல் பருமன் ஆகியவற்றை ஏற்படுத்துன்றன.

ஆயுர்வேதம் ஓர் பழமையான இயற்க்கை மற்றும் முழுமையான மருந்து. அது சமச்சீர் உணவு, மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் உடல் நலனை மேம்படுத்துகிறது. மேலும் ஆயுர்வேத சமையல் முறை உணவு விரும்பிகளுக்கு நல்ல சத்வ உணவை ஆரோக்கிய முறையில் நன்றாக உண்ண உதவுகின்றது.

ஆரோக்கியக் குறிப்புகள்:

  • இனிப்பு, புளிப்பு மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்
  • குப்பையுணவு மற்றும் காப்பி தேயிலை நச்சினைத் தவிர்த்து விடுங்கள்
  • மதுபானம் மற்றும் புகையினையை விலக்கி விடுங்கள்
  • நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • பருப்பு வகைகள், ஓட்ஸ், பழங்கள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை உண்ணுங்கள்
  • நிறையத் தண்ணீர் குடியுங்கள்
  • ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்

இறுக்கமான கயிற்றில் நடப்பது போன்றது:

உங்களுக்குக் கொழுப்பு அதிக அளவு என்று கண்டறியப் பட்டால், அபாய அளவிலிருந்து வெளியேறுவது கடினம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறிய அளவு வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட இதைக் கட்டுப்படுத்த உதவலாம். ஆயினும் இந்தப் பிர்ச்சினையைக் கடந்து வர, யோகா பயிற்சியை ஒழுங்காகச் செய்து வர வேண்டும். மற்றப் பயிற்சிகளைப் போன்றே யோகப் பயிற்சியின் பலனும் வெளியே தெரிய சற்றுக் காலம் ஆகும். குடுமப்த்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் பேசி, அவர்கள் ஆதரவினைப் பெறுவது ஊக்கம் தரும்.முக்கியமாக வாழ்வில் நேர்மறையாகவே இருங்கள் சந்தோஷமான மனநிலை எதையும் எளிதாக அடைய உதவும்.

யோகாவா மருந்துகளா?

கொழுப்பின் அளவை சீரப்டுத்த யோகா ஒரு மாற்று அணுகுமுறை, அது மருந்துக்குப் பதிலாக என்று ஏற்றுக் கொள்ளப் படக் கூடாது. எந்த மருந்தையும் நிறுத்துவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை அணுகி, கருத்துக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.ஓர் உங்கள் தேவைகள் மற்றும் நிலைமைக்கேற்ப ஒரு யோகப் பயிற்சித் திட்டத்தை ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியர்,உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பார். ஸ்ரீ ஸ்ரீ யோகாவின் பயன்களை அறியுங்கள்.

 

Yoga practice helps develop the body and mind bringing a lot of health benefits yet is not a substitute for medicine. It is important to learn and practice yoga postures under the supervision of a trained Sri Sri Yoga teacher. In case of any medical condition, practice yoga postures after consulting a doctor and a Sri Sri Yoga teacher. Find a Sri Sri Yoga program at an Art of Living Center near you. Do you need information on programs or share feedback? Write to us at info@artoflivingyoga.org