

நான் ஏன் சைவ உணவு உண்பவராக ஆக வேண்டும்?
சைவ உணவு உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். சைவ உணவு எடுத்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் பூமியின் இயற்கை வளத்தின் மீது பேரன்பு கொண்டு,வழக்கத்திற்கு மாறான மற்றும் அசைவத்தை மறுக்கும் அறத்தின் படி, உணவுண்பவர்கள் என்றும், தவறாக கருதப் படுகின்றனர்.பல சைவ உணவு உணவு உண்பவர்கள் விலங்குகளின் மீது அன்பு கொண்டிருந்தாலும், சைவ உணவுப் பழக்கம், விலங்குகளின் உரிமைகளுக்கு அப்பாற்பட்டு சென்றுள்ளது என்பதைப் பிறரும் காண வேண்டும். சமச்சீர் சைவ உணவு பழக்கத்தைப் பின்பற்றுவது, தற்காலத்தில், ஏற்படும் பலவிதமான பெரிய நோய்களைத் தவிர்க்கும் விதமாக உறுதியளிக்கிறது . நீங்கள் சைவ உணவைப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால், கீழ்கண்ட விஷயங்கள் உங்களுக்கு பல செய்திகளை அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

ஊட்டச்சத்து ஆர்வலர்களின் விருப்பம்
ஒரு சைவ உணவில் அதாவது புதிய பழங்கள், கைகள், தானியங்கள், கோட்டைகள், பால், மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சோயா பொருட்கள் ஆகியவற்றில் பெரும்பான்மையான ஊட்டச் சத்து நன்மைகள் உள்ளன. சமச்சீர் சைவ உணவு நலன்மிக்க கொழுப்புகள், கர்போஹைட்ரட்டுகள், மிகுந்த நார்ச்சத்து, தேவையான விட்டமின்கள், மக்னேசியம் பாஸ்பரஸ் கால்சியம் போன்ற தாதுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, உணவிற்கு ஓட்டம் சேர்க்கின்றது. பதப்படுத்தப் பட்ட இறைச்சி இலுல்லதை விட சமச்சீர் சைவ உணவில் அனைத்து தேவையான சத்துக்களும் தரமும் அளவும் நிறைந்தவை.

ஆரோக்கியமான இதயம்- சந்தோஷமான இதயம் !
சைவ உணவு இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்தவையாகும். தாவரச் சத்துக்கள் நிறைந்தவை.அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் 24 % குறைந்த இதய நோய் அபாயம் உள்ளவர்கள். சர்க்கரை நோயுடன் உள்ளவர்கள் சிவப்பு இறைச்சி உண்பவரானால், 50 % அதிக இதய நோய் அபாயம் உள்ளவர்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.குறைந்த கொழுப்புச் சத்துள்ள சைவ உணவு உண்பவர்கள் கரோனரி தமனி அடைப்பு நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க அல்லது முற்றிலும் ஏற்படாமல் தடுக்க ஒரே வழியாகும்.இதய நோயாளிகள் சைவ உணவிற்கு மாறி, அத்தகைய அபாய கரோனரி இதய நிலைகளிலிருந்து குணமுற்றிருப்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

புற்றுநோய் எச்சரிக்கை
சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி உண்பவர்களை விட, 40 % புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கின்றனர். மாட்டிறைச்சி மற்றும் பன்றியிறைச்சி கலந்த ஹாட் டாக் ஒரு விள்ளலில் ஏழு புற்றுநோய் உருவாக்கும் பூச்சிக்கொல்லிகளும், கால் பவுண்ட் பர்கரில் மூன்று புற்று நோய் உருவாக்கும் பொருட்களும் உள்ளன.மனித உடலில் அணுக்கதிர் வீச்சு மாசு ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் பன்றியிறைச்சியிலும் பால் பொருட்களிலுமே உள்ளன.பல ஆய்வுகளில் இறைச்சி உணவு மார்பக, குடல், புரோஸ்டேட், கணைய மற்றும் இரப்பைப் புற்று நோய்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. ஹீடெல்பெர்க் நகரிலுள்ள ஜெர்மன் புற்றுநோய் ஆய்வு மையத்தில் செய்யப் பட்டுள்ள ஆய்வுகள், அசைவ உணவு உண்பவருடையதை விட சைவ உணவு உண்ணும் ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு, கட்டி உயிரணுக்களைக் கொல்லும் திறன் வாய்ந்தது என்று பரிந்துரைக்கின்றன.

வலுவாக நீண்ட காலம் வாழுங்கள்
சைவ உணவு முறைக்கு மாறி, இன்னுமொரு ஆறு முதல் பதின்மூன்று ஆண்டுகள் அதிகமாக வாழுங்கள்.அசைவம் உண்பவர்கள் குறைந்த வாழ்நாளும் நோய்க்கு இறையாதலும் நச்சுக்கள் உடலில் அதிகம் கொண்டவராகவும் இருக்கின்றனர். மேலும் முதிர்ந்த காலத்தில் அதிக இயலாமையுடனும் இருக்கின்றனர்.இறைச்சியுணவு உங்கள் நோஎதிர்ப்பினைக் குறைத்து, உங்கள் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் அசைவம் உண்பவர்கள் இளம்வயதிலேயே அறிவாற்றல் மற்றும் பாலியல் பிரழ்ச்சியினை அனுபவிக்கின்றனர்.

குறைபாடற்ற வயிற்றுடன் உள்ளும் புறமும் பிரகாசமாக ஒளிருங்கள் !
இறைச்சி மற்றும் எடை இவற்றுக்கிடையேயான உறவு கலோரிகள் கணக்கினைத் தாண்டிச் செல்கின்றது. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலிருந்து ஓர் ஆய்வு ஒரு நாளில் 250 கிராம் சிவப்பு இறைச்சி, கோழி, அல்லது பதப்படுத்தப் பட்ட இறைச்சி உண்பவர்கள் , அதே அளவு கலோரிகள் கொண்ட சைவ உணவு உண்பவரை விட ஐந்து ஆண்டுகளில் அதிக எடை கூடி விடுவார்கள் என்று கூறுகின்றது.அசைவர்களின் உடல் நிறைக் குறியீட்டு எண் சைவ உணவுன்பவர்களை விட அதிகம்.என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் சைவ உணவில் நார்ச்சத்து அதிகம் கொழுப்பு குறைவு. சைவ உணவு உண்பவர்கள் அன்டி ஆகிசிடன்ட்டுகள் (Anti oxidants நிறைந்த அதிக அளவு பழங்களும் காய்களும் முழு தானியங்களும் உள்ள உணவினை உண்கின்றனர். இது சுருக்கங்கள் புள்ளிகள் யாவற்றை உடலில் ஏற்படுத்தும் ராடிக்கல் களை ( free radicals) சமப்படுத்துகின்றது. அதனால், ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமப் புள்ளிகளை அகற்றி ஆரோக்கியமான பிரகாசம் ஏற்படுகின்றது.

விலங்கினங்களை விலக்கி , பசுமைக்குச் செல்லுங்கள்
ஒவ்வொரு ஆண்டும் பத்து பில்லியன் விலங்குகள் மனித உணவுக்காகக் கொல்லப் படுகின்றன. முன்னையக் காலத்தைப் போன்றல்லாது, இப்போது பல விலங்குகள் தொழிற்ச்சாலையில் அவைகள் இங்கங்கு அசையமுடியாதபடி கூண்டுகளில் வளர்க்கப் படுகின்றன. அவைகளுக்கு பூச்சிக் கொல்லிகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லிகள் நிறைந்த உணவு அளிக்கப் படுகின்றது.இறைச்சியைத் தவிர்த்து தாவர உணவு உண்பதால், 2.5 பவுண்டுகள் கரியமில வாயு வெளிப்படுதல் குறைவும், 133 காலன்கள் தண்ணீரும், 24 சதுர அடி நிலமும் சேமிக்கப் படுகின்றன என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. எனவே மூன்று வேளை உணவில் கோரிந்த அளவு நீர் வரும் குழாயில் சேமிப்பதை விட அதிகத் தண்ணீரைச் சேமிக்கின்றீர்கள். சைவ உணவு நமது கருணை உணர்வை விழித்தெழச் செய்து நம்மை ஒரு அன்பான மென்மையான -விலங்குகளை பாதுகாக்கும் விருப்பத் தேர்வையுடைய - சமுதாயத்தை நோக்கி நம்மை வழி நடத்துகின்றது.